விஜய் டிவியில் எனக்கு சம்பளம் இவ்வளவு தான்! அவர் மட்டும் இல்லன்னா! வெளிப்படையாக பேசிய சிவகார்த்திகேயன்
சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் முரளி மகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி மற்றும் அதிதி நடிப்பில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அப்போது விஜய் டிவியில் தனக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் என்று பேசியிருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஆரம்பத்தில் போட்டியாளராக கலந்து கொண்டு பிறகு விஜேவாக மாறி இப்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் டிவியில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு இசை கச்சேரிகளில் மிமிக்கிரி கலைஞராக வலம் வந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் அப்பா திருச்சியில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். ஆனால் திடீரென்று அவர் இறந்து போய் இருக்கிறார். அப்போது சிவகார்த்திகேயன் கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்தாராம். தன்னுடைய அப்பாவை போல நானும் போலீசாக வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவருடைய அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை என்பதால் மிமிக்ரி பக்கம் திரும்பி இருக்கிறார்.
அதற்கு பிறகு தான் விஜய் டிவியில் வேலை கிடைத்திருக்கிறது. சில வருடங்கள் விஜய் டிவியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார்.
நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமாக இருக்கும் தீபக்கிடம் கூட சீரியலில் நடிக்க சிவகார்த்திகேயன் வாய்ப்பு கேட்டதாக தீபக் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதற்கு தான் மறுத்துவிட்டேன் நீ சினிமாவில் முயற்சி செய் சீரியல் வேண்டாம் சீரியலில் வந்தால் கடைசி வரைக்கும் சீரியல் தான் இருக்க வேண்டும்.
இவர் சீரியல் நடிகர் என்ற ஒரு முத்திரை குத்தி விடுவார்கள் என்று அவரிடம் சொன்னேன் அது அவருக்கு அப்போது வருத்தம் கொடுத்து இருக்கும் நான் என்று நினைத்தேன். பிறகு சினிமாவில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் ஜெயித்த பிறகு இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று தீபக் சொல்லியிருந்தார்.
அதுபோல சின்னத்திரையில் சிவகார்த்திகேயன் இருக்கும்போது அவருக்கு திருமணம் நடந்து விட்டது. அவருடைய சொந்த மாமன் மகளை தான் சிவகார்த்திகேயன் திருமணம் செய்து இருந்தார். திருமணத்திற்கு பிறகு குடும்ப பொறுப்பு அதிகரித்து விடுவதால் பலரும் தங்களுடைய கனவை நோக்கி பயணிக்காமல் அப்போதைய வருமானத்தை நோக்கி தான் பயணித்து வருகிறார்கள்.
ஆனால் சிவகார்த்திகேயனுக்கு அந்த மாதிரி குடும்ப நெருக்கடி ஏற்படவில்லை என்று தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடித்துள்ள நேசிப்பாயா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது மாமனார் என்பது எல்லோருக்கும் முக்கியமான உறவு.
ஆகாஷுக்கு பிரிட்டோ சார் போன்ற ஒரு நல்ல மாமனார் அமைந்திருக்கிறார். அவர்தான் எனக்கு போன் செய்து என்னுடைய மகளும் மருமகனும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்களுடைய விழாவில் நீங்கள் கலந்து கொள்ளனும் என்று சொன்னார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
எனக்கு ஆகாஷுக்கு கிடைத்தது போல ஒரு நல்ல மாமனார் கிடைத்திருக்கிறார். எனக்கெல்லாம் யாரும் பெண் கொடுக்கவே மாட்டார்கள். ஏனெனில் நான் திருமணம் செய்த போது எனக்கு நல்ல வேலை இல்லை. விஜய் டிவியில் ஒரு ஷோ நடத்தினால் 4000 கொடுப்பார்கள் அதை வைத்து தான் குடும்பத்தை நடத்த வேண்டும்.
என்னுடைய மாமனார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு தாய் மாமா ஆக அவர் இருந்தாலும் அவர் நீ சரியான வேலையை செய் என்று சொன்னது கிடையாது. நான் வாங்கிய சம்பளத்திற்கு எனக்கு அப்போது அவர் ரொம்பவே சப்போர்ட் பண்ணாரு. அதனால இந்த மேடையில் எங்க மாமனருக்கும் நன்றி சொல்லணும்னு நினைக்கிறேன்.
43 வயதில் அவருக்கு அட்டாக் வந்துடுச்சு. எங்க அப்பா இறந்த டைம் அது. அவருக்கும் இரண்டு பொண்ணுங்க எங்க வீட்டில் நானும் எங்க அக்காவும் இருந்தோம். அதனால எங்க நாலு பேரையும் பாக்கணும்னு வேலையை விட்டுட்டாரு. நீ நல்லா படிச்சிருக்க தானே வேலைக்கு போய் ஒரு லட்சம் சம்பளம் வாங்குங்க என்று என்ன விரட்டல.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications