சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் சத்யா வீடியோவை காட்டிய ரோகிணி.. மீனா கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி விஜயாவிடம் சத்யா பணத்தை திருடிய வீடியோவை காட்ட குடும்பத்திற்குள் பிரச்சனை வெடிக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பிஏவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சிட்டியிடம் உதவி நாடி இருந்த நிலையில் சிட்டி முத்துவின் செல்போனில் சத்யா விஜயாவிடம் இருந்து பணம் திருடிய வீடியோ ஒன்று இருக்கிறது. அதை எடுத்து கொடுத்தால் நான் உங்களை பிளாக்மெயில் பண்றவனை மிரட்டி உங்க பக்கமே வரவிடாமல் பண்ணுவேன் என்று டீல் பேசியிருந்தார்.

அதற்காக சில மாதங்களாகவே ரோகிணி முத்துவின் செல்போனை எடுப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். கடைசி வரைக்கும் முத்துவிடமிருந்து ரோகிணி செல்போனை எடுப்பாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்த நிலையில் அவருடைய திருமண நாளில் பிசினஸ் மீட்டிங் ஒன்று நடைபெற்றது. அப்போது முத்து அளவுக்கு அதிகமாக குடித்திருந்த போது அந்த செல்போனை ரோகிணி எடுத்துவிட்டார்.

இன்றைய எபிசோடில் ரோகிணி அந்த செல்போனில் இருந்த வீடியோவை சிட்டியிடம் கொடுத்துவிட்டு பழைய பிஏவை மிரட்டி வைக்க சொல்கிறார்.சிட்டியும் அந்த பிஏவை கடத்தி கண்ணை கட்டி ஒரு ரூமுக்குள் தள்ளி போட்டு அடித்து சித்திரவதை செய்கிறார். அதை பார்த்து ரோகிணி சந்தோஷப்படுகிறார்.

அதே நேரத்தில் தன்னுடைய வாழ்க்கைக்காக மீனாவின் வாழ்க்கையை குழிதோண்டி புதைக்க நினைக்கும் ரோகிணியின் பிளானை பார்த்து அவருடைய தோழி வித்யா மீனாவிற்காக பீல் பண்ணுகிறார். இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான வீடியோவில் விஜயாவிடம் ஒரு வீடியோவை காட்டி உங்க பணத்தை பிடுங்கிட்டு போனது யாருன்னு தெரியுமா பாருங்க என்று சொல்ல, அங்கு சத்தியா இருப்பதை பார்த்து வித்யா அதிர்ச்சியாகி இந்த வீடியோ உனக்கு எப்படிமா கிடைச்சுது என்று கேட்கிறார்.

அப்போது மீனாவும் பக்கத்தில் நிற்கிறார். இதனால் மீனா இந்த வீடியோவை பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. செல்போனில் அந்த வீடியோவை சேவ் பண்ணி வைத்திருந்தேன் என்று செல்வத்திடம் பேசுவதை கேட்டு எந்த வீடியோ சேவ் பண்ணி வச்சுருந்தீங்க என்று மீனா கேள்வி கேட்டிருந்தார்.

இதனால் இப்போது சத்யாவின் வீடியோ வெளியே வரும் நிலையில் முத்துவிற்கு பெரும் பிரச்சனை வரும். அப்போது மீனா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications