Webseries: ஸ்பெஷல் ஓப்ஸ் ...பயங்கரவாத தாக்குதல்...பின்னணியில் யார்?
சென்னை: ஹாட் ஸ்டாரின் ஸ்பெஷல் ஓப்ஸ் வெப் சீரீஸ் பயங்கரம்.. பயங்கரவாத கும்பல் செய்யும் அட்டகாசம்.. இதன் பின்னணியில் இருந்து இயக்குவது யார்...இவ்வளவு அழகான திட்டமிடல் மற்றும் செயலாக்கம் சாத்தியமா என்று எண்ணும்படி ஸ்பெஷல் ஓப்ஸ் வெப் சீரீஸ் டிரெயிலர் மிரட்டலாக இருக்கிறது.
நாடாளுமன்றத் தாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்கள் டிரெயிலரில் காண்பிக்கப்படுவது ஸ்பெஷல் ஓப்ஸ் வெப் சீரீஸை பார்க்க தூண்டுகிறது. ஒரு திரைப்படத்தை எடுப்பது போல மெனக்கெட்டு ஷூட் செய்து இருக்கிறார்கள்.
கடந்த 19 வருடங்கள் நடைப்பெற்ற பல தாக்குதல்களை அடிப்படையாக கொண்டு இந்த வெப் சீரீஸ் கதை உருவாக்கம் பெற்று இருப்பதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹாட் ஸ்டார் ஸ்பெஷல் ஓப்ஸ்
ஹாட் ஸ்டார் இணைய தளம் வெளியிட்டு உள்ள ஸ்பெஷல் ஓப்ஸ் தரமான ஆங்கில படத்துக்கு நிகராக அதிக பொருட் செலவில் இந்தி மொழியில் எடுக்கப்பட்டு மார்ச் 17 முதல் வெப் சீரீஸ் களம் கண்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதை நீரஜ் பாண்டே இயக்கி இருக்கிறார்.

செய்திகளில் கண்ட
நாம் செய்திகளில் கண்ட நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் பாதுகாப்பு படையினர் எதிர்த்த தாக்குதல் நிகழ்த்தியது என்று பார்க்க த்ரில்லாக இருந்தாலும், இப்படியா நடந்திருக்கும் என்றும் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. இது இந்திய உளவுத்துறையை மையமாக கொண்ட திரில்லர் தொடர் என்பதால் ரசிகர்கள் விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

பயங்கரவாத தாக்குதல் மூளை
உண்மை சம்பவத்தில் பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடைப்பெற்று முடிந்த நிலையில், உளவுத்துறை இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார்.. ஒருவரா இல்லை ஒரு குப்பலா.. எந்த தீவிர வாத தாக்குதல் அமைப்பு இதற்கு பொறுப்பேற்கிறது போன்ற அவசர செய்திகள் அடுத்தடுத்து வந்து நம்மை செய்தியின் பக்கம் ஈர்க்கும்.

உண்மைக்கு நிகராக
உண்மைக்கு நிகராக ஸ்பெஷல் ஓப்ஸ் வெப் சீரீஸும் இப்படித்தான்.. ஒரு பயங்கரவாத தாக்குதல்.. அதனோடு தொடர்புடைய பல உண்மைகள்.. மூளையாக இருந்து யார் எப்படி செய்யப்பட்டார்கள் என்பதை எல்லாம் உண்மை சம்பவம் போல சொல்கிறது. இதனால் பலரும் இந்த வெப் சீரீஸை விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications