Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சிறகடிக்க ஆசை” சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன? குடும்பம் உடைபடுமா..? “வித்யா” சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் "வித்யா" கேரக்டரில் நடிகை "ஸ்ருதி நாராயணன்" நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தபோது சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் இப்போது இணையத்திலும் சரி சின்னத்திரையிலும் சரி அதிகமான ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கதை, கலகலப்பான சண்டை காட்சிகள் நிறைந்த குடும்ப கதையாக இருப்பதால் இந்த சீரியலை பலதரப்பட்டவரும் ரசித்து வருகிறார்கள்.

Siragadikka aasai serial Vidya character Shruthi Narayanan interview

அதனாலேயே இந்த சீரியல் டி.ஆர்.பி யில் டாப் 10 இடத்தில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் அதிக அளவில் பிரபலமாகிவிட்டனர். அதிலும் குறிப்பாக முத்து- மீனா கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா, மனோஜ்- ரோகிணி கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா மற்றும் சல்மா, ரவி-ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் பிரணவ் மோகன் மற்றும் பிரீத்தா ரெட்டி உட்பட எல்லோருமே பிரபலமாக இருக்கின்றனர்.

அவர்களுக்கு சமூக வலைத்தளத்திலும் அதிகமான பாலோவர்ஸ் அதிகரித்து கொண்டிருக்கின்றனர். அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களை இவர்கள் பகிர்ந்து வருவதாலே ரசிகர்கள் அடுத்து சீரியலில் என்ன மாதிரி கதை போகப்போகிறது என்பதையும் கணித்து விடுகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியலில் சின்ன சின்ன கேரக்டரில் எப்போதாவது வரும் நடிகர்கள் கூட பிரபலம் ஆகிவிட்டனர்.

அந்த வகையில் ரோகிணியின் தோழி வித்யா கேரக்டரில் நடிக்கும் நடிகை நாராயணன் இப்போது எங்கே சென்றாலும் நீங்க சிறகடிக்க சீரியலில் நடிக்கிறீங்களே அவங்கதானா என்று பலர் கேட்கிறார்களாம். அதோடு இவருக்கும் அதிகமான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். இது ஸ்ருதிக்கு அதிகமான மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம். அதோடு இப்போது கூடுதல் ஒரு மகிழ்ச்சியும் கிடைத்திருக்கிறதாம்.

அது என்னவென்றால் ஸ்ருதி கல்லூரி படிப்பை முடித்து இருக்கிறார். அதிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வாங்கி இருப்பதாக கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து அவருக்கு அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லோரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ருதி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கும் போது சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று கேட்ட கேள்விக்கு, அடுத்து ரசிகர்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இந்த சீரியலில் நடக்கப்போகிறது என்று கூறியிருக்கிறார்.

அதோடு உங்களால் தான் இனி மனோஜ் மற்றும் ரோகிணி குடும்பத்தை விட்டு பிரியப் போகிறார்களா? என்று கேட்ட கேள்விக்கு எனக்கு அது தெரியவில்லை அது இயக்குனர் எடுக்கும் முடிவுதான். இயக்குனர் சொல்கிறபடி தான் நான் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதே கேள்வியை தான் வெளியே போகும் இடத்திலும் பலர் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதுபோல இந்த சீரியலில் ரோகிணியாக நடிக்கும் சல்மா தான் தனக்கு பல விஷயங்களை சொல்லி தருகிறார் என்றும் கூறியிருக்கிறார். நான் நடிக்கும்போது செய்யும் சின்ன சின்ன தப்புகளை கூட சுட்டிக்காட்டி சல்மா எனக்கு அட்வைஸ் கொடுப்பார். அதுபோல என்னுடைய உடை மற்றும் ஜுவல்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து கூட எனக்காக பல அட்வைஸ் செய்வார் என்று ஸ்ருதி நாராயணன் பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+