இதய சுரங்கத்துக்குள் எத்தனை கேள்வி...!
சென்னை: கண்ணதாசனின் வரிகளில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் சார் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தின் பாடல் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்..
இந்த பாடலே படத்தின் கதையையும், கதா பாத்திரங்களின் மன நிலையையும் சொல்லிவிடும். காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷங்களில் ஒன்று இந்த பாடல்.
இதை இன்று இரவு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியாளர் பாடுகிறார். அதை ஒளிபரப்ப உள்ளது விஜய் டிவி.

ஸ்ரீவித்யா கமல்
நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீவித்யா, நடிகர் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் இந்த படத்தின் பெயர் அபூர்வ ராகங்கள். இதில் கடைசி சில காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருப்பார். இவரின் அறிமுக படம் என்றாலும் ஆரம்பமே படு அமர்க்களம் போல ரஜினி சிகரெட், கருப்பு போர்வை என்று வித்தியாசமாக காட்சி தருவார்.

ஒல்லியாக கமல்ஹாசன்
மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருக்கும் கமல்ஹாசன் மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பது போல தன்னைவிட வயது அதிகமான ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டு இருப்பார்.அவர்தான் ஸ்ரீவித்யா.அதை தைரியமாக அவரிடமும் சொல்ல இப்படி கதை நகரும்.

சிக்கலான கதை
ரொம்ப ரொம்ப சிக்கலான அம்மா பெண் கதை இது. இதை லாவகமாக கையாண்டு, முடிவையும் சாதகமாக கொடுத்து படத்தை இயக்கி இருப்பார் இயக்குநர் சிகரம். பார்க்கும்போது சிலருக்கு என்னடா கதை இது என்று கூட எண்ண தோன்றும். ஆனால், திரைக் கதையை நகர்த்தும் விதத்தில்தான் சூட்சுமத்தை கையாண்டு இருப்பார் பாலச்சந்தர்.

சூப்பர் சிங்கர்
இன்று இரவு விஜய் டிவியில் இசை அமைப்பாளர் அனிருத் முன்னிலையில் நடைப்பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதில் ஒரு போட்டியாளர் பாடும் இந்த பாடல் பல நினைவுகளை கிளறிவிட்டு இருக்கிறது. இன்னும் பாட இருக்கும் போட்டியாளர்களின் பாடலையும் கேளுங்கள்.
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications