புதுப்பேட்டைக்குப் பிறகு தனுஷுடன் சிநேகா... நினைச்சு பார்க்கலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக பட்டையை கிளப்பும் பட்டாஸ் என்று பொங்கல் ரிலீஸ் படமான பட்டாஸ் படத்துக்கு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள்.

அப்போது பேசிய படத்தின் இயக்குநர் துரை செந்தில் புதுப்பேட்டை படத்துக்குப் பிறகு தனுஷ் சாருடன் சிநேகா மேம்.. நினைச்சு பார்க்கலை என்றார்.

கொடி படத்துக்குப் பிறகு தனுஷ் போன் செய்து படம் பண்ணலாம் என்று சொன்னாராம். அதையும் கூறினார் துரை செந்தில்.

 பொங்கல் பட்டாஸ்

பொங்கல் பட்டாஸ்

பொங்கலுக்கு ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கும் பட்டாஸ் படம். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்தார் என்றால் ஹிட் என்கிற அளவுக்கு அவரது இரட்டை வேடப் படங்கள் அவருக்கு கைக்கொடுத்து வருகின்றன. அந்த வரிசையில் இந்த படமும் அவருக்கு ஹிட்.

 அசுரன் படப்பிடிப்பு

அசுரன் படப்பிடிப்பு

தனுஷ் அசுரன் படப்பிடிப்பில் இருந்தபோது இரண்டு நாள் இரவு பகலாக அவருடன் இருந்து, படப்பிடிப்பு இடைவேளையில், கிரிக்கெட் விளையாடி பல கதைகள் பேசியும், தனுஷ் சில்லாக இருந்து சில் புரோ பாடலை எழுதி பாடியும் காண்பித்தாராம். அந்த பாடல் இப்போது குழந்தைகளின் விருப்ப பாடலாக இருக்கிறது.

 எல்லா வேலைகளிலும்

எல்லா வேலைகளிலும்

தனுஷ் எப்போதும் சும்மா இருக்க மாட்டார். எனக்கு 15 வருடத்துக்கு மேல அவரோட பழக்கம். அன்று பார்த்த மாதிரியே இன்றும் கேரக்டர் அளவில் மாறாமல் இருக்கார். செட்டில் எல்லா வேலைகளையும் பார்ப்பார். பாட்டு எழுதுவார். இயக்குநர் வேலைகளை பார்ப்பார். அவர் முன் என்னை பத்தி யோசிக்கும்போது, நாம் என்ன செய்கிறோம்னு தோணும் என்று சொன்னார் துரை செந்தில்.

 சிநேகா ஜோடி

சிநேகா ஜோடி

தனுஷ் சாருக்கு ஜோடியா யாரை போடலாம்னு யோசித்து ஃபைனலா ஒரு முடிவுக்கு வந்து சிநேகா மேம் போடலாம்னு சொன்னேன். தனுஷ் சார் ஓகே சொல்லிட்டார். மத்தவங்க எல்லாம் ரொம்ப எக்ஸைட் ஆகி அட.. புதுப்பேட்டைக்குப் பிறகு சிநேகா மேம்.. புதுப்பேட்டை 2வா அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுவரைக்கும் நான் நினைச்சு பார்க்கலை..அப்போதுதான் எனக்கே ஞாபகம் வந்துச்சு என்று சொன்னார் துரை செந்தில்.

 சூப்பர் சினேகா

சூப்பர் சினேகா

சும்மா சொல்லக் கூடாது படத்தில் சினேகாவுக்கு அழுத்தமான ரோல் கொடுத்துள்ளார். சினேகாவும் கொடுத்த வேடத்தை சூப்பராக செய்து அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளியுள்ளார். அதிலும் அவர் அடிமுறை சண்டைப் பயிற்சியில் நேர்த்தியாக ஈடுபட்டிருப்பது வியக்கவைப்பதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+