சுடச் சுட போட்டோ போடும் ஸ்பூர்த்தி கவுடா.. உச்சு கொட்டி ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: பிரபலமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கல்யாண வீடு சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்திவிட்டு இணையதளத்தில் தூக்கலான போட்டோக்களை அப்லோட் பண்ணி வைரலாக பரவி கொண்டிருக்கிறார் ஸ்பூர்த்தி கவுடா.
அவர் சுடச் சுட போட்டோக்களை போடப் போட அதைப் பார்த்துப் பார்த்து ரசிகர்கள் உச்சுக்கொட்டி ரசிக்கிறார்கள். ஸ்பூர்த்தி கவுடா, கல்யாண வீடு சீரியலில் சூர்யா கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்தார்.
இந்த சீரியலில் திருமுருகன் கோபியாக நடித்து வந்தார். கோபிக்கு ஜோடியாக அவரது மனைவியாக இவர் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது அந்த ரோலில் அவருக்குப் பதில் கன்னிகா ரவி நடித்துக் கொண்டிருக்கிறார்.

நெடுந்தொடர்
திருமுருகன் சீரியல் என்றாலே வருட கணக்கில் போய்க்கொண்டிருக்கும் நெடுந்தொடர்கள் தான் என்று மக்கள் மனதில் ஒரு அபிப்ராயம் இருக்கிறது. அதேபோல இந்த சீரியலும் நெடுந்தொடர் ஆக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர் எடுத்த நாதஸ்வரம் சீரியலில் இவருடன் நடித்த பலர் இந்த சீரியலில் மறுபடியும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார்கள்.

களமிறங்கிய புதுமுகங்கள்
சிலர் மட்டுமே புதுமுகமாக களமிறங்கியிருக்கிறார்கள். அதில் ஸ்பூர்த்தி கௌடாவும் புதுமுகமாக களமிறங்கியிருக்கிறார். இவரும் சூர்யா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் நன்றாகவே இடம்பிடித்துவிட்டார். தற்போது சூட்டிங் நடைபெறாமல் இருந்த காலகட்டங்களில் இந்த சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டு பழைய எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஆனால் மீண்டும் சூட்டிங் ஆரம்பித்ததும் புது எபிசோடுகள் ஒளிபரப்பப்படுகிறது.

ஸ்பூர்த்தி போயாச்சு
இதில் இவ்வளவு நாளாக சூர்யா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது இந்த சீரியலில் நடிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டார். காரணம் இவர் பெங்களூர்க்காரர் என்பதால் அங்கிருந்து வந்து போக முடியாதில்லையா. அதனால்தான் நடிக்கவில்லையாம். இதைக் கேட்டதும் ரசிகர்கள் ஷாக்காகி போயிருக்கிறார்கள்.

கல்யாணமாம் கல்யாணம்
இவருடைய ரசிகர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் இன்னொரு தகவல் பரவி ரசிகர்களை புல்லரிக்க வைத்துள்ளது. அதாவது ஸ்பூர்த்திக்கு திருமணம் நடக்கப் போகுதாம். தான் இந்த சீரியலில் இருந்து நின்றதற்குக் காரணம் எனக்குத் திருமணம் நடக்கப் போவதால்தான் என்று வீடியோ போட்டுள்ளார் ஸ்பூர்த்தி கவுடா. இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

ரசிகர்களுக்கு பீலிங்
இந்தநிலையில் பல ரசிகர்கள் இவர் இந்த சீரியலில் இல்லாமல் ரொம்பவும் ஃபீல் பண்ணுகிறார்கள். இதுதொடர்பாக கமண்டுகளாக போட்டு இருக்கிறார்கள். இதனை பார்த்த இவர் ரசிகர்களுக்கு இணையதளம் மூலமாக தன்னுடைய போட்டோக்களை பகிர்ந்து வருகிறார் .படுகவர்ச்சியான போட்டோஸ்கள் ஆக இருக்கின்றன ஒவ்வொன்றும்.

குத்து விளக்கு
சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக ஜொலித்துக் கொண்டிருந்த இவர் இணையதளத்தில் படுகவர்ச்சியாக மாறியிருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சேலைகளில் இவரை இவ்வளவு நாளா பார்த்த ரசிகர்களுக்கு இப்படி மாடல் உடையில் பார்ப்பது வித்தியாசமாகவும் உணர்ச்சிகளை தூண்டுவதாகவும் இருக்கிறது என்று எக்குத்தப்பாக கமெண்டுகளை வீசி இருக்கிறார்கள்.

கவர்ச்சி உண்டு
என்னதான் சீரியல்களில் அழுகாச்சியாக, இழுத்து மூடிக் கொண்டு குடும்பக் குத்துவிளக்குகளாக வலம் வந்தாலும் இன்ஸ்டாகிராம் என்று வந்து விட்டாலே நம்ம ஹீரோயின்கள் கவர்ச்சிப் பதுமைகளாக மாறி விடுகிறார்கள் .அந்த வகையில் ஸ்பூர்த்தியும் விதவிதமாக இவர் கொடுத்திருக்கும் போஸ்களை பார்த்து ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். நடத்துங்க நடத்துங்க.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications