100 கோடி சம்பளம் வாங்கினாலும் சிவகார்த்திகேயனால் விஜய் ஆக முடியாது.. காரணம் இதுதான்! ஷாம் ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஷாம் பேட்டி ஒன்றில் பேசும் போது சிவகார்த்திகேயன் எப்போதும் தளபதி விஜய் ஆக முடியாது என்று பேசி இருக்கிறார். அதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் ஷாம் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கலக்கி கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் கடைசியாக விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் ஸ்பெஷல் கேரக்டரில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் கெஸ்ட் ஆக சிவகார்த்திகேயன் வந்தாலும் விஜய் தன்னுடைய துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுத்து நீங்க இனி இவங்கள பார்த்துக்கோங்க என்று மக்களை நோக்கி கை காட்டியது பெரும் வரவேற்பு பெற்றது.

Sivakarthikeyan Vijay

ஏற்கனவே விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு நேரமாக ஈடுபட போகிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இனி சினிமாவை சிவகார்த்திகேயனிடம் தான் விஜய் கொடுக்கிறார் என்பது பலருடைய கருத்தாக இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ஷாம் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அதில் 100 கோடி சம்பளம் சிவகார்த்திகேயன் வாங்கினாலும் அவரால் விஜயாக முடியாது. விஜய்க்கு அப்புறம் சிவாதான்னு நாமதான் சொல்லிக்கிட்டு இருக்கிறோம். ஆனால் அந்த ஆசை சிவாவுக்கே கிடையாது. விஜய் அண்ணா இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. ஆனால் குழந்தையிலிருந்து பெரியவங்க வரை சிவகார்த்திகேயனுக்கு ஒரு வரவேற்பு இருக்கிறது.

Sivakarthikeyan Vijay

அதுக்காக சிவகார்த்திகேயன் அடுத்த தளபதியாக ஆகிட முடியாது. நீங்க நூறு கோடி சம்பளம் கூட வாங்கலாம் ஆனால் யாரா இருந்தாலும் விஜய் அண்ணாவாக முடியாது என்று ஷாம் கூறி இருக்கிறார். அதோடு விஜய் உடைய அரசியல் குறித்து ஷாம் பேசுகையில் விஜய் அண்ணா அரசியலுக்கு வருவது சிலருக்கு எப்படியும் பொறுக்காது அது இயல்புதான். ஆனால் அவருடைய வெற்றியும் மக்கள் ஆதரவும் காலம்தான் முடிவு செய்யும்.

Sivakarthikeyan Vijay

விஜய் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளது. விஜய் அண்ணா சொன்னது மாதிரி ஏன் அரசியல் ஒரு தனி பாடமாக இருக்கக் கூடாது? ஒரு மாற்றத்திற்கான அரசியல் வருவது தவறல்ல. விஜய் அண்ணா அரசியலில் ஒரு பெரிய திட்டம் வைத்திருப்பார் என்று ஷாம் கூறியிருக்கிறார்.

Sivakarthikeyan Vijay

அது போல சினிமாவில் ரசிகர்கள் போட்டி போட்ட காலம் விஜய் அஜித்தோட முடிந்து போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் எம்ஜிஆர், சிவாஜி அதற்குப் பிறகு ரஜினி, கமல் இப்போ விஜய், அஜித் என்று போட்டி நிலவுகிறது. இதில் அஜித் விஜயோட லாஸ்ட் இனி அப்படி ஒன்னு தமிழ் சினிமாவில் இருக்காது. ஏன்னா இப்ப நிறைய பேரு கதாநாயகர்களாக வந்துட்டே இருக்காங்க. அப்போ எல்லாம் ஹீரோ தான் மாஸ்... ஆனால் இப்போ கண்டன்டு தான் மாஸ் என்றும் ஷாம் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

Sivakarthikeyan Vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+