சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மார்ச் 25ஆம் தேதிக்கான எபிசோடில் முத்துவும் மீனாவும் ஏமாற்றிய டுபாக்கூர் சாமியாரை கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். இதனால் விஜயா திமிருக்கு முத்து மீனாவும் சரியான பதிலடி கொடுத்திருக்கின்றனர். அதே நேரத்தில் சாமியார் பெண் சொன்ன விஷயத்தை கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

சிறகடிக்க ஆசை சீரியல் கதை
சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி செய்த சூழ்ச்சியால் ஒரு டுபாக்கூர் பெண் சாமியார் மீனாவை விஜயா வீட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று சொல்லி இருந்தார். அதை உண்மை என்று நம்பி விஜயாவும் பிரச்சனை மேல் பிரச்சனை செய்ய இதனால் மீனாவும் வீட்டை விட்டு போய் இருக்கிறார். இந்த நிலையில் அந்த டுபாக்கூர் பேன் சொர்ணம் சீதாவிடம் தாலியை திருடி மீனாவிடம் சிக்கி இருக்கிறார்.
அப்போது கூட அந்த சொர்ணத்தை பற்றிய உண்மைகளை முத்துவும் மீனாவும் சொன்னாலும் விஜயா நம்பவில்லை. அந்த சாமியார் ரொம்ப சக்தி வாய்ந்தவங்க. அவங்கள பற்றி நீங்க உண்மைகளை நிரூபிச்சா நானே மீனாவை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள்ள கூப்பிடுறேன் என்று சபதம் வேறு விட்டிருக்கிறார். இப்போது அவருக்கு அதுவே பிரச்சனையாக மாறி இருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
அதாவது (Siragadikka Aasai Serial March 25, 2026 episode) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அந்தப் பெண் டுபாக்கூர் சாமியாரை மாறு வேஷத்தில் பிடிக்க போன முத்துவும் மீனாவும் போலீஸிடம் சிக்கி இருக்கின்றனர். அப்போது இன்ஸ்பெக்டர் அண்ணாமலையை ஸ்டேஷனுக்கு வர சொல்லி இருக்கிறார். அதனால் அண்ணாமலையும் ஸ்டேஷனுக்கு போயிருக்கிறார். அவர் முத்து மீனாவையும் பார்த்ததும் இவங்க திருட்டு வேலையெல்லாம் செய்றவங்க கிடையாது, என்னுடைய பையன் டிராவல்ஸ் வைத்திருக்கிறான். இப்போ மூணு வண்டி சொந்தமாக வைத்திருக்கிறான்.
இது என்னுடைய மருமகள் சொந்தமா பூக்கடை நடத்திக்கிட்டு இருக்கா. நிறைய பேருக்கு பூ டெக்கரேஷன் எல்லாம் செஞ்சு கொடுத்துட்டு இருக்கிறா. இப்போ இவளோட தங்கச்சி தாலியை ஒரு பெண் திருடிவிட்டா.. அந்த பொண்ணை கண்டு பிடிப்பதற்காக தான் இவங்க இப்படி மாறுவேடத்தில் போயிருக்கிறங்க என்று அண்ணாமலை எடுத்துச் சொன்னதும் இன்ஸ்பெக்டர் அவர்களை எச்சரித்து இதுபோல இனி எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லி வீட்டுக்கு அனுப்புகிறார்.
வெளியே வந்ததும் எப்படியாவது அந்த சொர்ணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்துவும் மீனாவும் ப்ளான் போடுகின்றனர். இதனால் அண்ணாமலையை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் அந்த திருட்டு நகை விற்கும் இடத்திற்கே போகிறார்கள். அங்கு ஏற்கனவே சொர்ணம் வருவதாக சொல்லி இருந்ததால் அவரை அங்கு வைத்து மடக்கிப் பிடிக்க பிளான் போடுகிறார்கள்.
அந்த நேரத்தில் போலீஸ் அங்கு வந்த விஷயம் தெரியாமல் சொர்ணமும் இரண்டு பேரை கூட்டிக்கொண்டு அதே இடத்திற்கு வருகிறார். அப்போது மீனா சாமி வந்தது போல கையில் சூலாயுதத்துடன் அமர்ந்து சொரணத்தை மிரட்டுகிறார். அதனால் பதறி போன சொர்ணத்தின் கையில் இருக்கும் நகை பையை முத்து வாங்கி பார்க்கிறார்.
அதில் சீதாவின் தாலியும் இருக்கிறது. அப்போது அவரை முத்து போட்டு அடிக்க அவர் நான் எல்லா உண்மைகளையும் சொல்லிடுவேன் என்று சொல்கிறார். உடனே முத்துவும் மீனாவும் விஜயா வீட்டிற்கு சொர்ணத்தை கூட்டிக்கொண்டு வருகின்றனர். அதற்கு முன்பு மீனாவுடைய அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாருக்கும் முத்து போன் பண்ணி அவர்களையும் வீட்டிற்கு வர வைத்து இருக்கிறார்.
விஜயாவுக்கு அதிர்ச்சி
இவங்க எல்லாரையும் பார்த்ததும் விஜயா எதுக்காக இவங்க வீட்டுக்கு வந்தாங்க என்று வழக்கம்போல திமிராக பேசிக்கொண்டு இருக்க, அந்த நேரத்தில் முத்து மீனா சொர்ணத்துடன் வருகிறார். சொர்ணத்தை பார்த்ததும் விஜயா சாமி என்ன நீங்க வந்து இருக்கீங்க? என்று கேட்க அதற்கு சொர்ணம் நான் ஒரு போலி சாமியார் என்ற உண்மைகளை சொல்கிறார்.
டுபாக்கூர் சாமியார் சொன்ன விஷயம்
மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்காக தான் இப்படி பொய் சொன்னேன் என்று சொன்னதும் குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு உன்னை இப்படி பொய் சொல்ல சொல்லி அனுப்பி வச்சது யாரு என்று கேட்டதும், அவர் ரோகிணி பேரை சொல்லி விடுகிறார். இதுவும் சிந்தாமணி பிளானாக தான் இருக்கும். சிந்தாமணி பெயரை சொல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் இப்போது ரோகிணியை மாட்டிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே ரோகிணி மீது கொலவெறியில் இருக்கும் விஜயா இப்போ மேலும் கோபத்தில் இருக்கிறார். இதனால் நாளை எபிசோட்டில் சரியான சம்பவம் இருக்கப் போகிறது என்று தெரிகிறது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஏமாந்து நிற்கும் சீரியல் நடிகை.. கதறி அழுது வெளியிட்ட வீடியோ! வெளிவந்த ரகசியங்கள் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications