சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் ரிஜிஸ்டர் ஆபீஸில் முத்துவிடம் சிக்கிய மீனா.. அருண் பற்றி தெரியவரும் உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சீதாவிற்கும் அருணுக்கும் திருமணம் செய்து வைப்பதற்காக ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு மீனா சென்றிருக்கும் நேரத்தில் அங்கு முத்துவும் வருகிறார். மீனாவை நேருக்கு நேராக முத்து பார்த்து விடுகிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரோகிணி சிட்டியிடம் இருந்து வாங்கிய திருட்டு நகையை பற்றிய உண்மை விஜயாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அந்த நகையை வாங்குவதற்கு கூட ரோகிணி தன்னுடைய பிரண்ட் வித்யாவின் கணவரிடம் இருந்துதான் ஒரு லட்சம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த நகையும் இப்போது அந்த நகைக்கு சொந்தக்காரரான பெண் விஜயாவிடம் இருந்து வாங்கிக் கொண்டார்.

ரோகிணிக்கு பிரச்சனை
இதனால் நகையும் இல்லாமல் இப்போது ஒரு லட்சம் கடனோடு இருக்கும் ரோகிணிக்கு விஜயா மேலும் அதிர்ச்சியான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அதாவது இந்த நகை வாங்குவதற்கு ஒரு லட்சம் பணம் கொடுத்தாயே அந்த பணம் இப்போது எனக்கு வந்தாக வேண்டும், என்று விஜயா சொல்லி இருப்பதால் ரோகிணி இனி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
சீதா கல்யாணம் நடந்தது
அதேபோல மீனா வாழ்க்கையில் பெரிய பூகம்பம் வெடிக்கப்போகிறது. அதாவது மீனா தன்னுடைய தங்கை சீதாவிற்கு பிடித்த அருணை கல்யாணத்தில் செய்து வைப்பதற்கு முடிவெடுத்து இருக்கிறார். அதுவும் முத்து சமாதிக்காததால் முத்துவிற்கு தெரியாமல் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்வதற்கு மீனாவும் சம்மதம் சொல்லி இருக்கிறார். அடுத்த வாரத்திற்கு என வெளியான ப்ரோமோவில் முத்துவிற்கு தெரியாமல் மீனா சீதாவின் கல்யாணத்து ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்.
முத்துவிடம் சிக்கிய மீனா
ரெஜிஸ்டர் ஆபீசில் சீதா மற்றும் அருண் இருவரும் மாலை மாற்றி இருக்கிறார்கள். அதே நேரத்தில் வித்யாவின் காதலன் முருகன் தன்னுடைய திருமணத்தை ரிஜிஸ்டர் பண்ணுவதற்காக என்னவெல்லாம் சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்று ரெஜிஸ்டர் ஆபீசில் வந்து விசாரிப்பதற்காக முத்துவை கூட்டிக்கொண்டு வருகிறார். அப்போது சீதாவிற்கும் அருணுக்கும் திருமணம் முடிந்து வெளியே வரும் நேரத்தில் மீனாவை நேருக்கு நேராக முத்து பார்க்கிறார்.
இனி நடக்கும் சம்பவம்
இனி மீனாதான் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார் என்று தெரிந்தால் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இந்த கல்யாணம் நடந்து விட்டால் உங்க அம்மா வீட்டுக்கு கூட நீ போகக்கூடாது என்று முத்து சொல்லி இருக்கும் நிலையில் இப்போது மீனாவே இந்த கல்யாணத்தை நடத்தி வைத்திருப்பதால் மீனாவை வீட்டை விட்டு துரத்துவார் என்று தான் தெரிகிறது.
அடுத்த வார எபிசோடு
சீதாவின் அம்மாவும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் மீனா இனி அம்மா வீட்டுக்கு போக இருக்கிறாரா? அல்லது வீட்டை விட்டு வேறெங்கும் போகப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. ஆனால் அண்ணாமலை எப்படியும் மீனாவை வீட்டை விட்டு போவதற்கு சம்மதிக்க மாட்டார். ஆனாலும் அடுத்த வாரத்தில் ரோகிணிக்கு மட்டுமல்லாமல் மீனாவுக்கும் பெரிய பஞ்சாயத்து வரப்போகிறது.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications