கேவலம் 3 கோடிக்கா சிவாஜி வீடு ஜப்தி? அந்த பெரிய நடிகர்களிடம் போயிருக்கலாமே? மனசு வலிக்குது: பிரபலம்
சென்னை: சிவாஜி குடும்பம் மீது தமிழ் சினிமா நடிகர்களுக்கு நிறைய மதிப்பு என்றுமே உள்ளது.. சில முக்கியமான நடிகர்களிடம் சென்று, நிதி சிக்கலை சொல்லி, உதவி கேட்டிருந்தால், நிச்சயம் அவர்கள் உதவியிருப்பார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார.
Valai Pechu Anthanan யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் அந்தணன், "தமிழ் சினிமாவின் தலைமை செயலகமாக கொண்டாடப்படுகிற இடம் அன்னை இல்லம்.. சிவாஜி கட்டிக்காத்த பெருமையை காற்றில் பறக்க விட்டுள்ளார் அவரது பேரன் துஷ்யந்த்.. இவரும், இவரது மனைவியும் சேர்ந்து, பைனான்ஸ் வாங்கி, திருப்பி தராமல் வட்டி அதிகமாகிவிட்டதே ஜப்திக்கு காரணம் என்கிறார்கள்.

அப்பீல் செய்திருக்கலாமே
இது தொடர்பான மேல்முறையீடு இனி செய்வார்கள் என்றாலும், ஒரு கம்பீரமான தலைவர், தமிழ் சினிமாவின் தலைமகன் என்று கொண்டாடப்படுகிற நடிகரின் வீட்டுககே இந்த நிலைமையா என்று பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்..
இன்றைய தினம் சினிமா எடுக்க வேண்டுமானால், 100 பேரில் ஒருத்தர் மட்டுமே அதில் வெற்றி பெறுகிறார்.. மற்றபடி, தங்களது வீடு நிலம், மனைவியின் தாலி உட்பட அனைத்தையும் விற்றுவிட்டு போகும் தயாரிப்பாளர்கள்தான் இங்கு அதிகம்.
3.75 கோடி கடன் வாங்கியிருக்கிறார் துஷ்யந்த் தம்பதியினர்.. இதுதான் இன்று இத்தனை கோடியாக உயர்ந்துள்ளது.. எனினும், கடன் தொகையை திருப்பி தர முடியாத பட்சத்தில், அவங்க பெயரிலேயே படத்தை மாற்றி தரும்படி நிறுவனம் முன்கூட்டியே அறிவுறுத்தியிருக்கிறது. அப்படி செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. அல்லது இந்த விவகாரம் தொடர்பாக அப்பீல் செய்து வழக்கு நடத்தியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. இன்று ஜப்தி செய்யும் அளவுக்கு வந்துவிட்டது.
விக்ரம் பிரபு, பிரபு
சினிமாவில் வாழ்ந்து, சினிமாவையே சுவாசித்து வளர்ந்த துஷ்யந்த்துக்கு இது எப்படி தெரியாமல் போனது தெரியவில்லை.. துஷ்யந்த்தை பொறுத்தவரை, இங்கு தோல்விபட ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார்.
எனினும், தன்னையே ஹீரோவாக வைத்து, இன்னொரு முயற்சியாக அந்த படத்தை எடுத்திருக்கலாம் அல்லது விக்ரம் பிரபு வைத்து படத்தை எடுத்திருக்கலாம். வெளிநபரை வைத்து படம் எடுத்து சம்பாதிக்க முடியுமா? எதற்காக வெளிநபரை வைத்து, அதுவும் கடன் வாங்கி படம் எடுக்கணும்? விஷ்ணு விஷாலை வைத்து, கடன் வாங்கி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
பெரிய நடிகர்களிடம் உதவி
சிவாஜி குடும்பம் மீது தமிழ் சினிமா நடிகர்களுக்கு நிறைய மதிப்பு என்றுமே உள்ளது.. சில முக்கியமான நடிகர்களிடம் சென்று, நிதி சிக்கலை சொல்லி, உதவி கேட்டிருந்தால், நிச்சயம் அவர்கள் உதவியிருப்பார்கள்.
சந்திரமுகி படத்தில் ரஜினி மாதிரி, பல பேர் முன்வந்து உதவி செய்திருப்பார்கள்.. சிவாஜி குடும்பத்தின் மீது பேரன்பு கொண்ட தானு மாதிரியான தயாரிப்பாளர்கள் பலர் உண்டு. பெரிய நடிகர்களை வைத்து, இந்த படத்தை தயாரித்து கொடுங்கள் என்றாவது கேட்டிருக்கலாம். நிச்சயம் உதவியிருப்பார்கள்.
ஏராளமான பெருமை வாய்ந்த சிவாஜியின் வீட்டை 3 கோடி ரூபாய் கடனுக்காக ஜப்தி என்பது ஜீரணிக்க முடியவில்லை.. இது சிவாஜியின் பெருமையையே ஜப்தி செய்வது போல இருக்கு" என்று வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications