சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு கிடைத்த அதிர்ச்சி செய்தி.. மனம் மாறிய அண்ணாமலை.. மகிழ்ச்சியில் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 12ம் தேதிக்கான எபிசோடில் சத்யா மீது கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்கு விஜயா சம்மதித்து விடுகிறார். அதே நேரத்தில் முத்துவை பற்றி மொத்த குடும்பத்தினரும் புரிந்து கொள்கின்றனர்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா போன் செய்து சீதாவிடம் உனக்கு பார்த்த மாப்பிள்ளை கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிட்டாரு என்று சொல்ல சீதா சந்தோஷப்படுகிறார். அதற்கு மீனா என்ன இது சந்தோஷப்படுற விஷயமா? என்று கேட்க, அதற்கு சீதா ஆமா நான் தான் இந்த கல்யாணம் வேண்டாம் என்று முதலில் இருந்தே சொல்லிட்டு இருக்கிறேன்.

நீங்கதான் கேட்கல இப்பவாவது அந்த மாப்பிள்ளை பற்றி தெரிகிறதே. ஒரு பிரச்சனை என்றதும் விட்டுட்டு போறவனை நம்பி எப்படி கல்யாணம் பண்ண முடியும் என்று கேட்க, அதற்கு மீனா அதுவும் சரிதான் இப்போ சத்யாவால் பிரச்சனை வந்த போது எங்க வீட்ல ஒருத்தரு கூட என்னை நம்பல. ஆனா என் வீட்டுக்காரர் மட்டும்தான் என் கூட இருந்து சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு.

ஏதாவது ஒரு பிரச்சனைனா விட்டுட்டு போற புருஷன் உனக்கு தேவை இல்லை என்று போனை வைக்கிறார். அடுத்ததாக முத்து கார் லோன் போட்டு இரண்டு லட்சம் ரெடி செய்கிறார். செல்வம் 25 ஆயிரம் பணம் கொடுக்கிறார். மறுபக்கத்தில் மீனாவின் அப்பாவுடைய கரும்பு ஜூஸ் மெஷினை விற்க முயற்சி செய்கிறார்கள்.

அந்த நேரம் பார்த்து அங்கு முத்து வந்து வண்டியில் ஏற்றிய மெஷினை கீழே இறக்கி வைத்துவிட்டு இது ஒருத்தங்க நினைவாக வைத்திருக்கிறது. அதை எந்த சூழ்நிலையிலும் விற்க கூடாது என்று சொல்கிறார். பிறகு சந்திரா நான் ஒரு ஒன்றரை லட்சம் ரெடி பண்ணி வைத்திருக்கிறேன் என்று கொடுத்ததும் மீதியை எப்படியாவது ரெடி பண்ணிக்கொள்ளலாம் என்று மீனாவை கூட்டிக்கொண்டு போகிறார்.

பிறகு வீட்டில் ரூம் கட்ட சேர்த்து வைத்த பணத்தில் 65 ஆயிரம் இருக்கிறது. அதோடு மிச்ச பணத்திற்கு மீனா வண்டியை வித்துடலாமா என்று கேட்க, முத்து மீனாவை திட்டி விடுகிறார். மீனா முத்துவை கட்டிப்பிடித்து அழுகிறார். அந்த நேரத்தில் அண்ணாமலை வருகிறார். அவர் 35 ஆயிரம் கொடுக்கிறார்.

அடுத்ததாக மறுநாள் காலையில் முத்துவும் மீனாவும் இதுல 4 லட்சத்து 65 ஆயிரம் இருக்கு இப்போதைக்கு இதை வச்சுக்கோங்க கண்டிப்பாக மீதி பணம் தந்து விடுவோம் என்று வக்கீலிடம் பேச, அவர் இதற்கு மேல் ஈசிதான் நான் பார்த்துக்கிறேன் என்று விஜயாவை சந்திக்கிறார்.
விஜயா முதலில் யார் என்று தெரியாமல் வக்கீலை வரவேற்கிறார். பிறகு வக்கீல் சத்யா கேஸ் பற்றி பேச வந்திருக்கிறோம் என்று சொன்னதும் எதுக்காக இப்போ வந்தீங்கே என்று கோபப்படுகிறார். அப்போது வக்கீல் நீங்க சத்யாவை ஜெயிலில் அடைப்பதால் உங்களுக்கு என்ன லாபம்?
அவன் மீது இதுவரைக்கும் எந்த கேஸும் கிடையாது. ஜட்ஜ் விசாரிச்சா கூட அவனுக்கு ரெண்டு மாசம் தான் தண்டனை கொடுப்பாங்க. ஆனா நீங்க கேஸை வாபஸ் வாங்குனா உங்களுக்கு நான் பணம் தரேன் என்று சொன்னதும் விஜயா சந்தோஷப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications