சிறகடிக்க ஆசை: மீனாவிடம் கையெடுத்து கும்பிட்டு அழுத விஜயா.. மன்னிப்பு கேட்ட முத்து..ஆபத்தில் அண்ணாமலை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 30ம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் அண்ணாமலையின் ஆபத்து நிலையை தெரிந்து கொண்ட மீனா மருத்துவமனைக்கு ஓடி வந்திருக்கும் நிலையில் அங்கு விஜயா அவமானப்படுத்தி அனுப்புகிறார்.

அதே நேரத்தில் அண்ணாமலை ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றால் நான்கு லட்சம் ரூபாய் வேண்டும் என்று டாக்டர்கள் கெடு வைக்கின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அண்ணாமலையை ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் மயக்கமாகவே இருக்க அப்போது அங்கிருக்கும் டாக்டர்கள் சீப் டாக்டர் வந்து தான் எது வேணும்னாலும் சொல்ல முடியும் என்று சொல்லிவிடுகின்றனர். அதோடு கொஞ்சம் சீரியஸ் தான் என்று சொல்ல அதைக் கேட்டு விஜயா பதறி அழுது கொண்டிருக்கிறார்.

ரோகிணி விஜயாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கும்போது முத்து அங்கு வந்து அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது காலையில் அவரை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் என்று சொல்லி தான் தான் தப்பு செய்துவிட்டேன் என்று புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனாவின் வீட்டில் அவருடைய அம்மா நேத்து மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து இருக்கும்போது நீ பேசி இருக்கலாம்.
நீ பேசாம விட்டது தப்பு என்று அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து நான் கோவிலுக்கு போகிறேன் என்று சொல்ல அப்போது மீனா நானும் வருகிறேன் என்று சொல்லும்போது வேண்டாம் நீ வீட்டிலே இரு என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி போகிறார். அந்த நேரத்தில் பூ கட்டும் பெண் ஒருவர் மீனாவிடம் அண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பது பற்றி சொல்கிறார்.

இதை கேட்டு பதறிப்போன மீனா ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார். அந்த நேரத்தில் முத்து டாக்டரை போய் பார்த்து பேசி விட்டு வரலாம் என்று கிளம்பி போக, அங்கே மீனா வந்ததும் விஜயா மீனாவை திட்டிய அவமானப்படுத்துகிறார். உன்னால தான் இத்தனை பிரச்சனையும் எவளோ ஒருத்திக்கு தாலி ஏற வேண்டும் என்பதற்காக ஏன் தாலியை அறுக்க வந்துட்டா, உன்னை போய் அவரு ரொம்ப நம்புனாரு.
நீ அவரு துரோகம் பண்ணிட்ட என்று பேசிக் கொண்டிருக்கும்போது மனோஜும் தன்னுடைய பங்குக்கு மொத்த பழியையும் மீனா மீது தூக்கிப் போட்டு அங்கிருந்து விரட்ட அதற்கு மீனா 100 வருஷத்துக்கு மேல மாமா நல்லா இருப்பாரு. அவர் எனக்கு கடவுள் மாதிரி. நான் போறேன் அவருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று சொல்லி அழுது கொண்டே அங்கிருந்து கிளம்பி போகிறார்.

அப்போது சீப் டாக்டர் வந்து பார்த்துவிட்டு அண்ணாமலைக்கு இதயத்தில் நான்கு அடைப்பு இருக்கு. இரண்டு அடைப்பை மாத்திரை மூலம் சரி செய்து கொள்ளலாம். இன்னும் இரண்டு அடைப்பை ஆபரேஷன் தான் சரி செய்ய வேண்டும். டாக்டர் இன்னைக்கு மட்டும் தான் இங்கே இருப்பார். அதுக்குள்ள நாலு லட்சம் ரூபாய் பணத்தை கட்டிடுங்க என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதை கேட்டதும் விஜயா அவ்வளவு பணம் இல்லையே என்று கலங்குகிறார். மறுபக்கத்தில் மீனா வேகமாக கோவிலுக்கு வந்து நல்லவங்களை எதுக்கு இப்படி சோதிக்கிறா? என் மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று சொல்லி அங்கிருக்கும் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு அங்கபிரதோஷம் செய்கிறார்.

மீனாவின் அம்மாவிற்கு முதலில் என்ன நடந்தது என்று தெரியாமல் பதறிப்போய் கேள்வி கேட்க பிறகு அண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லை ஹாஸ்பிடல் இருப்பது பற்றி தெரியவந்ததும் அவரும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications