சிறகடிக்க ஆசையில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்! ரோகிணிக்கு எதிர்பாராத தண்டனை கொடுத்த விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணிக்கு யாரும் எதிர்பார்க்காத தண்டனையை விஜயா கொடுக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த சம்பவம் இந்த வாரம் முழுக்க நடைபெற்றது. எப்படியாவது ரோகிணியை பற்றிய உண்மைகள் குடும்பத்திற்கு தெரிய வரவேண்டும், அப்படி ரோகிணி பற்றிய உண்மைகள் தெரியும்போது விஜயா ரியாக்ஷன் என்ன என்பது பார்க்க ஆர்வத்தோடு இருந்த ரசிகர்களுக்கு சில நாட்களாக சூப்பர் எபிசோடு வந்தது.

Siragadikka aasai serial vijay tv

ஆனால் அடுத்த வாரத்தில் என்ன நடக்கும் என்பது குறித்த ப்ரோமோ தான் இப்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரைக்கும் ரோகிணி போல ஒரு மருமகள் கிடையாது என்று புகழாரம் சூட்டிய விஜயா இப்போது ரோகிணி ஜீவாவிடம் இருந்து வாங்கிய 30 லட்சம் பணத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல் மறைத்து விட்டார் என்று கோபத்தில் இருக்கிறார். அதுவும் அந்த பணத்தை தன்னுடைய அப்பா தந்தது என்று ரோகினி சொல்லிவிட்டாரே என்று கோபமும் ஏமாற்றமும் விஜயாவுக்கு அளவுக்கு அதிகமாக இருக்கிறது.

அதோடு நேற்று எல்லார் முன்பும் கன்னத்தில் அறைந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இத்தனை நாள் வரைக்கும் ரோகிணி கனவில் தான் விஜயா தன்னை வீட்டை விட்டு துரத்துவது போன்று கண்டு கொண்டிருந்தார். இப்போது நிஜத்திலேயே அதுபோல நடக்க தொடங்கி இருக்கிறது.

அதுபோல தனக்கு மனோஜ் சப்போர்ட் செய்வார் என்று நினைத்த ரோகிணிக்கு பெரிய ஏமாற்றம் தான் கிடைத்தது. தன்னை பற்றி ரோகிணி அசிங்கமாக பேசுகிறார் என்ற கோபத்தில் மனோஜ் நின்று கொண்டிருந்தது வீட்டில் இருந்த ஸ்ருதி, ரவி, மீனா உட்பட எல்லோரையுமே ஆச்சரியப்படுத்தியது.

Siragadikka aasai serial vijay tv

ஆனாலும் இந்த சீரியலில் ரோகிணி என்னதான் தப்பு செய்தாலும் அவர் மாட்டும் போது அவர் பாவம் என்பது போலத்தான் காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது. இத்தனையும் செய்தது ரோகிணி மனோஜுக்காக தானே என்று நேற்று வாதிட்டுக் கொண்டிருந்தார், அது உண்மைதானே என்று சொல்வது போல தான் காட்சிகளும் இருக்கிறது.

ஆனால் மீனா இந்த சீரியலில் கதாநாயகியாக இருந்தாலும் அவரை விட ரோகிணி தான் பாவம் என்பது போலத்தான் கதை போய்க்கொண்டிருக்கிறது. பாவம் ரோகிணி அவருக்கு பிடிக்காத கல்யாணத்தை அவங்க அம்மா செஞ்சு வைத்ததால்தான் அந்த பொண்ணு இவ்வளவு கஷ்டப்படுறது என்று கூட அவருக்கு ஆதரவாக சில கமெண்ட்கள் வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் வீட்டில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது மீனா ரோகிணியும் சாப்பிட கூப்பிடுகிறார். ரோகிணி முதலில் தயங்கினாலும் பிறகு மனோஜ் பக்கத்தில் வந்து டைனிங் டேபிளில் சாப்பிட உட்காருகிறார்.

Siragadikka aasai serial vijay tv

அப்போது கோபமான விஜயா நீ எழுந்திரு என்று கோபப்படுகிறார். அதோடு நான் சாப்பிட்டு முடிக்கிற வரைக்கும் நீ இந்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிட கூடாது. அங்க போய் நில்லு என்று மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் ரோகிணியும் மீனாவின் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் மீனாவை தான் தனக்கு சமமாக விஜயா சாப்பிட விடாமல் துரத்துவர்.

இப்போது ரோகிணிக்கும் அதே நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறார். பண விஷயம் தெரிந்ததற்கே இப்படி என்றால் ரோகிணி பற்றிய மொத்த உண்மையும் தெரியும்போது விஜயாவின் ஆட்டம் வேற லெவலில் இருக்கப் போகிறது. ஆனாலும் இனி அடுத்ததாக முத்து பற்றிய ஃப்ளாஷ் பேக் கதை தான் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+