கிண்டல் செய்த ரசிகர்.. "அதைப்பற்றி யோசிங்க.." பளார் பதிலடி கொடுத்த சிவாங்கி!
சென்னை: குக் வித் கோமாளி இந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறித்து ரசிகர் ஒருவர் கிண்டல் செய்ததற்கு சிவாங்கி பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் தொலைகாட்சியில் மிகவும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ என்றால் அது குக் வித் கோமாளி. தற்போது 3ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஹைலைட்டே கோமாளிகள் செய்யும் அட்டகாசம்தான்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு சிரிப்பு சப்தம் கேட்டால் குக் வித் கோமாளி பார்க்கிறார்கள் என்ற அர்த்தம். அந்த அளவுக்கு மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

மணிமேகலை
இந்த நிகழ்ச்சியில் புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி, குரோஷி உள்ளிட்டோர் காமெடி செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் வரும் சிவாங்கி, புகழ் ஆகியோர் சினிமாவில் நடித்து வருகிறார்கள். புகழ் ஹீரோவாக ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங்
இதனால் அவர் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் வந்து ரசிகர்களை மகிழ்விப்பார். இந்த நிலையில் இந்த வாரம் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை. இதை அறிந்த ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நல்ல வேளை இந்த வாரமும் சிவாங்கி இல்லை, நன்றி ப்ரோ என கேலி செய்து ட்வீட் போட்டிருந்தார்.

ட்விட்டரில் ஷேர்
இந்த ட்வீட்டை தனது ட்விட்டரில் ஷேர் செயதுள்ளார். அதில் சிவாங்கி, இல்லாத என்னை பற்றி பேசுவதற்கு பதிலாக நிகழ்ச்சியில் இந்த வாரம் பங்கெடுக்கும் கோமாளிகள் பற்றி பேசினால் இன்னும் சிறப்பாக இருக்குமே! அதை பற்றி யோசிக்கலாம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சிவாங்கியின் பாசிட்டிவ் அப்ரோச
சிவாங்கியின் இந்த பாசிட்டிவான பதில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தன் மீதான வெறுப்பையும் மிகவும் பாசிட்டிவாக எதிர்கொள்கிறார். அண்மையில் டான் படத்தில் அவர் நடித்த விதத்தை கூட ஏதோ குக்வித் கோமாளி ஷோ போல் நடித்துள்ளார் என பலர் கிண்டல் செய்தனர். ஆனால் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை.












Click it and Unblock the Notifications