சிறகடிக்க ஆசை: மனோஜ், விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரோகிணி.. முத்து உடைத்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 11ம் தேதிக்கான எபிசோடில் மனோஜ்க்கு வந்த கடிதத்தை வைத்து விஜயாவும் மனோஜும் பயந்து கொண்டு இருக்க அந்த நேரத்தில் ரோகிணி வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். அதுபோல சத்யா பற்றிய உண்மைகளை முத்து மீனாவிடம் சொல்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மனோஜ் விஜயாவிடம் லெட்டரை கொடுத்து நடந்ததை சொல்ல விஜயா முதலில் அதிர்ச்சியாகுகிறார். பிறகு லெட்டரில் இருப்பது போல அப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு மனோஜ் ஒருவேளை ஒரு திருடன் திடீர்னு நம்ம வீட்டிற்கு வந்து அவன் அப்பாவை கத்தியால குத்த, அதை நீங்க பார்த்து உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து, ரோகிணியை அந்த திருடன் மேலிருந்து தள்ளிவிட்டு தப்பிச்சு போக அவனை முத்து கொன்னுட்டா..?

television siragadikka aasai serial vijay tv

ரோகிணி போன துக்கத்துல நானும் தற்கொலை பண்ணிக்குவேன் என்று ஒரு கதையை சொல்ல இதை கேட்டு விஜயா பயப்படுகிறார். அந்த நேரத்தில் மாடியில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டதும் திருடன் தான் வரான் என்று இருவரும் அலறுகிறார்கள். ஆனால் ரோகிணி மேல வர ரோகிணியிடம் நடந்த விஷயத்தை சொல்லி லெட்டரை கொடுக்க ரோகிணி லெட்டரை படித்து பார்த்துவிட்டு அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்று சொல்லி விடுகிறார்.

மறுநாள் காலையில் முத்துவிற்கு மீனாவின் அம்மா போன் போட்டு மீனா போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கு என்று சொல்ல, அது சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகி இருக்கும் என்று முத்து சொல்லி போனை மீனாவிடம் கொடுக்கிறார். அப்போது நேற்று வீட்டுக்கு வரேன்னு சொன்னியே ஏன் வரல என்று அம்மா கேட்க, பூ கட்டுற இடத்துல லேட் ஆயிடுச்சு என்று மீனா சொல்கிறார். பிறகு சீதா எங்க ஆஸ்பிட்டலில் குழந்தை பிறப்பதற்கு முன்னாடி செக்கப் பண்ணிக்கெல்லாம் பாதி காசு தான் என்று சொல்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அதற்கு மீனா இங்க இருக்கிறவங்களுக்கு எப்போ குழந்தை பிறக்கனுமோ அப்ப பிறக்கட்டும். அதைப்பற்றி நீ எதுவும் கேட்காத என்று கோபப்படுகிறார். பிறகு சத்யா பற்றி விசாரிக்க, சத்தியா குரூப் ஸ்டடிக்காக போயிருக்கான் என்று சொன்னதும் சரி என்று போனை வைத்துவிட்டு இப்பவாவது இவனுக்கு புத்தி வந்ததே என்று மீனா புலம்பி கொண்டிருக்கிறார். யாருக்கு என்ன ஆச்சு என்று முத்து கேட்க, இல்ல உங்களுக்கு அவனது சத்யாவை பற்றி பேசுனா பிடிக்காது.

ஆனாலும் சொல்லுறேன் அவன் இப்போ திருந்திட்டான். அவன் இப்போ குரூப் ஸ்டடி பண்ண போயிருக்கான் என்று சொல்ல, அவன் குரூப் ஸ்டடிக்கு போய் இருக்கானா? இல்ல குரூப்பா குடிக்க போயிருக்கான்னு எனக்கு தான் தெரியும் என்று முணுமுணுக்கிறார். அதற்கு மீனா அவனை பற்றி குறை சொல்லிட்டு தான் இருப்பீங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு ரோகிணி அம்மாவிற்கும் பையனுக்கும் தங்குவதற்காக வீடு பார்க்கிறார்.

television siragadikka aasai serial vijay tv

அப்போது வீட்டுக்காரர்கள் யாரெல்லாம் இருப்பீங்க என்று விசாரிக்க நான் என்னுடைய அம்மா பையன் மூன்று பேரும் இருப்போம் என்று சொன்னதும் ஹவுஸ் ஓனர் உங்க கணவர் எங்கே என்று கேட்க, அவர் துபாயில் இருப்பதாக சொல்ல அப்படின்னா வீடு கொடுக்க முடியாது ஏற்கனவே ஒரு பிரச்சனை ஆயிடுச்சு என்று சொல்ல, ஹவுஸ் ஓனரிடம் கெஞ்சி ஒரு பிரச்சனையும் வராது என்று சம்மதித்து அட்வான்ஸ் கொடுத்து விடுகிறார்.

அடுத்த கட்டத்தில் மீனா ஏற்கனவே உதவி செய்த செருப்பு தைக்கும் தாத்தா பாட்டிக்கு இன்றைக்கும் உணவு எடுத்துக்கொண்டு வருகிறார். அப்போது அவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த தாத்தா எங்களுக்கு மூணு ஜோடி செருப்பு தைக்க சொல்லி இருக்காங்க என்று சொல்ல மீனா யார் என்று பார்க்க அங்கு முத்து நிற்கிறார். பிறகு முத்து, மீனா இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாராட்டி கொள்கிறார்கள். ஆனால் இருவரும் கணவன் மனைவி என்பதை காட்டிக் கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

television siragadikka aasai serial vijay tv

பிறகு மீனா நான் பூ கொடுக்கணும் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். முத்து அங்கிருந்து கிளம்பி சவாரி முடித்துவிட்டு பார்க்கிங் ஏரியாவிற்கு வருகிறார். அங்கு செல்வம் குடித்துவிட்டு இருப்பதாக நண்பர்கள் சொல்கின்றனர். உடனே முத்து செல்வத்தை திட்டுகிறார். நாம வாரம் முழுக்க வேலை செஞ்சுட்டு உடல் அலுப்புக்காக ஒரு நாள் குடிப்போம் ஆனால் நீ என்ன இன்னைக்கு குடிச்சிருக்க... எதுக்காக இப்படி குடிச்சிருக்க? என்று விசாரிக்கின்றார்.

அப்போது செல்வம் தன்னுடைய பெரியப்பாவிற்கு அவருடைய மகன்கள் அறுபதாவது திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடினார்கள். இப்போது என்னுடைய அப்பாவுக்கு 60 ஆவது திருமண நாள் வருது அவருடைய திருமண நாளை அதே போல பெருசா கொண்டாடுனா தானே அவருக்கு மரியாதையாக இருக்கும். இல்லன்னா அவரை யாருமே மதிக்க மாட்டாங்க. பணம் இல்லாம நான் எப்படி கொண்டாடுவது என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+