சிறகடிக்க ஆசை: ஒன்னு சேர்ந்த மனோஜ் மற்றும் பிஏ.. ரோகிணிக்கு தான் அடுத்த பிரச்சனையா? வீட்டை விட்டு போகும் மீனா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது போன்ற சில சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் ஏற்கனவே மீனா மற்றும் அருண் திருமணம் விஷயம் முத்துவிற்கு தெரிய வந்திருப்பதால் பெரும் பிரச்சனை வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக ரோகிணிக்கு பிரச்சனை வருவது போன்ற சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. சீதா குடும்பம் மீதும் அவருடைய குடும்பத்தின் மீதும் அதிகமான நம்பிக்கை வைத்திருந்த முத்துவிற்கு இப்போது பெரிய அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. அருணுக்கும் சீதாவிற்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என்ற உண்மை தெரிந்து விட்டது. இதனால் முத்து மட்டுமல்ல முத்து குடும்பம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

Siragadikka aasai serial vijay tv

இதுவரைக்கும் மீனாவிற்கு ஒவ்வொரு இடத்தில் சப்போர்ட் செய்து கொண்டிருந்த அண்ணாமலை கூட இப்போது தலைகுனிந்து இருக்கிறார். இன்றைய எபிசோடில் கூட முத்து அந்த அருண் ஏதோ என்ன ஜெயித்துட்ட மாதிரி உட்கார்ந்திருக்கிறான். ஆனால் இந்த குடும்பத்தினர் என்னுடைய முடிவுக்கு காத்திருந்தாங்க. சீதா என்னுடைய சம்மதத்துக்காக இத்தனை நாட்களாக காத்திருந்தா, அதனாலதான் நான் மனசு மாறினேன் அந்த அருண் என்ன வேணா நினைச்சுட்டு போகட்டும் என்று முத்து பேசியது பலரையும் ஃபீல் பண்ண வைத்தது.

மீனா அப்போது கூட உண்மையை சொல்லாமல் அமுக்கினி மாதிரி முழித்துக் கொண்டிருந்தார். இதனால் இப்போது சோசியல் மீடியாவில் மீனா மற்றும் சீதாவை தான் பலரும் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். முத்துவை அய்யோ பாவம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த சீரியலில் மனோஜாக நடிக்கும் ஸ்ரீதேவா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ரீ தேவா மற்றும் ரோகிணியை மிரட்டி கொண்டு இருக்கும் பிஏ இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அப்போது மனோஜ் என் பொண்டாட்டியை யாரோ பணம் கேட்டு மிரட்டிட்டு இருக்காங்களாம் அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டு கேட்கிறார். இந்த புகைப்படங்களை பார்க்கும்போது அடுத்ததாக மனோஜும் பிஏவும் மீட் பண்ண போகிறார்களா? இருவரும் ஒன்று சேர்ந்தால் ரோகிணியின் நிலைமை அவ்வளவுதான் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு ரோகிணியை பிஏ அவருடைய ஷோரூமுக்கே வந்து மிரட்டி இருந்தார்‌ அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் இது. ஏற்கனவே ரோகிணி பிஏவிடம் நீ வேணும்னா முத்துவிடம் போய் சொல்லிக்கோ உனக்காக நான் பயந்துட்டே இருக்கிறதுக்கு குடும்பத்திற்கு உண்மை தெரிஞ்சா நிம்மதியாவது இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார். இதனால் இப்போதைக்கு ரோகிணியை மிரட்ட வேண்டாம் என்று சிட்டி கொடுத்து ஐடியாவால் பிஏ இப்போதைக்கு ஒதுங்கி இருக்கிறார்.

Siragadikka aasai serial vijay tv

இது ஒரு பக்கம் இருக்க நாளைக்கான எபிசோடில் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அருண் சீதா ரெஜிஸ்டர் மேரேஜுக்கு அருணுக்கு சப்போர்ட்டாக கையெழுத்து போட்டேன், அதுபோல பொண்ணு சீதா சார்பாக அவங்க அக்கா தான் கையெழுத்து போட்டு கல்யாணத்தை முன் நின்று நடத்தி வச்சாங்க என்று சொன்னதும் அதை கூட நம்பாமல் முத்து பேசிக் கொண்டிருக்கிறார். கடைசியில் மீனா நான் தான் கல்யாணத்தை நடத்தி வைத்தேன் என்று உண்மைகளை சொல்லி இருக்கிறார். இதனால் முத்து ஏமாந்து போய் இருக்கிறார் இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+