சிறகடிக்க ஆசையில் டுவிஸ்ட்.. மீனாவிடம் நகையை பற்றி பாட்டி கேட்ட கேள்வி.. உளறிய விஜயா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் நகைகளை விற்று விட்டு கவரிங் நகையாக மாற்றி வைத்திருக்கும் மனோஜ் வீட்டில் மாட்டுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் மீனாவிடம் நகை பற்றி பாட்டி விசாரிக்க விஜயா உளறுகிறார். அது பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நாச்சியார் பாட்டியின் பிறந்தநாள் பங்க்ஷன் இந்த வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாட்டியின் பிறந்தநாளுக்கு கிப்ட் கொடுக்க வேண்டும் என்று முத்துவும் மீனாவும் மீனா வேண்டாம் என்று கழட்டி கொடுத்த நகையை வாங்கி கடையில் கொடுத்துவிட்டு புதிய நகை வாங்கி கொடுக்கலாம் என்று பிளான் போட்டு இருந்த நிலையில், மீனாவின் நகைகளை மனோஜ் தான் ஏமாந்து போன நாலு லட்சம் பணத்திற்காக விற்று இருக்கிறார்.

Television Siragadikka aasai serial

ஆனால் வீட்டில் உண்மை தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதற்காக தங்க நகைகளை போலவே கவரிங் நகைகளை வாங்கி கொடுத்திருக்கிறார். இதை தெரியாத முத்துவும் மீனாவும் நகைக்கடைக்கே இந்த நகைகளை கொண்டு போக அங்கு உண்மை தெரிய வந்திருக்கிறது. ஆனால் இது பற்றி அண்ணாமலை இடம் சொல்லலாம் என்று முத்து எடுத்த முடிவுக்கு மீனா தடை போட்டு தன் மீது சத்தியம் வாங்கி பாட்டி பிறந்தநாள் முடியுற வரைக்கும் வீட்டில் இதை பற்றி பேசக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் முத்து மனோஜ் மீது சரியான கோபத்தில் இருக்கும் நிலையில் வீட்டில் இருந்தால் பிரச்சனை வரும் என்று வீட்டை விட்டு கிளம்பி சவாரிக்கு போயிருக்கிறார். அதே நேரத்தில் பாட்டி தன்னுடைய பிறந்தநாளுக்கு தன்னுடைய மனசுக்கு பிடிச்ச மாதிரி யார் கிப்ட் தராங்களோ அவங்களுக்கு நான் ஒரு ஸ்பெஷல் கிப்ட் கொடுக்கப் போறேன் என்று சொல்லி இருக்கிறார்.

Television Siragadikka aasai serial

இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது முத்து மனோஜ் பற்றி வீட்டில் உண்மைகளை சொல்வாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் நாளைக்கு என்று ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் மீனா கழுத்தில் மஞ்சள் கயிறு மட்டும் போட்டு இருப்பதை பார்த்ததும் பாட்டி இன்னும் நீ அந்த நகைகளை வாங்கி போடவில்லையா? என்று மீனாவிடம் கேட்க, அதற்கு மீனா உண்மையை சொல்லவா வேண்டாமா என்று திரு திருவென முழித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நகைகளை விஜயா இன்னும் தரலையா என்று மீனாவிடம் பாட்டி கேட்டதும் விஜயாவும் மனோஜும் இதைப்பற்றி என்ன சொல்லலாம் என்று திணறிக் கொண்டிருக்கின்றனர். பிறகு அத்தை நான் அந்த நகைகளை கொடுத்துட்டேன் என்று விஜயா சொல்லும்போது மனோஜ் விஜயாவை தடுத்து நிறுத்துகிறார். இதனால் நாளை எபிசோடில் நகை பற்றிய உண்மை வெளிவருமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Television Siragadikka aasai serial

ஏற்கனவே சிறகடிக்க ஆசை சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் கே.ஆர் விஜயா மற்றும் வடிவுக்கரசி இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருக்கும் நிலையில் பாட்டியின் பிறந்த நாளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஃபங்ஷன் முடிய போகிறது என்று தெரிகிறது. சிறப்பு விருந்தினர்களை கூட்டிக்கொண்டு வந்து முத்து எல்லாரையும் அசர வைக்க போகிறார் என்றும் யூகிக்கப்படுகிறது. இதனால் பாட்டியின் பிறந்தநாள் முடிந்த பிறகு தான் நகை பற்றிய பிரச்சினை வெடிக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் கடைசி நேரத்தில் எதுவும் மாற்று நடக்கப் போகிறதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+