சிறகடிக்க ஆசை: சிந்தாமணிக்கு முத்து விரித்த வலை, வசமாக சிக்கும் விஜயா..! அம்பலமாகும் உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளை என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவை தாக்கி பணத்தை பறித்த சிந்தாமணியை சிக்க வைக்க முத்து முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் விஜயாவுக்கு இதனால் பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் சில நாட்களாக பெரிய அளவில் சுவாரசியம் இல்லாமல் தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று மீனா புதியதாக மண்டபம் ஒன்றில் ஆர்டர் எடுப்பதற்காக தன்னுடைய தங்கச்சி சீதாவிடம் இருந்து பணத்தை வாங்கி இருந்தார். ஏற்கனவே சிந்தாமணியின் பேச்சை கேட்டு விஜயா தன்னை ஆர்டர் வாங்க விடாமல் தடுத்தது மீனாவிற்கு தெரியும். இருந்தும் இந்த முறை விஜயா முன்பு வைத்து அண்ணாமலையிடம் நான் மண்டபத்துக்கு போய் பணத்தை கட்டிட்டு வந்துடுறேன் என்று சொல்லிவிட்டு மீனா கிளம்புகிறார்.

மீனாவிற்கு அடி
மீனா கிளம்பியதும் இந்த விஷயத்தை விஜயா சிந்தாமணிக்கு போன் போட்டு சொல்கிறார். சிந்தாமணி ஆள் வைத்து மீனாவிடமிருந்து பணத்தை பறித்து விடுகிறார். அப்போது மீனா கீழே விழுந்து விட அவருடைய கைகளில் அடிபடுகிறது. இதனால் மீனாவிற்கு மண்டபத்து ஆர்டர் கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த நிலையில் மீனா மீது கோபமாக இருந்து முத்து மீனாவிற்கு அடிபட்டதும் அவரிடம் மன்னிப்பு கேட்டு பேசத் தொடங்கி விட்டார்.
செல்வத்திற்கு சந்தேகம்
அதுபோல மீனாவிடம் இருந்து பணத்தை பறித்தது சிந்தாமணியாக தான் இருக்கும் என்று சந்தேகம் முத்துவிற்கு வந்திருக்கிறது. அப்போது முத்துவின் நண்பர் செல்வம் மீனா பணம் கொண்டு வரும் விஷயம் சிந்தாமணிக்கு எப்படி தெரிந்தது என்று கண்டுபிடிக்கணும் என்று க்ளூ கொடுத்திருக்கிறார். ஏற்கனவே வீட்டில் சிந்தாமணிக்கு விஷயத்தை சொல்வது விஜயா தான் என்பது ஊரறிந்த ரகசியமாக இருக்கிறது. இது முத்துவுக்கும் தெரியும்.
முத்து போட்ட பிளான்
ஆனால் இப்போது அதைப் பற்றி பேசாமலேயே சிந்தாமணியிடமிருந்து ஆட்கள் பணத்தை திருடிய இடத்தில் இருந்து பணத்தை பெற வேண்டும் என்று முத்து தன்னுடைய தம்பி ரவி ஸ்ருதி, மீனா, செல்வம் எல்லோரையும் சேர்த்து வைத்து பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது நாம எல்லோரும் இன்கம் டேக்ஸ் ஆபிஸர் போல நாளைக்கு போக போகிறோம் என்று சொன்னதும் ரவி முதலில் பயப்படுகிறார்.
விஜய்க்கு பிரச்சனை
பிறகு ஸ்ருதி போகலாம் என்று தைரியம் சொன்னதும் அவரும் கிளம்புகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது. ஒரு திரைப்படத்தில் சூர்யா இன்கம்டேக்ஸ் ஆபிஸர் போல சென்று ஏமாற்றி ரைட் நடத்துவார். அதுபோல இப்போது இவர்களும் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் சிந்தாமணிக்கு மீனா பணம் கொண்டு வரும் விஷயத்தை சொன்னது விஜயா தான் என்று தெரிய வரும்போது மீண்டும் வீட்டில் பிரச்சனை நடக்கும். ஆனாலும் வழக்கம்போல மீனா ஐயோ அத்தை பாவம், மாமா கஷ்டப்படுவாரு என்று இந்த பிரச்சனையை அப்படியே முடித்து விடுவார் இன்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications