60 ஆயிரம் ஏமாத்திட்டாங்க.. நகை எல்லாம் போயிடுச்சி.. “சிறகடிக்க ஆசை” சீரியல் ரேவதி பாட்டி எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் பாட்டி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் ரேவதி. இவர் சினிமாவில் சிறுவயதிலிருந்து நடித்துக் கொண்டிருந்தாலும் திருமணத்திற்கு பிறகு பிரேக் விட்டு இருந்தார் இப்போது மீண்டும் சீரியலில் நடித்துவரும் நிலையில் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் சினிமா துறையில் தான் பல வருடங்களாக இருந்தாலும் தனக்கு நடந்த அவமானங்கள் குறித்து பேசி இருக்கும் ரேவதி பாட்டி சிறகடிக்க ஆசை சீரியலுக்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.

அந்த வகையில் ரேவதி பாட்டியாக ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் ரேவதி நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி ,சிவக்குமார் போன்ற பழம்பெரும் நடிகர்களோடு நடித்து பிரபலம் அடைந்த அவர், சில வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
அதை தொடர்ந்து இப்போது மீனா சீரியல், பாக்கியலட்சுமி சீரியல், சிறகடிக்க ஆசை சீரியல், சக்திவேல் சீரியல் என்று பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் பல நடிகர்களோடு ஆரம்பத்தில் கதாநாயகியாகவும், தங்கச்சியாகவும் நடித்திருந்தேன்.
அந்த நேரத்தில் தான் எனக்கு திருமணம் முடிந்தது. திருமணத்திற்கு பிறகு நான் குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக நடிப்பை விட்டு விலகி இருந்தேன். என்னுடைய கணவருடைய குடும்பம் பெரிய குடும்பம். எனக்கு மகனோ அல்லது மகளோ கிடையாது. ஆனாலும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே என்னை பாசமாக பார்த்துக் கொள்கிறார்கள். என்னுடைய கணவர் மறைவுக்குப் பிறகு என் குடும்பத்தினர்கள் எல்லாரும் சேர்ந்துதான் என்னை மீண்டும் நடிக்க சொன்னார்கள்.
அப்போது நான் இத்தனை வருடங்கள் கழித்து நாம மீண்டும் நடிச்சா நல்லா இருக்குமா? என்று யோசித்தேன். அப்போ குடும்பத்தினர் கொடுத்த உத்வேகத்தால் நானும் பல ஆடிஷனில் கலந்து கொண்டேன். அப்படித்தான் மௌனராகம் சீரியலில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் குமரன் உங்களுக்கு அடுத்த சீரியலில் இன்னும் நல்ல கேரக்டர் தருகிறேன் என்று சொன்னார்.
நான் எப்படினாலும் பாட்டி கேரக்டர் தானே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சிறகடிக்க ஆசை சீரியலில் என்னுடைய கேரக்டர் மக்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு பெரும் என்று நான் நினைக்கவே இல்லை. அதுபோல ஆரம்பத்தில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது டப்பிங் யூனியலில் சேர்ந்தேன். அந்த நேரத்திலேயே 60,000 கட்டி தான் டப்பிங் யூனியனில் சேர்ந்தேன். கையில் பணம் இல்லாததால் என்னுடைய நகைகளை எல்லாம் விற்றும், அடகு வைத்து அந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை ரெடி செய்து கட்டினேன்.
ஆனால் யாருமே என்னை டப்பிங் கூப்பிடவில்லை. எனக்கு டப்பிங் பேசுவது ரொம்பவே பிடிக்கும். நான் நடிகை என்பதையே எல்லோரும் மறந்து விட்டார்களோ என்னவோ? என்று எனக்கு தோன்றுகிறது. இப்போது நான் சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு எனக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நான் கஷ்டப்பட்டு பணம் கட்டிய டப்பிங் யூனியலில் இருந்து என்னை இப்ப வரைக்கும் யாரும் டப்பிங் பேசுவதற்கு கூப்பிடவில்லை என்று அந்த பேட்டியில் ரேவதி பாட்டி பேசி இருக்கிறார்.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications