Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: கடை திறந்ததும் மனோஜ்க்கு ஆப்பு வரப்போகுதா? ரோகிணிக்கு ப்ரண்ட் கொடுத்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ஷோரூம் திறப்பு விழாவை நடத்தி இருக்கிறார்கள். இனி ஷோரூம் வைத்து பிரச்சனைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜீவாவிடம் இருந்து 30 லட்சம் பணம் வாங்கியதை ரோகிணி மற்றும் மனோஜ் வீட்டில் மறைத்து இருக்கிறார்கள். இந்த உண்மை வெளிவருமா? இல்லையா? என்பது பற்றி ஒரு அலசல் பார்க்கலாம்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்னதான் தன்னுடைய அண்ணன் மனோஜை திட்டி கொண்டிருந்தாலும் கடந்த வாரத்தில் முத்து ஒரு முதியவருக்கு செய்த உதவியால்தான் மனோஜ்க்கு ஷோரூம் கிடைத்திருக்கிறது. ஆனால் எப்போதுமே முத்து செய்த நல்லதை புரிந்து கொள்ளாத மனோஜ் இந்த முறையும் முத்து தனக்காக செய்த உதவியை மதிக்காமல் தன்னிடம் பணம் இருக்கும் திமிரில் ஆடிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai serial next week Rohini and Manoj problems

மனோஜ் மட்டுமில்லாமல் அவருடைய மனைவி ரோகிணியும் மனோஜை வைத்து முத்துவை அவமானப்படுத்த பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கடந்த வாரத்தில் மனோஜ் ஷோரூம் போய் பார்த்த ப்ரோமோ மற்றும் எபிசோடு பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரீச் ஆகியிருக்கிறது. அதனாலயே டிஆர்பி யில் ஆறாவது இடத்தில் இருந்த இந்த சீரியல் இப்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இதனால் ஷோரூம் வைத்து அடுத்த பிரச்சனைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மனோஜியின் பார்க் நண்பன் பொறாமை பிடித்தவராக மனோஜை ஒவ்வொரு இடத்திலும் மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறார். நேற்று கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் நான் தான் அப்போ வில்லனா என்று ஒரு கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

Siragadikka aasai serial next week Rohini and Manoj problems

அதனால் இனி பார்க் நண்பனை நம்பி மனோஜ் பிசினஸில் ஏமாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இன்றைய எபிசோடில் கடையில் வேலை செய்த பழைய தொழிலாளர்களை மனோஜ் வெளியே அனுப்பி இருக்கிறார். அவர்களும் போகிற போக்கில் மனோஜ்க்கு சாபம் போட்டுட்டு போய் இருக்கிறார்கள். அதுபோல இன்றைய எபிசோடில் ரோகிணியின் தோழி வித்தியாவும் உன்னை நினைச்சு இப்பதான் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

நீ உன் மாமனார் பணத்தை வைத்து கடைய திறந்திட்டு, எங்க அப்பா தந்த பணம் என்று ஏமாற்றிக்கொண்டு இருக்கிற... ஏற்கனவே உனக்கு கல்யாணம் முடிந்தது உன் குடும்பத்துக்கு தெரியாது. அது போல உங்க அப்பா விஷயமும், இந்த பண விஷயமும் தெரிய வந்தால் வீட்டிற்கு தெரிய வரும்போது என்ன நடக்கும்னு தெரியல... என்று பில்டப் கொடுக்கிறார்.

இதனால் அடுத்த வாரத்தில் ஜீவா பற்றிய உண்மை வெளிவருமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுபோல ரோகிணி தன்னுடைய அம்மாவின் ஞாபகம் வந்து தன்னுடைய அம்மா மற்றும் மகனை பார்க்க போவதாக போன் பண்ணி பேசி இருக்கிறார். இதனால் ரோகிணி மாட்டுவது போன்று அடுத்த ப்ரோமோ வெளியிடுவார்கள். ஆனால் வழக்கம் போல ரோகிணி மாட்டாமல் தப்பித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? அடுத்த வாரத்தில் ரோகிணி மாட்டுவாரா? இல்லையா? என்று உங்க கருத்தை பதிவிடுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+