சிறகடிக்க ஆசை: ரோகிணியின் கடந்த காலம் பற்றி தெரியும் விஜயா.. வீட்டை விட்டு விரட்டும் மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணியின் மகன் விஷயத்தில் முத்து சந்தேகப்படுகிறார். அதே நேரத்தில் விஜயாவிற்கு மொத்த உண்மைகளும் தெரிந்தால் என்ன நடக்கும் என்று ரோகிணிக்கு கண் முன்பே தெரிகிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து மீனாவிடம் கிரிஷ் விஷயத்தில் என்னமோ இருக்கு. நாம அந்த பையன் கிட்ட பேசுறது யாருக்கோ பிடிக்கல. அவனை சுத்தி ஏதோ நடக்குது அதை சீக்கிரமா கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை மறைந்து நின்று ரோகிணி கேட்டு அதிர்ச்சி ஆகிறார்.

அடுத்ததாக ரோகிணி பற்றிய உண்மைகள் மனோஜ் மற்றும் விஜயாவிற்கு தெரிய வருகிறது. விஜயா ரோகிணியை அடித்தது துரத்துகிறார். நான் உன்னை என்ன நினைத்தேன். ஆனா நீ என்கிட்ட இவ்வளவு ஏமாத்திருக்க என்று விஜயாவோட சேர்ந்து ரோகிணியை வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார்.
அப்போது ரோகிணி மனோஜ்... மனோஜ்... என்று கத்துகிறார். பிறகு தான் இது கனவு என்று தெரிகிறது. ரோகிணி கத்துவதை கேட்டு மனோஜ் எழுந்ததும் நீ என்னை விட்டு போக மாட்டாளா? என்று ரோகிணி கேட்க, கண்டிப்பா போக மாட்டேன் என்று மனோஜ் சொல்கிறார். அடுத்ததாக ரோகிணி தன்னுடைய பிரண்டு வித்யா வீட்டிற்கு போய் இருக்கிறார்.

அப்போது முத்துவின் போனை எடுத்து அதில் இருக்கும் வீடியோவை வித்யா பார்த்துக் கொண்டிருக்க இது முத்து போன் தானே? இதை எதற்கு நீ எடுத்த? இதை கடலில் போட்டு விடு என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா பூ கொடுத்து விட்டு வரும்போது ஒரு நபர் மீனாவையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இதனை கவனித்த மீனா வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப மீனா போகும் இடம் எல்லாம் பின்னாடியே அந்த நபர் வருகிறார். இதனால் மீனா அந்த பக்கத்தில் வித்யா வீடு இருப்பதால் அங்கே போய்விடலாம் என்று வித்யா வீட்டிற்குள் ஓடி வருகிறார். வித்யா மீனாவிற்காக கதவை திறந்து விடும் போது வித்யா கையில் முத்துவின் போன் இருப்பதை பார்த்து ரோகிணி பயப்படுகிறார்.

பிறகு மீனா என்னை துரத்தி வராரு என்று சொன்னதும், வித்யா போய் பார்க்க அங்கு அந்த நபர் இல்லை. பிறகு மீனாவிற்கு தண்ணீர் கொடுத்து மீனாவை கிளப்பி வைக்கிறார். அப்போது பக்கத்திலேயே முத்துவின் போன் இருக்கிறது. ஆனால் மீனா கவனிக்காமல் போய்விடுகிறார். பிறகு மீனா போனதும் ரோகிணி வித்யாவை திட்டுகிறார். முதல்ல இந்த போனை எடுத்து கடலில் கொண்டு போடு என் வாழ்க்கையில் நீயும் விளையாடாதே என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கத்தில் முத்து கூட வேலை செய்யும் ஒரு நபருக்கு பிறந்தநாள் என்பதால் எல்லோரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். அந்த நேரத்தில் மீனாவை பாலோ பண்ணும் நபர் வருகிறார். அவர் பிறந்த நாள் கொண்டாடியவரின் தம்பி என்று அறிமுகம் ஆகிறார். அதோடு அந்த நபரை பிறந்தநாள் கொண்டாடுபவர் தான் நன்றாக படிக்க வைத்து இன்ஜினியர் ஆக்கியதாகவும், இப்போ கல்யாணம் பண்ணிக்க சொன்னா லவ் பண்ணி தான் பண்ணுவேன்னு பிடிவாதமா இருக்கிறார் என்று சொல்ல அதற்கு முத்து அதுவும் நல்ல விஷயம் தானே என்று சொல்கிறார்.

அதற்கு அந்த நபர் நான் இப்பதான் கொஞ்ச நாளா ஒரு பொண்ணை பார்த்துட்டு இருக்கிறேன். இன்னும் பேசுனது இல்ல என்று முத்துவிடம் சொன்னதும் அந்த நபர் சொல்வது மீனா தான் என்று தெரியாமலேயே காதலிப்பதற்க்கு அந்த நபருக்கு முத்து ஐடியா கொடுத்து இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications