சிறகடிக்க ஆசை: முத்து திமிரால் வந்த வினை.. குடித்துவிட்டு செய்த பிரச்சனை.. வில்லனான அருண், தவிக்கும் மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மே 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துவிடம் செய்யக்கூடாது என்று சொன்ன செயலை முத்து செய்திருக்கிறார். அதாவது குடித்துவிட்டு அருண் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்திருக்கிறார். அதனால் முத்துவிற்கு பெரிய பிரச்சனை வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் கேரக்டர் எப்போ எப்படி இருப்பாரு என்று சொல்ல முடியாது. ஒரு வாரம் இனி குடிக்கவே கூடாது, நான் குடியை விட்டு பல வருஷம் ஆகிவிட்டது இந்த குடியால் பல விஷயங்களை நான் இழந்து இருக்கிறேன் என்று எல்லோருக்கும் அட்வைஸ் செய்து கொண்டு இருப்பார். ஆனால் அடுத்த வாரமே மூக்கு முட்ட குடித்துவிட்டு மீனாவிற்கு மட்டுமல்லாமல் குடும்பத்திற்கும் ஏதாவது ஒரு சிக்கலை இழுத்து விடுகிறார்.

மீனா சப்போர்ட்
முத்து செய்யும் பிரச்சனைகளுக்கு எல்லாம் மீனா தான் அவமானப்பட்டு நிற்கிறார். ஏற்கனவே காரில் பிரேக் பிடிக்காததால் அருண் பைக் மீது மோதியதால் அருண் என்னுடைய பைக்கை வேணும்னே மோதிட்டான் என்று முத்து மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். இதனால் முத்துவின் கார் லைசென்ஸ் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அவருடைய குடும்பத்தினர் எல்லோருமே முத்துவுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மீனா மட்டும்தான் முத்துவுக்கு ஆதரவாக பேசி நடந்த விஷயத்தை சொல்லி இருந்தார்.
முத்து செய்த செயல்
குடிக்காமலேயே குடித்ததாக மனோஜ் திட்டிக் கொண்டிருந்தார். இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் முத்துவுக்கு உதவி செய்வதற்கு மீனா ஒரு இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு முத்துவை கூட்டிக்கொண்டு போயிருந்தார். ஏற்கனவே இரண்டு மூன்று முறை அந்த இன்ஸ்பெக்டர் தான் முத்துவிற்கு உதவி செய்து இருக்கிறார். அதுவும் மீனாவிற்காகத்தான். ஆனால் இப்போது அந்த இன்ஸ்பெக்டர் முத்துவிடம் நீயும் அருணும் எதற்காக இப்படி முட்டிக்கிட்டு இருக்கிறீங்கன்னு தெரியல? உங்க இருவருக்கும் மீண்டும் மீண்டும் பிரச்சனை வந்துகிட்டே இருக்கிறது. இப்போ அவன் உன் மேல கொலை முயற்சி வழக்கு கொடுத்திருக்கிறான்.
இன்ஸ்பெக்டர் அட்வைஸ்
அதனால் அவன் இருக்கும் பக்கமே நீ போகாத அவங்க கிட்ட எந்த ஒரு பிரச்சனையும் செய்து விடாத நான் உனக்காக மேல் இடத்தில் பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் மீனா முத்துவுக்காக போலீஸ் ஸ்டேஷனில் சென்று அங்கிருந்த கான்ஸ்டபளிடம் கெஞ்சி கொண்டிருக்கிறார். அதற்கு அவர் பீல் பண்ணுகிறார். மறுபக்கத்தில் முத்து தன்னுடைய நண்பர்களுடன் குடித்துவிட்டு அருண் வீட்டிற்கு சென்று கல்லை தூக்கி எறிகிறார்.
அருண் காட்டிய ஆதாரம்
இதனால் அருண் இதை எல்லாம் வீடியோ எடுத்து மேல் அதிகாரிக்கு அனுப்பி என்னை முத்து வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் செய்தான் என்று கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இதனால் இன்ஸ்பெக்டர் முத்துவை கூப்பிட்டு வைத்து திட்டுகிறார். உன்னை நான் அவன் இருக்கும் இடத்துக்கே போகக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன். ஆனால் நீ நல்லா குடிச்சிட்டு போய் அருண் வீட்டில் கல்லை தூக்கி எறிஞ்சி கொலை மிரட்டல் செஞ்சிருக்க, உன்னால இனி வெளிய விட முடியாது.
இன்ஸ்பெக்டர் சொன்ன வார்த்தை
ஜெயிலில் தான் போடணும். உன்னை அரெஸ்ட் செய்வதை தவிர வேற வழி இல்லை என்று சொன்னதும் மீனா அதிர்ச்சியில் நிற்கிறார். ஏற்கனவே இது போலத்தான் ஒரு முறை அருண் கார் செக் பண்ணி கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக வந்த முத்துவை குடிச்சிருக்கியா என்று செக் பண்ணி இருந்தார். நான் குடிக்காமலே நீ குடிச்சிருக்கியான்னு கேட்பியா என்று பாருக்கு சென்று செல்வத்தை அங்கு வரவைத்து விட்டு தான் குடித்துவிட்டு செல்வத்தை கார் ஓட்ட சொல்லி அருண் இருந்த இடத்திற்கே வந்து பிரச்சனை செய்திருந்தார்.
இது தப்புங்க
என்ன தான் ஹீரோவாக இருந்தாலும் பலி வாங்குவதற்காக இது போன்ற தேவையில்லாத வேலைகள் செய்வதை பார்க்கும்போதே கடுப்பாகத்தான் இருக்கிறது. முத்து இப்போது நடந்து கொள்ளும் விதம் குறித்து உங்க கருத்து என்ன நண்பர்களே சும்மாவே விஜயா முத்துக்கு ஒரு பிரச்சனை என்றால் தையத் தக்க என்று குதிப்பார். இப்போது முத்துவால் மீண்டும் மீண்டும் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது இதை வைத்து விஜயா இனி என்ன ஆட்டம் போடப் போகிறாரோ பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications