மகனுக்கு முதல் பிறந்தநாள்..கடற்கரை மணலில் குழந்தையாக மாறிய ஆல்யா மானசா
சென்னை: கடற்கரை மணலில் கால்கள் புதைய புதைய உருண்டு புரண்டு மகன்களுடன் உற்சாகமாக விளையாடினார் ஆல்யா மானசா. மகனின் பிறந்தநாளை ஒரே நிறத்தில் ஆடை அணிந்து நண்பர்களுடன் கொண்டாடிய வீடியோக் காட்சிகள் தற்போது பகிரப்பட்டு வருகின்றன.
சின்னத்திரை நட்சத்திர தம்பதி ஆல்யா மானசா சஞ்சீவ். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் கார்த்திக் - செம்பாவாக நடித்து பலரது உள்ளங்களை கொள்ளை கொண்டனர். சீரியல் ஜோடி ரியல் ஜோடியாக சொந்த வாழ்க்கையில் இணைந்தனர்.
இந்த நட்சத்திர தம்பதியருக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் அர்ஸ் என்ற ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பின்னரும் இருவருமே சீரியலில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

கயல் - இனியா
சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு என ரசிகர்கள் பட்டாளம் உள்ளதால் கயல் சீரியல் டிஆர்பியில் ஹிட் அடித்துள்ளது. அதே போல சன்டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் நடித்து வருகிறார் ஆல்யா மானசா.

குடும்பமே சீரியலில்
சில தினங்களுக்கு முன்பு கயல் சீரியலில் சஞ்சீவ் ஆல்யா மானசாவின் மகள் ஐலாவும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கொழு கொழு பொம்மை போல சஞ்சீவின் மகளாகவே நடித்தார் ஐலா. சில சீன்கள்தான் என்றாலும் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது அன்றைய எபிசோட்.

கோடை விடுமுறை
சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் சஞ்சீவ் ஆல்யா மானசா தம்பதியினர் தங்களின் பிள்ளைகளுடன் கோடை விடுமுறையை கொண்டாட கிளம்பி சென்றனர். என்னதான் குடும்பத்தோடு சீரியலில் நடித்தாலும் கொஞ்சம் இயற்கையை ரசிக்கலாம் என கடற்கரை பக்கம் சென்றிருக்கின்றனர்.

மகனின் முதல் பிறந்தநாள்
மகன் அர்ஸ் பிறந்து ஓராண்டு ஆகி விட்டது. கடந்த மார்ச் 27ஆம் அர்ஸ் பிறந்ததை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்போது மகனின் பிறந்தநாளை கடற்கரையில் குடும்பத்ததோடு கொண்டாடியிருக்கின்றனர். அனைவருமே ஒரே நிற டிசைனில் ஆடை அணிந்து கொண்டாடியுள்ளனர்.

கடற்கரை மணலில் புதைய புதைய
கடற்கரை மணலில் குழந்தைகளுடன் குழந்தையாக உருண்டு புரண்டு விளையாடிக்கொண்டிருக்கிறார் ஆல்யா மானசா. அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ஆல்யா மானசா. சீரியலுக்கு பிரேக் விட்டாலும் பல எபிசோடுகளை முன்பே நடித்து கொடுத்து விட்டதால் கயலும் இனியாவும் பரபரப்பாகவே ஒளிபரப்பாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications