சிறகடிக்க ஆசை ரோகிணி மாமா 40 சீரியல் டைரக்ட் பண்ணி இருக்கிறாரா? இனி முக்கிய கேரக்டரில் வருகிறாராம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் மலேசியா மாமா கேரக்டரில் நடிகர் ஜெயமணி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி இருந்தார். அவர் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா மற்றும் சின்னத்திரை வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது இருக்கிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இந்த சீரியல்தான் சில மாதங்களாகவே இருந்து வருகிறது. அதனாலையே இந்த சீரியலில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் ரோகிணியின் மலேசியா மாமாவாக நடிப்பதற்காக கறி கடைக்காரர் கேரக்டரில் என்ட்ரி கொடுத்த ஜெயமணிக்கும் அதிகமான ரசிகர்கள் உருவாக்கி விட்டனர். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான "திருமதி செல்வம்" சீரியலில் பூங்காவனம் கேரக்டரில் பலருடைய மனதையும் கவர்ந்தவர் தான்.
இந்த நிலையில் ஜெயமணி சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கையில் நான் ஆரம்பத்தில் திருமதி செல்வம் சீரியல் நடித்த பிறகு என்னை எல்லோருமே பூங்காவனம் என்று கூப்பிட்டனர். அந்த பெயரிலே ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டேன். ஆனால் அதற்கு பிறகு சிறகடிக்க ஆசை சீரியலில் நான் நடிக்க வந்த போது மலேசியா மாமா கேரக்டர் மக்கள் பிடித்துக் கொள்வார்கள் என்று நினைத்தேன்.

அதுபோலவே அவர்கள் அதையே இப்போது எனக்கு அடையாளப்படுத்தி விட்டார்கள். நான் சிறகடிக்க ஆசை சீரியலில் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை ஒரே ஷாட்டில் கொடுத்து விடுவேன். அதனால் எல்லோரும் என்னை பாராட்டுகிறார்கள் என்று பெருமையாக கூறியிருக்கிறார்.. அதோடு தன்னுடைய மாமா ஒரு பாடகர் அவர் பாடுவதை கேட்டு தான் எனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
குழந்தையை நட்சத்திரமாக பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். நான் என்னுடைய மனதில் எம்ஜிஆர், சிவாஜி ஆக நினைத்துக் கொள்வேன். அதனாலேயே அவர்களைப் போன்று பல இடங்களில் நடித்து விடுவேன்... கேரக்டர் இதுதான் என்று சொல்லிவிட்டால் போதும் என்னுடைய நடிப்பு இயல்பாக வந்துவிடும். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக என்னால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனாலும் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் 40 சீரியல்கள் டைரக்ட் செய்து இருக்கிறேன்.ஒரு சில திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்திருக்கிறேன் தற்போது கூட ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்து வரும் "சொர்க்கவாசல்" என்ற திரைப்படத்தில் நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படம் வெளிவந்தால் எனக்கு இன்னும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல ஜெயமணியின் மனைவி மாலதி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறாராம். அதுபோல இவர்களின் மகள் டீச்சராக வேலை பார்த்து வருகிறாராம். வரும் ஜூன் ஒன்றாம் தேதி ஜெயமணி மற்றும் மாலதி தம்பதியின் மகளுக்கு திருமணம் நடக்க இருக்கிறதாம். அந்த தகவலையும் அந்த பேட்டியில் சொல்ல ரசிகர்கள் நடிகர் ஜெயமணி மேலும் அதிகமான திரைப்படங்களிலும் சீரியலிலும் நடிக்க வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அதோடு அவருடைய மகளின் திருமணத்திற்கும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications