சிறகடிக்க ஆசை: திருட வந்த இடத்தில் சிக்கும் பி ஏ.. மனோஜ் உயிருக்கு ஆபத்து? மாட்டிக்கொண்ட ரோகிணி
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 ஜூலை மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகினியை பணம் கேட்டு மிரட்டிக் கொண்டிருந்த அவருடைய பழைய பிஏ விஜயாவின் வீட்டிற்கு திருட வந்து மீனா மற்றும் ஸ்ருதியிடம் வசமாக சிக்கி இருக்கிறார். விஜயாவும் போட்டு அடித்து துவசம் செய்கிறார் இனி ரோகிணி என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைகள்தான் வந்திருக்கிறது . ரோகிணி எப்போதுமே தான் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்கு அடுத்தவர்களை பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார் ஆனால் இப்பொழுது அவருடைய பிளானில் மனோஜ் மாட்டி இருக்கிறார். அதாவது ரோகிணி இடம் பணம் கேட்டு அவருடைய பழைய பிஏ மிரட்டிக் கொண்டிருக்கிறார். பிஏ தினேஷ் மற்றும் சிட்டி இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கும் விஷயம் ரோகிணிக்கு தெரியாது. இருவரும் பிளான் போட்டு ரோகினியிடம் இருந்து பணத்தை மேலும் மேலும் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த இருக்கிறார்கள்.

இப்போது பிஏ ரோகினியிடம் 10 லட்சம் பணத்தை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் உன்னுடைய கொழுந்தன் முத்துவிடம் சொல்லிவிடுவோம் என்று சிட்டி ப்ளான் போட்டு கொடுக்க அதே போல பிஏவும் மிரட்டி கொண்டிருக்கிறார். இதனால் ரோகிணி என்ன செய்ய என்ற குழப்பத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சீதாவின் திருமணத்திற்காக எடுத்து வைத்த நகை மற்றும் பணம் விஷயமும் ரோகிணிக்கு தெரிகிறது.
ஏற்கனவே ஸ்ருதி தனக்கு பணம் கொடுக்காமல் சீதா கல்யாணத்திற்கு பணத்தை கொடுக்கிறாரே என்று கோபத்தில் இருக்கும் ரோகிணி பிஏக்கு போன் போட்டு என்னால் பணத்தை ரெடி பண்ண முடியாது ஆனால் முத்துவின் மனைவி சீதா தங்கச்சிக்கு கல்யாணம் நடக்க போகுது அதற்கான நகை எங்க வீட்டில் தான் இருக்கிறது, அது எந்த இடத்தில் இருக்கிறது என்று நானே போன் பண்ணி சொல்றேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் நாங்க எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போயிருவோம். நாங்க வெளியே போன பிறகு நீ வந்து அந்த நகைகளை எடுத்துக்கோ என்று சொல்லி இருக்கிறார்.
அதுபோல நகை எடுப்பதற்காக மீனாவும் ஸ்ருதியும் வெளியே போகும்போது மீனா எந்த இடத்தில் சாவியை வைக்கிறார் என்று ரோகிணி பார்த்துவிட்டு போகிறார். பிறகு பிஏக்கு போன் பண்ணி சொல்ல பிஏ அந்த சாவியை எடுத்து பூஜை ரூமில் இருக்கும் நகைகளை எடுத்துக்கொண்டு கதவை திறக்க வரும்போது மனோஜ் வீட்டிற்கு வந்துவிடுகிறார். மனோஜ் உள்ளே தள்ளி அடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது அவரிடமிருந்து தப்புவதற்காக பி ஏ முயற்சி செய்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி மற்றும் மீனா இருவரும் வருகிறார்கள்.
அவர்கள் பிஏவை போட்டு அடிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து விஜயாவும் வருகிறார். விஜயாவும் திருடனா என்று வீட்டுக்குள் கோபமாக வருகிறார். அதைத்தொடர்ந்து ரோகிணி வீட்டுக்குள்ளே வர திருடன் வந்திருக்கான் வாங்க என்று மீனா கூப்பிடுகிறார். இதை எதிர்பார்க்காத ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். மீனா கோவப்படுவதை பார்க்கும் போது மனோஜ்க்கு ஏதாவது நடந்திருக்குமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகிணி போட்ட பிளானால் இப்போது அவருக்கு பிரச்சனை வருகிறது. மொத்த குடும்பத்தின் முன்பும் பிஏ மாட்டும் போது அவர் ரோகினி தான் இங்கே நகை இருக்கிற விஷயத்தை சொன்னா என்று சொன்னால் ரோகிணி கதை அவ்வளவுதான். அதே நேரத்தில் இந்த முத்து வந்தாலும் பிஏவை ஏற்கனவே முத்துக்கு தெரியும் என்பதால் அதுவும் ரோகிணிக்கு தான் பிரச்சனை. இனி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications