Thenmozhi BA serial: சனியன் பிடிச்ச கொட்டாவி... எப்பப் போயி வந்துருக்கு பாரு..!
சென்னை: சீன் வைப்பதிலும் கூட இப்போதெல்லாம் சிலுமிஷமாக நடக்க ஆரம்பித்து விட்டன சீரியல்கள். சினிமாக்காரர்கள் கூட இவர்களைப் பார்த்து கத்துக்கலாம் போல. அவ்வளவு சுவாரஸ்யமா இருக்குங்க.
அதிலும் ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் இப்போது சினிமாவை விட சீரியல்களில்தான் பயங்கரமாக இருக்கு. குடும்பத்தோடு தெரியாத்தனமாக உட்கார்ந்து விட்டால் நெளிந்து ஓட வேண்டியதுதான்.
அப்படிப்பட்ட ஒரு செம காட்சிதான் இது.. வாங்க அதைப் பார்த்து ரசிப்போம்.

கலர் கலர் ரீல்
விஜய் டிவியின் தேன்மொழி பிஏ என்று ஒரு சீரியல். நல்ல பாப்புலாரிட்டியான சீரியல்தான். அதில்தான் இன்று மதியம் ஒரு சீன் வருகிறது. செம சுவாரஸ்யமாக இருக்கு. தேனு மறு வீட்டு விருந்துக்கு பிறந்த வீட்டுக்கு வந்தவ சித்தி தங்கச்சிகிட்ட தொட்டாரு..உட்கார வச்சாரு.. தாழ்ப்பாள் போட்டாருன்னு மட்டும் இல்லை. உதட்டோரமா ஒரு துளி பால் இருந்துச்சு.. அதை துடைச்சு விட்டாருன்னு...கலர் கலரா ரீல் விடறா.

நெருக்கம்
காட்சிப்படி தேன்மொழியும் புருஷன் அருள்வேலும் கட்டிலில் உட்கார்ந்துள்ளனர். இருவரும் நெருக்கமாக பேசிக் கொண்டுள்ளனர். அப்போது முத்தம் கொடுப்பதற்காக தேன்மொழியை நெருங்கி வருகிறானாம் அருள்..தேன் மொழியும் இதழ்களை அவன் அருகே கொண்டு செல்கிறாள்.

கொட்டாவி
அப்பப் பார்த்து தேன்மொழிக்கு வருது பாருங்க ஒரு கொட்டாவி.. அப்படியே கையை வைத்து வாய் அருகே சுண்டி கொட்டாவியை விடுகிறாள். அதைப் பார்த்து புருஷன் காரன் அதான் தேனுவின் ஹீரோ சார் ஏமாந்து போறான். பின்னர் தேன்மொழிக்கு வெட்கம் வந்து விடுகிறது.

குடும்பத்தோடு அரட்டை
இந்த காட்சியை குடும்பத்து பெண்களிடம் உட்கார்ந்து கதை போல சொல்கிறாள் தேன்மொழி. அவங்களும் அப்புறம் அப்புறம் என உச்சு கொட்டியபடி கேட்கிறார்கள். முத்தம் கொடுக்காமல் கொட்டாவி கெடுத்ததைப் பார்த்து சனியன் பிடிச்ச கொட்டாவி.. அப்பப் பார்த்தா வரணும் என்று சலிச்சுக்கறாங்க தேனுவின் சித்தி.
சும்மா சொல்லக் கூடாது தேனு...ஒண்ணும் நடக்கலேன்னாலும் நல்லாவே சமாளிக்கறே!
அதை விடுங்க..நல்லா வச்சீங்கடா சீனை.. பட்டப் பகல்ல.. ராத்திரிக்கு மாத்தக் கூடாய்யா இதையெல்லாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications