முத்துவோடு முற்றிய வாக்குவாதம்.. வீட்டை விட்டு போன மீனா.. சத்யா சொன்ன வார்த்தை.. அதிர்ச்சியில் முத்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். முத்து தன்னுடைய நண்பரிடம் திருமணம் குறித்து பேசியதை கேட்ட மீனா கோபமாக வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கிறார்.
சிறக்கடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் முழுக்க ரோகிணி கிரிஷ் விஷயத்தில் வீட்டில் மாட்டுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வழக்கம் போல கடைசியில் ரோகிணி மாட்டாமல் தப்பித்து விட்டார். இந்த நிலையில் அடுத்த வாரம் என்ன பிரச்சனை வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் இப்போது முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை மீண்டும் வெடித்திருக்கிறது.

பொதுவாக சீரியல்களில் கதாநாயகன், கதாநாயகிக்கு தான் பிரச்சனை மேலே பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் தான் வில்லன்களே ஜெயித்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் சீரியல்களிலும் வில்லன்கள் தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்லதே நினைத்து நல்லதையே செய்யும் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிக்கு தான் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் அந்த பிரச்சனையை அவர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் கதையாக இருக்கிறது. இந்த நிலையில் சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியலாக சிறகடிக்க ஆசை சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு முறையும் முத்து மற்றும் மீனாவிற்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் இந்த வாரமும் அவர்கள் இருவருக்கும் மீண்டும் பிரச்சனை வெடிக்கிறது.
அதாவது இன்றைய எபிசோடில் முத்துவின் நண்பன் தன்னுடைய அண்ணனுக்கு கல்யாணம் என்று இன்விடேஷன் கொடுக்க வந்த நிலையில் முத்து ஜாலியாக அவரிடம் பார்த்துடா உன் அண்ணன் ஓடிப்போயிட்டா உன் தலையில அந்த பொண்ணை பிடிச்சு கட்டி வச்சிருவாங்க. அப்புறம் காலம் முழுக்க நீதான் கஷ்டப்படணும் என்று சொல்ல, இதைக்கேட்ட ரோகிணி இப்படி வீட்டுக்கு வரவங்க கிட்ட எல்லாம் மனோஜ் பற்றி முத்து கேவலப்படுத்துறாரு என்று சொல்ல,
அதற்கு விஜயா அவன் மனோஜ் பற்றி சொல்லல்ல. அவன் பொண்டாட்டிய பற்றி தான் சொல்லுறான். விருப்பமில்லாத கல்யாணத்தால் அவன் கஷ்டப்படுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறான். உங்களுக்கு புரியலையா என்று சொல்ல, இதை கேட்ட மீனா ரொம்பவே பீல் பண்ணுகிறார். அதனாலேயே இன்று வீட்டில் யாருக்கும் சமையல் செய்து கொடுக்காமல் அவரிடம் கேள்வி கேட்பவர்களை எல்லாம் எதிர்த்து பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் வரும் வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் முத்து வீட்டிற்கு வந்து மீனாவை தேட, அப்போது அண்ணாமலை மீனா வீட்டில் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜயா அவ இஷ்டத்திற்கு எங்கேயோ கிளம்பி போனா இன்னும் வரல என்று சொல்ல முத்து என்ன ஆச்சுன்னு தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா மீனாவிற்கு ஃபோன் பண்ணும் போது முத்துவை பற்றி கேட்டதால் மீனா கோவப்பட்டு இருந்தார். அதற்கு சத்யா உன் மருமகன் வழக்கம் போல குடிச்சிட்டு வந்துருப்பாரு. அதனால ஏதாவது திட்டிருப்பாரு அதான் அக்கா கோவமா இருக்கா என்று சொல்லியிருந்தார். இந்த நிலையில் இப்போது மீனா வீட்டை விட்டு காணாமல் போய் இருப்பதால் இதை வைத்து சத்யா பிரச்சனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முத்து மற்றும் மீனா எப்படி மீண்டும் சேரப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications