சிறகடிக்க ஆசை: மீனா பற்றி அண்ணாமலை கேட்ட கேள்வி.. முத்துவுக்காக பேசிய விஜயா.. இப்படி ஆகிடுச்சு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஜூன் 11ம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் மீனா காணாமல் போய் இருக்கும் நிலையில் முத்து மீது சத்யா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். அதுபோல முத்துவுக்காக விஜயா சப்போர்ட் செய்கிறார் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணி சமைத்த சாப்பாட்டை எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது மனோஜ் தோசைக்கு இந்த ரசம் கூட சூப்பரா தான் இருக்கு என்று சொல்ல, ரோகிணி அது சாம்பார் என்று சொல்ல மனோஜ் பல்பு வாங்குகிறார். பிறகு அந்த தேங்காய் சட்னி பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல அது புதினா சட்னி என்று சொல்கிறார்.

அதற்கு ரவி புதினா சட்னி வெள்ளையா இருக்கு? என்று கேட்க, அதற்கு ரோகிணி புதினா கொஞ்சமாதான் இருந்தது அதனால மைதா மாவு சேர்த்து அரைச்சேன் என்று சொல்ல, அப்போ அது புதினா சட்னி இல்லை மைதா சட்னி என்று ரவி கலாய்க்கிறார். மனோஜ் எப்படி இருந்தா என்னடா நல்லா இருக்குல்ல சாப்பிடு என்று சொல்கிறார்.
அப்போது அண்ணாமலை சாப்பிடாமல் நடந்து கொண்டிருப்பதை பார்த்த விஜயா இனி மீனா வந்து சமைக்கப் போறாளா? வந்து சாப்பிடுங்க என்று சொல்ல, சமைக்கிறதுக்கு மட்டும்தான் மீனா வேணுமா? இவ்வளவு நேரமா இந்த வீட்டோட மருமக வராம இருக்கா அதை பற்றி கொஞ்சமாவது கவலை இருக்கா? என்று கோபமாக கேட்க, அதற்கு விஜயா அவ ஊரு சுத்த போயிருக்கா, எதுக்கு நான் அதை பற்றி கவலைப்பட வேண்டும் என்று கேட்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு முத்து வர மீனா பற்றி ஏதாவது தெரிஞ்சிச்சா என்று அண்ணாமலை கேட்க, இல்லை எதுவும் தெரியல மீனா எங்கேயாவது பூ கொடுக்க போயிருப்பா அதனால லேட்டாயிருக்கும் என்று முத்து சொல்ல ரோகிணி காலையிலேயே மீனா ரொம்ப கோபமா இருந்தாங்க. முத்து கூட சண்டை போட்டுட்டு இருந்தாங்க என்று சொல்ல அண்ணாமலை என்ன ஆச்சு என்று கேட்க காலையில் நடந்ததை முத்து சொன்னதும் நீ எதையும் யோசித்து பேச மாட்டியா?

அந்த பொண்ணுக்கு எவ்வளவு நாளைக்கு தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருப்பா என்று கோபப்படுகிறார். அதற்கு விஜயா அவன் மனசுல இருக்குறதை தான் சொன்னான் என்று சொல்ல, அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். பிறகு சீதா போன் செய்து அந்த சுதாகர் போன வாரம் தான் ஊருக்குள்ள வந்திருக்கிறதா சொல்றாங்க.
அவன் அக்காவை ஏதாச்சும் பண்ணி இருப்பானோனு பயமாயிருக்கு என்று சொல்ல, முத்து நான் போய் பார்க்கிறேன் என்று போனை வைத்து விட்டு கிளம்புகிறார். பிறகு மனோஜ் விஜயாவை ரூமுக்குள் கூட்டிட்டு போய் அந்த பொண்ணு ஏதாவது லெட்டர் எழுதி வைத்துவிட்டு போய் இருக்கானு பார்த்தியா? என் மாமியார் கொடுமை தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு போய் இருந்தா போலீஸ் உன்னை தான் கைது பண்ணும் என்று சொல்ல விஜயா பயப்படுகிறார்.
மறுபக்கத்தில் சுதாகர் வீட்டுக்கு வந்த முத்து அவனுடைய அடியாள்களை அடித்து விட்டு உள்ளே செல்ல, அங்கு சுதாகர் ஆக்சிடென்ட் ஆகி உடம்பு முழுக்க கட்டுப்போட்டு படுத்து இருப்பதை பார்த்து அப்போ மீனாவை சுதாகர் கடத்தல என்பதை புரிந்து கொள்கிறார். மறுபக்கம் சிட்டி இடம் சத்யா மீனாவை காணவில்லை என்பதை சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு சிட்டி எனக்கு என்னவோ முத்து மீது தான் சந்தேகமா இருக்கு.

கோபத்துல நிறைய புருஷன் பொண்டாட்டி அடிச்சு கொன்னுருதாங்க. அதனால நீ போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடு என்று சத்யாவை ஏற்றி விடுகிறார். பிறகு சத்யா போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி வர முத்து மீனாவை தெருவில் தேடிக் கொண்டிருக்கும்போது அண்ணாமலை போன் செய்து நீ எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துடு என்று சொல்கிறார்.

முத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி வருகிறார். அந்த நேரத்தில் சத்யா போலீசில் காலையில் என்னுடைய அக்கா காணாமல் போயிட்டாங்க, அவங்க புருஷன் கூட தான் சண்டை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு முத்து வருவதை பார்த்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications