WWE: ஸ்டுடியோவுக்குள் wwe..பார்த்தீங்களா மக்களே?
நியூயார்க்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்று அனைவரும் wwe பிரியர்கள். இது வெறும் ஸ்கிரிப்ட் என்று பலரும், அத்தனையும் பொய் என்று பலரும் கூறினாலும். அவர்களும் விரும்பிப் பார்ப்பது இந்த விளையாட்டைத்தான்.
அமெரிக்காவில் பெரிய ஸ்டேடியத்தில் வைத்து விடுமுறை நாட்களில் இந்த போட்டிகள் நடக்கும். அரங்கு நிறைய மக்கள் அமர்ந்து தங்களை மறந்து ரசிப்பார்கள். தங்களுக்கு பிடித்த வீரர் மற்ற வீரரை அடிக்கும்போது, இவர்கள் போடும் கும்மாளம் சத்தம் இருக்கிறதே.. காதுகளைத் துளைக்கும்.
ஸ்டேஜில் வீரர்கள் இருவரின் சத்தம்.. மைக் வைத்து விடும் அரை கூவல் என்று ஒருபக்கம்...ரசிகர்கள் போடும் கூச்சல் ஒரு பக்கம் என்று காது ஜவ்வு வலி கண்டுவிடும்.இப்படி பிரமாண்டமாக நடத்தப்பட்ட wwe.. இப்போது லாக்டவுன் நேரத்தில் ஸ்டுடியோவுக்குள் முடங்கி விட்டது.

சோனி டென் 1
சோனி டென் 1 சானலில் wwe விளையாட்டு வீரர்கள் அதாவது ரெஸ்லிங் குத்துசண்டை வீரர்கள், ஸ்டுடியோவுக்குள் இந்த விளையாட்டை விளையாடி உள்ளனர். இந்த போட்டியை சோனி டென் 1 சானல் அடிக்கடி ஒளிபரப்பு செய்து வருகிறது.

வக்கிரமான போட்டி
ஸ்டுடியோவுக்குள் நடக்கிறது என்பதால், இவர்கள் போட்டியின் வக்கிரம் ஒன்றும் குறைந்துவிடவில்லை. அதே போட்டி, பெண்கள் வந்து சமாதானம் செய்வது..அதே பெண்ணிடம் வந்து இன்னொரு ஆட்டக்காரர் கோபமாக முறையிடுவது என்று எல்லாமே இருக்கிறது.

பெல்ட் வேணும்
போட்டியில் கஷ்டப்பட்டு ஒரு வீரர் பெல்ட் வாங்கி இருப்பார். அந்த பெல்ட் தனக்கு வேணும் என்று இன்னொரு வீரர் வேண்டும் என்றே வம்பு வளக்க கேட்பார். பெல்ட்டுக்கு உரியவர் கோபமாவார்.. ஆம்பளையா இருந்தா என்கிட்டே இருந்து வாங்கு பார்ப்போம் என்று இவர் பங்குக்கு கத்துவார். அப்புறம் என்ன சண்டைதான்.. சத்தம்தான்.

சின்ன சின்ன ஸ்கிரிப்ட்
இப்படி சின்ன சின்ன ஸ்கிரிப்டுகளுடன் wwe போட்டிகள் ஸ்டேடியத்தில் நடப்பது போலவே ஸ்டுடியோவில் நடைப்பெற்று வருகிறது. இந்த லாக்டவுன் காலத்தில் அமெரிக்க மக்கள் மட்டும் இல்லாமல் உலக wwe பிரியர்களுக்கு விரும்பிப் பார்க்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications