சிறகடிக்க ஆசை: போனில் மிரட்டும் சிட்டி.. பணத்தை திருடி பார்வதியிடம் மாட்டும் ரோகிணி? விஜயா முடிவு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜயா வக்கீலிடம் இருந்து வாங்கிய இரண்டு லட்சம் பணத்தை ரோகிணி திருடுகிறார். இதனால் விஜயாவிற்கு பெரும் பிரச்சனை வரப்போகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம் இப்போது வந்துவிட்டது. இதுவரைக்கும் ரோகிணி ஒரு முறை கூட வீட்டில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அவர் தரப்பில் பல தப்புகள் இருந்தாலும் அதெல்லாம் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக செய்தது என்று ரோகிணி ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் புது தப்பு செஞ்சு கொண்டே இருக்கிறார்.

ஆனால் முத்து மற்றும் மீனாவிற்கும் மட்டும் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இது ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தி இருந்தது. சமீபத்தில் கூட சத்யா திருடிய வீடியோவை ரோகினி சிட்டியை வைத்து லீக் செய்திருந்தார். இதனால் முத்து மற்றும் மீனாவிற்கு தான் பெரிய பிரச்சனை ஏற்பட்டது
முத்து வீடு கட்டுவதற்கு வைத்திருந்த பணம், மற்றும் கார் பைனான்ஸ் போட்டு கிடைத்த பணத்தை வைத்து தான் இப்போது விஜயாவை கேஸை வாபஸ் வாங்க வைத்திருக்கிறார்கள். விஜயா வக்கீலிடம் 2 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு கேஸை வாபஸ் செய்தது வீட்டில் யாருக்கும் தெரியாது.

இந்த நிலையில் இந்த ரகசியங்களை ரோகிணி பார்வதி மூலமாக தெரிந்து கொள்கிறார். அதே நேரத்தில் சிட்டியிடம் ரோகிணியின் பிஏ, ரோகினி லேசு பட்ட ஆளு கிடையாது சீக்கிரத்தில் பணம் தரமாட்டா என்று சொன்னதும் சிட்டி ரோகிணிக்கு போன் செய்து உனக்கு என் மேல பயம் இல்லையா? நீ வேணா பாக்குறியா அவன் செத்துப்போன உன் வீட்டு முன்னாடி பிணத்தை கொண்டு போட்டுருந்தேன்.
எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் என்று எல்லா விஷயத்தையும் சொல்லிடுவேன் என சொல்ல ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார். அதோடு இரண்டு லட்சம் பணம் வேண்டும் என்று சிட்டி மிரட்டுவதால் விஜயா வக்கீலிடம் வாங்கி பார்வதியிடம் கொடுத்து வைத்திருக்கும் பணம் ரோகிணிக்கு ஞாபகம் வருகிறது.

உடனே ரோகினி பார்வதி வீட்டிற்கு சென்று பார்வதி மறைத்து வைத்த பணத்தை எடுக்கிறார். இந்த பிரமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோகிணி பணத்தை எடுக்கும்போது பார்வதி இடம் மாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. அதே நேரத்தில் பார்வதியிடம் மாட்டாமல் ரோகிணி இந்த பணத்தை சிட்டியிடம் கொடுத்து விட்டாலும் விஜயா பார்வதியிடம் பணத்தைக் கேட்கும் போது இந்த பண விஷயம் ரோகிணிக்கு மட்டும்தான் தெரியும் அதனால் ரோகிணி தான் எடுத்திருப்பார் என்று பார்வதி சொல்ல வாய்ப்பு இருக்கிறது.
அப்படி பார்வதி சொன்னால் விஜயா வீட்டில் பூகம்பமே வெடிக்க போகிறது. விஜயா பணம் வாங்கிய விஷயமும் வெளியே தெரியவரும். ஆனால் வழக்கம் போல விஜயாவிடம் ரோகிணி நடித்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறாரா? அல்லது வீட்டில் சிக்கப் போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications