சினேகன்- கன்னிகா தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்! தாயே எந்தன் மகளாய் மாற! கவிஞர் உருக்கம்
சென்னை: கவிஞர் சினேகன்- நடிகை கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் சேய்களும் நலமாக இருப்பதாக கவிஞர் சினேகன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கன்னிகா சினேகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன்
மகளாய் மாற "... என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது...

தாயே எந்தன் மகளாகவும் ..
மகளே எந்தன் தாயாகவும் ...
இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ...
இதயமும்,மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது ...
உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள்.
என்றும் அன்புடன்
சினேகன்
கன்னிகா சினேகன் . இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஏராளமான பாடலாசிரியர்கள் இருக்கும் நிலையில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இதுவரை இவர் சுமார் 70-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார்.
இவர் கோமாளி, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சினேகன். இந் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி ஃபைனலிஸ்டில் ஒருவராக வந்தார். பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். இவர் நடிகை கன்னிகாவை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
முதலில் இவர்களது வயது வித்தியாசம் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு வெற்றிகரமான தம்பதியாக வலம் வந்தனர். இந்த நிலையில் கன்னிகா கர்ப்பமடைந்தார். அவருக்கு 5ஆவது மாதத்தில் செய்யும் சடங்குகள் செய்யப்பட்டிருந்தன.
அது போல் அண்மையில் அவருக்கு சீமந்தமும் நடைபெற்றது. கன்னிகாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினார் சினேகன். இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி தங்களுக்கு இரு தேவதைகள் பிறந்ததாக சினேகன் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சினேகன்- கன்னிகாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
கன்னிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண வீடு எனும் சீரியலில் நடித்துள்ளார். அதுபோல் வெள்ளித்திரையிலும் கன்னிகா தேவராட்டம், அடுத்த சாட்டை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இவர்கள் இருவரும் மூன்றாவது திருமண நாளை கொண்டாடிய நிலையில் நாங்கள் அப்பா, அம்மா ஆக போவதாக கன்னிகா இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தார். அது போல் தற்போது சினேகன், கலைஞர் டிவியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். கன்னிகாவும் தலைமுடிக்கான எண்ணெய்யை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார். அவருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications