சிறகடிக்க ஆசை: சத்யாவின் வீடியோ லீக் ஆனது.. ரோகிணியை சந்தேகப்படும் மனோஜ்.. முத்து கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நவம்பர் 2ஆம் தேதிக்கான எபிசோடில் சத்யாவின் வீடியோ லீக் ஆகி இருக்கிறது. அதை வீட்டில் எல்லோரிடமும் ரோகிணி காட்டுகிறார். அதே நேரத்தில் திருப்பதிக்கு சென்று வந்த முத்து மீனாவிற்கு போன் செய்திருக்கிறார். மேலும் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா மீனாவின் தோழிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் நாளைக்கு உங்களுக்கு கை கால் விளங்காமல் படுத்த படுக்கையாக ஆகிவிட்டால் உங்களை மீனாதான் பாக்கணும். மீனா ரொம்ப நல்ல பொண்ணு என்று சப்போர்ட் செய்ய அதற்கு விஜயா கோபப்பட்டு அவர்களை திட்டி விட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி போய்விடுகிறார்.

மறுபக்கத்தில் மீனா தனியாக நின்று கொண்டிருக்கும்போது ஒரு நம்பரில் இருந்து போன் வருகிறது. அதை மீனா அட்டென்ட் பண்ணி பேச முத்து பேசுகிறார். முத்து தான் திருப்பதிக்கு போய்விட்டு சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதோடு வீட்டில் எல்லாரையும் பற்றி விசாரிக்கிறார்.
மீனா மீது தனக்கு இருக்கும் காதல் பற்றியும் ஒரு நாள் பேசவில்லை என்ற போது எவ்வளவு மிஸ் பண்றேன் என்று எனக்கே தெரிகிறது என்று பீலிங்கா பேசிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக முத்துக்கு ஃபோன் வாங்குவதற்காக செல்போன் கடையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது சக்தியாவும் மீனாவும் சேர்ந்து முத்துவிற்கு ஒரு செல்போன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கிருக்கும் இரண்டு நபர்கள் அவர்களுடைய செல்போனில் சத்தியா விஜயாவிடம் பேக்கை திருடிய வீடியோவை பார்க்கிறார்கள்.
பிறகு சத்யா வீடியோவை பார்த்த நபர்கள் எல்லோரும் இன்னைக்குள்ள இவன போலீஸ் பிடித்து விடும். இவன் திருடிய பணத்தில் பைக், செல்ஃபோன் வாங்கி சந்தோசமா இருக்கான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ரோகிணியின் தோழி வித்யாவும் அந்த வீடியோவை பார்க்கிறார்.
வித்யா ரோகினியிடம் நீ சொன்னது போலவே வீடியோ வைரல் ஆயிடுச்சு. எல்லோரும் சத்யாவை திட்டிட்டு இருக்காங்க என்று சொல்கிறார். பிறகு ரோகிணி மனோஜ் ஷோரூமுக்கு வந்து தன்னிடம் ஒருவர் ஒரு லெட்டர் தந்துட்டு போனதாக சொல்கிறார். லெட்டர் என்றதும் மனோஜ் ரோகினி மீது சந்தேகப்படுவார்.
நீ எதுவும் தப்பு பண்ணியா உன்ன பத்தி என்னிடம் சொல்வதற்காக இந்த லெட்டர்ல ஏதோ எழுதி இருக்கானா தெரியலையே என்று சொல்லிக் கொண்டு லெட்டரை பிரிச்சு படித்துப் பார்க்க, அங்கு உங்க குடும்பம் சம்பந்தமான ஒரு வீடியோ வைரல் ஆகிறது என்று எழுதி இருக்கிறது. அதை பார்த்ததும் எந்த வீடியோனு தெரியலையே என்று மனோஜ் பயந்து கொண்டே போனை எடுத்து சோசியல் மீடியாவை பார்க்கிறார்.

அங்கு விஜயாவிடமிருந்து சத்யா பையை திருடிட்டு போன வீடியோ இருக்கிறது. அதை பார்த்தவுடன் இந்த வீடியோவை அம்மாவிடம் காட்டணும் என்று மனோஜ் சொல்கிறார். ரோகிணி இதை வீட்டில் காட்டினால் பிரச்சனையாகிடும் மீனாவை வீட்டை விட்டு தொரத்திடுவாங்க என்று பயப்படுவது போல நடிக்கிறார்.
ஆனாலும் மனோஜ் இது கண்டிப்பா அம்மாவிடம் சொல்லியே ஆகணும் இல்லையென்றால் நமக்கும்தான் பிரச்சனை. இந்த வீடியோவை பார்த்தா அம்மா முத்துவையும் மீனாவையும் வீட்டை விட்டு துரத்திடுவாங்க அதுதான் நமக்கு வேண்டும் என்று சொல்கிறார்.
மறுபக்கத்தில் விஜயா டான்ஸ் கிளாஸில் டான்ஸ் சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் காதல் ஜோடியிடம் கோபமாக பேசிக்கொண்டிருக்கிறார். அதை பார்த்து பார்வதி என்ன ஆச்சு எதற்காக இவ்வளவு கோபமாக இருக்க என்று கேட்க மீனாவின் தோழிகள் தன்னிடம் பேசியது பற்றி விஜயா சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு ரோகிணி வர ரோகிணியை பார்த்ததும் விஜயா என்ன பிரச்சனை என்று விசாரிக்க நீங்க இந்த போனில் இருக்கும் வீடியோவை பாருங்க என்று ரோகினி வீடியோவை காட்ட அதில் தன்னிடம் இருந்து பையை திருடிட்டு போனது சத்யா என்பதை பார்த்து விஜயா அதிர்ச்சியில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications