Maaman Box Office Collection Day 7: தாய்மாமனா இருக்குறது அம்புட்டு கஷ்டமா? மாமன் வசூல் என்ன ?
சென்னை: நடிகர் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த மாமன் திரைப்படத்தின் 7ஆம் நாள் வசூல் எவ்வளவு என்பதை பார்க்கலாம். இந்த படத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடிக் கொண்டே வருகிறது. இந்த படத்துடன் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கான மவுசு குறைந்து வருகிறது.

மாமன் எனும் குடும்ப பாங்கான படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அக்கா- தம்பி இடையே நடக்கும் பாச போராட்டம் குறித்த கதை இது. அக்கா மகனை தனது மகனாகவே நினைக்கும் தம்பி, திடீரென அவருக்கு திருமணமாவதால் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அக்கா குழந்தையை 3 மாதங்களுக்கு பிரிகிறார் சூரி.
ஐஸ்வர்யா லட்சுமி
டாக்டராக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிதான் சூரிக்கு மனைவி. இவருக்கு டிரான்ஸ்பர் கிடைத்ததால் சூரியை தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறார். இதனால் சூரியை காணாமல் தவிக்கும் லட்டு எனும் அந்த குழந்தையிடம் மாமன் சாமியிடம் போய்விட்டான் என்கிறார் அக்கா.
குழந்தை
இதனால் உடைந்து அழும் குழந்தை, மாமனின் நினைவு இருந்தாலும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடையே ஐஸ்வர்யா லட்சுமி கர்ப்பம் தரிக்கிறார். இந்த விஷயத்தை அக்காவிடம் சொல்ல ஆசைப்படும் சூரிக்கு ஏமாற்றமே விஞ்சுகிறது.
தம்பியுடன் மோதல்
தனது தம்பியின் போன் காலை அவர் எடுக்கவில்லை. இந்த நிலையில் ஒரு திருமணத்திற்காக ஐஸ்வர்யா லட்சுமியும் சூரியும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். அங்கும் மாமனை பார்க்காமல் குழந்தை ஏங்குகிறது.
சூரி
மீண்டும் சூரியை பார்த்தால் அந்த குழந்தை விட மாட்டான் என்பதால் தனது வயிற்றில் இருக்கும் குழந்தை மீது சூரியை சத்தியம் செய்ய வைத்து இனி அந்த குழந்தையை எக்காரணத்தை கொண்டும் பார்க்கக் கூடாது என்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி.
விவாகரத்து கேட்கும் ஐஸ்வர்யா
ஆனாலும் அதையும் மீறி அந்த குழந்தையை சந்திக்கும் நிலை சூரிக்கு வருகிறது. இதனால் சூரியும் ஐஸ்வர்யாவும் பிரிகிறார்கள். விவாகரத்து வரை செல்லும் இந்த குடும்ப பிரச்சினையில் இருவரும் மீண்டும் சேர்கிறார்களா என்பதுதான் கதை. ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சி பொங்கும் வகையில் காட்சியை இயக்குநர் அமைத்திருக்கிறார்.
அழுகை
கையில் பண்டில் பண்டிலாக டிஸ்யூ பேப்பர் கொண்டு செல்லும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியிலும் அழுகாச்சி! ஆனால் எதிலும் செயற்கைத்தனம் இல்லை. இந்த படத்தில் தாய்மாமன் பாசம் ஓவராக காட்டப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.
எத்தனை வசூல்
இது எல்லாவற்றையும் மீறி இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்துள்ளது. இதன் வசூல் உலகளவில் ரூ 22 கோடியாகும். மாமன் படம் ரிலீஸான நாளில் ரூ 1.75 கோடியும் இரண்டாவது நாளில் ரூ 2.5 கோடியும் மூன்றாவது நாளில் ரூ 3.85 கோடியும் 4ஆவது நாளில் 2.05 கோடியும் 5ஆவது நாளில் 2.25 கோடியும் 6ஆவது நாளில் ரூ 2 கோடியும் வசூலானது. அதாவது மொத்தம் ரூ 14.40 கோடி வசூலானது. சூரிக்கு காமெடியும் வரும் நடிப்பும் வரும், சென்டிமென்ட்டும் வரும் ஆக்ஷனும் வரும் என்பதை நிரூபித்துவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications