"அம்மா நீயே எனக்கு மகளாக பிறந்திடு"! போட்டோவுக்கு முன் வேண்டிய சினேகன்! "மீண்டும் பிறந்த" மகமாயி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினேகன் தனது தாயை இழந்து தவித்த நிலையில் தன் தாயின் புகைப்படத்தை பார்த்து, "அம்மா நீயே எனக்கு மகளாக பிறக்க வேண்டும்" என வேண்டுவாராம். அந்த வேண்டுதல் பலித்துவிட்டது.

சினேகன், தஞ்சாவூரை சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் 8ஆவது மகனாக பிறந்தவர். இவருக்கு 6 மூத்த சகோதரர்களும் ஒரு மூத்த சகோதரியும் உள்ளனர். இவரது இயற்பெயர் செல்வம். இவர் வைரமுத்துவின் புத்தகங்களை ரசித்து படித்து வந்தார்.

television snekan kannika

ஒருமுறை தனது உதவியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து வைரமுத்து ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாராம். அதில் "எனது உதவியாளர் கவிதை எழுத கூடியவனாக இருத்தல் கூடாது, கவிதையை நேசிக்கக் கூடியவனாக இருத்தல் வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இதனால் சிறுவயதிலேயே கவிதை எழுதும் திறமை கொண்ட சினேகன், தனது திறனை மறைத்து வைரமுத்துவிடம் வேலைக்கு சேர்ந்தார். அப்படியும் தனது நண்பர்களிடம் கவிதைகளை சொல்லிய போது அவர்கள் பாராட்டுவார்களாம்.

இதனால் வார இதழ்களுக்கு கவிதை எழுது என ஆலோசனை வழங்கினார்களாம். செல்வம் என்ற பெயரில் எழுதினால், வைரமுத்துவிடம் சிக்கிக் கொள்வோம் என நினைத்து சினேகன் என்ற பெயரில் கவிதை எழுதி வந்தாராம். ஒரு முறை தான் எழுதிய கவிதை தொகுப்புகளை புத்தகமாக வெளியிட இயக்குநர் பாலசந்தரை அழைத்தாராம்.

அப்போது பாலசந்தர், "தம்பி உங்கள் பேரு செல்வம்தானே, இதில் என்ன சினேகன் என இருக்கிறது" என கேட்டாராம். அதற்கு சினேகன், "கவிதை எழுதுவதற்காக புனைப் பெயரில் எழுதினேன்" என்றாராம். அப்போது பாலசந்தர், தம்பி இந்த பெயர் உங்களுக்கு பெயரை கொடுக்கும் என எனக்கு தோன்றுகிறது என்றாராம். இதனால் உடனே தனது பெயரை அடுத்த நாளே அரசு கோப்புகளில் மாற்றிக் கொண்டாராம்.

சன் டிவியின் வணக்கம் தமிழாவில் சினேகன் தனது தாய் குறித்து உருக்கமாக தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறுகையில், அம்மா இறந்ததால் எனது சொந்த ஊருக்கு 18 ஆண்டுகளாக போய் தங்கியதே இல்லை. அம்மா இல்லாமல் என்னால் அந்த ஊரில் இருக்கவே முடியவில்லை. இன்று நான் சென்னையில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் அம்மாதான்.

சினிமா தொழிலுக்கு சென்றால் கெட்டு போய்விடுவாய் என என் அண்ணன்கள் சொன்ன போதும் கூட என் மகன் என்ன விரும்புகிறானோ அதை செய்யட்டும் என என் தாய் எனக்காக பேசினார். என் மீது அவருக்கு அத்தனை நம்பிக்கை.

என் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த என் தாய், நான் ஜெயிக்கும் போது உலகில் இல்லையே! என் அம்மா இறந்ததன் வெளிப்பாடாகத்தான் ஆராரிராரோ பாடலில் தாயே எந்தன் மகளாக மாற என எழுதியிருந்தேன். 2000 ம் ஆண்டு என் தாய் இறந்தார்.

அப்போது அந்த ஏக்கத்தில் நான் என் அம்மாவிடம் கேட்கிறேன், அம்மா எனக்கு நீ மகளாக பிறந்திடு, உனக்கு நான் சம்பாதித்து சேலை வாங்கி தர நினைத்தேன், ஃபிளைட்டில் கூட்டிப்போக நினைத்தேன் , அதெல்லாம் நடக்கவே இல்லை. நான் சினிமாவில் ஜெயித்த போது அதை பார்க்க நீ இல்லையேம்மா என ஏக்கம் எனக்கு இருக்கிறது. அதனால் எனக்கு மகளாக பிறந்திடு என்பேன்.

எத்தனை நட்சத்திர ஹோட்டலில் படுத்து உறங்கினாலும், தாயின் அழுக்கு சேலையில் படுத்து உறங்கும் போது வரும் பாதுகாப்பு உணர்வு எதற்கும் ஈடாகாது. அம்மாவை இழந்தவர்களுக்குத்தான் தெரியும், அம்மாவுடைய அருமை என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

சினேகன் தனது தாயிடம் எந்த நேரத்தில் வேண்டினாரோ அவரது வேண்டுதலை அவரது தாய் நிறைவேற்றிவிட்டார். சினேகன்- கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதைத்தான் அவர் கவிதையாக "தாயே மகளாய் மாற" என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+