Exclusive: சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி மாட்டினாலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு! எழுத்தாளர் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் எழுத்தாளர் குரு சம்பத் குமார் ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ரோகிணி குடும்பத்திடம் மாட்டும் போது என்ன நடக்கும் என்றும் சில விஷயங்களை ஹிண்ட் கொடுத்து இருக்கிறார்.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை சீரியல் தான் இருக்கிறது. இந்த சீரியலில் ரோகிணி குடும்பத்தினரிடம் மாட்டி இருக்கிறார். இது நிஜமா அல்லது கனவா என்பது பலருக்கும் சந்தேகமாக இருக்கிறது. காரணம் ரோகிணி பற்றிய உண்மைகள் இவ்வளவு சீக்கிரமாக தெரிய வருகிறதே என்பது வியப்பாக இருக்கிறது.

Siragadikka aasai serial vijay tv

புது கேரக்டர் வர காரணம்

அதே நேரத்தில் இந்த வாரத்தில் ஐபிஎல் மேட்ச் நடப்பதால் இந்த சீரியலில் ரோகிணி பற்றிய ரகசியங்களை உடைத்து விட்டார்களா? அப்போ இனி என்ன நடக்கும் என்ற கேள்விகுறிகளும் அடுத்தடுத்து வந்து விழுந்து கொண்டிருக்கிறது. அதுபோல நேற்றைய எபிசோடு பார்த்த ரசிகர்களுக்கு சில விஷயங்கள் புரிந்திருக்கும், அதாவது முத்துவும் மீனாவும் கறிக்கடைக்காரரை பார்த்து அதிர்ச்சியில் நிற்பார்கள். அப்போது பரசுராமன் இவர்தான் மாப்பிள்ளையின் தாய் மாமா என்று அறிமுகப்படுத்துவார்.

ரசிகர்களின் கமெண்ட்

பிறகு நாங்கள் இவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று முத்துவும் மீனாவும் தனியாக கூட்டிக்கொண்டு போவார்கள். பிறகு அடுத்த கட்டத்தில் அப்படியே வீட்டிற்கு வருவது போன்ற காட்சிகள் இருந்தது. இதனால் ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்தபோது மீனா இதுதான் நடக்கும் என்று கனவு காண்கிறாரா? என்ற கேள்விகளும் எழுகிறது. அதே நேரத்தில் இதற்கு வாய்ப்பே இல்லை, உண்மையாகத்தான் இருக்கும் இந்த காட்சியில் ரவி ஸ்ருதியை காணவில்லையே பாருங்களேன் என்று சில கமாண்டுகளும் வருகிறது.

ட்விஸ்ட் இருக்கு

ஆனால் இந்த சீரியலில் எழுத்தாளர் குரு சம்பத் குமார் ரோகிணி மாட்டும் போது என்ன நடக்கும் என்று ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்தியேகமாக பேசி இருக்கிறார். அதில் அவர் சொல்லும் போது ரோகிணி பற்றிய விஷயங்கள் குடும்பத்திற்கு தெரிய வரும்போது அதில் இன்னொரு டூரிஸ்ட் வைத்திருக்கிறோம் என்று சிரிக்கிறார். ரோகிணி விஷயம் குடும்பத்திற்கு தெரிய வரும் போது ஒரு லாக் போட்டு வைத்திருக்கிறோம். அந்த லாக் திறக்கும் போது இன்னொரு லாக் விழுந்து விடும். அப்படித்தான் கதை இருக்கிறது என்று குழப்பி விட்டிருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணி வில்லி இல்லை

அதோடு நாங்கள் இந்த சீரியலில் ரோகிணி என்ற ஒரு முக்கியமான கேரக்டரை முதலிலேயே வைத்துவிட்டோம். எப்படி முத்துமீனா கேரக்டர் வைத்து விட்டோமோ அது போல தான் ரோகிணிக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள கேரக்டர்தான். ரோகிணி அவங்க அம்மா செய்து வைத்த திருமணத்தால் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்காங்க, அதனால அவங்களுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று சில உண்மைகளை மறைக்கிறாங்க.

பில்டப் கூட்டுறாரே

ரோகிணி கேரக்டரை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் மலேசிய மாமா, ஃப்ரெண்ட் வித்யா என்று பல கேரக்டரை இறக்கி இருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் அடுத்த என்ன திருப்பம் செய்யலாம் என்று நாங்கள் டைரக்டர், சேனல் டீம், ப்ரொடக்ஷன் டீம் எல்லோரும் சேர்ந்து பேசுவோம். எந்த இடத்தில் டிஆர்பி குறைந்திருக்கு, எந்த இடத்தில் பாராட்டு வாங்கி இருக்கு என்று எல்லாம் பார்த்து தான் அடுத்த திருப்பத்தை கொண்டு வருவோம் என்று பில்டப்பாக சொல்லி இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணி தப்பிச்சாச்சு

இதனால் ரோகிணி இப்போது மொத்தமாக குடும்பத்திடம் மாட்டவில்லை என்று தெரிகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு வெற்றி வசந்த்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரோகிணியும் அங்கு இருந்தார். அதுபோல பாட்டியும் வந்திருந்தார். இதனால் ரோகிணி இப்போது வீட்டை விட்டு வெளியே போகவில்லை என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+