Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூரையை பிச்சிக்கிட்டு கிடைச்ச சான்ஸ்.. மதுபாலாவை சங்கடப்படுத்திய காட்சி.. மனம் திறக்கும் ரோஜா நடிகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய திரையுலகில் மட்டுமின்றி இந்தி திரை உலகிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மதுபாலா.. தற்போது மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி தந்து பிஸியாக நடித்துள்ளார்.. அதேபோல வெப்சீரிஸ்களுக்கும் முக்கியத்துவம் தந்து நடித்து வருகிறார்.. சில நெருக்கமான காட்சிகளில் நடிப்பது வேதனையை தந்தது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் மதுபாலா கூறியிருக்கிறார்.

பாலச்சந்தர் படங்களில் அறிமுகமானவர் மதுபாலா.. அழகன், வானமே எல்லை உள்ளிட்ட படங்களில் நடித்தவர், 1991-ம் வருடம் ரோஜா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்..

Television actress Madhubala roja film

தமிழ்ப்பெண்ணான மதுபாலா, பிறந்தது வளர்ந்தது எல்லாமே மும்பையில்தான்.. இந்தி சினிமாவின் கனவுக்கன்னியாக கோலோச்சிய ஹேமமாலினியும் மதுபாலாவும் உறவினர்கள்...

கூரையை பிச்சிக்கிட்டு..

மும்பையில் பிறந்து வளர்ந்ததால், பாலிவுட்டில்தான் நடிக்க முயற்சித்துள்ளார். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொடுத்த கதையாக, டைரக்டர் கே.பாலசந்தர் 'அழகன்' படத்தில் அறிமுகப்படுத்தினார்.

ரோஜா, ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் மதுபாலா.. இதில் ரோஜா படம், சர்வதேச அளவில் மதுபாலாவை கொண்டுபோய் சேர்த்தது.

நுணுக்கமான விஷயங்கள்

இந்த படத்தில் நடித்தது பற்றி ஒருமுறை மதுபாலா பேசும்போது, "ஒரு சினிமா மேக்கிங் ஒர்க்-ஷாப்பில் கலந்து கொண்டதுபோல இருந்தது மணி சார் படத்தில் நடித்தது.. அவ்வளவு நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த படத்தில் என்னை சுதந்திரமாக நடிக்க அனுமதித்தார்.. என்னுடைய இயல்பே எப்போதுமே துருதுருவென, துணிச்சலான பெண்ணாக இருப்பேன். அதே கேரக்டரில் ரோஜா படம் இருந்ததால், என்னால் முழு ஈடுபாட்டுடன் அதில் நடிக்க முடிந்தது" என்று பூரித்து கூறியிருந்தார்.

தமிழ் படங்கள் மட்டுமல்லாமல், இந்தி மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார் மதுபாலா.. திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கிவிட்டார்.

நெருக்கமான காட்சிகள்

இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.. தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் தயாராகியுள்ள கண்ணப்பா படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளார் மதுபாலா.. சமீபத்தில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார் மதுபாலா.

அதில், "நான் ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் வளர்ந்தேன். நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அதனால் பல சினிமா வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன்.

நல்லவேளை நீக்கிட்டாங்க

ஒரு படத்தில் என்னிடம் முன்கூட்டியே சொல்லாமல் முத்தக் காட்சியில் நடிக்க சொன்னார்கள். அதுவும் உதடு முத்தக் காட்சியில் நடிப்பதற்கு என்னிடம் அதிக நேரம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்..

மேலும் அந்த காட்சியில் நடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் விளக்கி சொன்னார்கள்.. பிறகு அந்த உதடு முத்த காட்சியில் நான் நடிக்க வேண்டியதிருந்தது. அது எனக்கு மிகவும் வேதனையான அனுபவமாக இருந்தது.

தெளிவு நடிகைகள்

ஆனால் எடிட்டிங்கில் பார்த்தபோது பட குழுவினர் அந்த காட்சிக்கு உதடு முத்தம் தேவை இல்லை என நீக்கி விட்டார்கள். இப்போதைய 22 வயது மற்றும் 24 வயது நடிகைகள் மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆனால் நான் 22 வயதில் மிகவும் அப்பாவியாக இருந்தேன். அதனால் தான் சில விஷயங்களில் நான் சரியான முடிவுகளை எடுக்க முடியவில்லை" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+