நெட்ப்ளிக்சில் ஸ்க்விட் கேம் சீசன் 2.. லாஜிக் இல்லை, ஆனால் செம மேஜிக்.. விமர்சனம் இதோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் கொரிய திரில் தொடரான "ஸ்க்விட் கேம்" (Squid Game) 2021ம் ஆண்டு நெட்ஃபிக்ஸில் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிகம் பேர் பார்த்த தொடராக நெட்பிளிக்ஸ் வரலாற்றில் இது இடம்பிடித்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது.

இதோ Squid Game Season 2 Review உங்களுக்காக.. முதல் சீசன் எங்கேயோ முடிந்ததோ, அங்கேயே இரண்டாவது சீசன் தொடங்குகிறது. பணக்காரர்களின் பொழுதுபோக்கிற்காக ஏழை மக்கள் உயிரைப் பணயம் வைத்து விளையாடும் விளையாட்டுகளால் மனம் நொந்துப் போயிருந்த கதாநாயகன் கிகி-ஹன், அதை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். முதல் சீசனில் தன் காணாமல் போன சகோதரனைத் தேடி இந்த விளையாட்டு உலகிற்குள் ஊடுருவிய போலீஸ் அதிகாரி ஹ்வாங் ஜுன்-ஹோவும் மீண்டும் தேடலைத் தொடங்குகிறார்.

squid game ott netflix

கிகி-ஹன் ஆபத்தான அந்த விளையாட்டு உலகிற்கை பற்றி அறிந்தும், உயிரிழந்தவர்களுக்கு நியாயம் பெற்றுத்தரும் நோக்கத்தோடு நுழைகிறார். இந்த சீசனில் புதிய வீரர்கள் மற்றும் புதிய விளையாட்டுகள் உள்ளன. முகமூடி அணிந்துள்ள காவலாளிகளின் பின்புலம் சைக்கோத்தனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால் அவர்களின் மற்றொரு பின்னணியையும் இந்த கதை காட்டுகிறது.

ரத்தமும், பரபரப்பு இசைத்தொகுப்பும் இதிலும் உண்டு. இயக்குனர் ஹ்வாங் டோங்-ஹியுக் சீசன் 2 மற்றும் 3 ஐ ஒரே கதையாக எழுதி, நெட்ஃபிக்ஸிற்காக இரண்டு சீசன்களாக பிரித்துவிட்டார் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த சீசனும் லீ ஜங்-ஜேவின் நடிப்பு, நீல நிற உடைகள், முகமூடி அணிந்தவர்கள், மற்றும் வன்முறை காட்சிகள் போன்றவை அப்படியே உள்ளன.

ஸ்க்விட் கேம் கொடூர விளையாட்டு

முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளும் மக்கள், பணத்திற்காக ஒரு கொடூரமான விளையாட்டில் பங்கேற்கும் கதைக்களத்தையே தொடர்கிறது. ஆனால், இந்த முறை விளையாட்டு இன்னும் சிக்கலானதாகவும், ஆபத்தானதாகவும் மாறியுள்ளது. புதிய போட்டியாளர்கள், புதிய விதிகள், மற்றும் முதல் பாகத்தின் கதாபாத்திரங்களுடன் இணைப்புகள் என பல திருப்பங்கள் காணப்படுகின்றன.

கேமரா வேலை பிரமாதம்

முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் காட்சியமைப்புகளில் மிகவும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, அறிவிக்கும் நம்பருக்கு ஏற்ப டீமை பிரித்து அறைகளுக்குள் சென்று ஒழியும் கேமில் பாடலும், கேமரா கோணங்களும் திகில் ரகம். இந்த சீசனிலும், முதல் கேம் ரெட் லைட், கிரீன் லைட்தான். ஆனால் அதன்பிறகு அடுத்தடுத்த கேம்களில் வில்லன் கேங் உஷாராவது திடுக் திருப்பமாக உள்ளது. சீரிசின் இறுதி கட்டங்கள் மிகவும் பரபரப்பாகவும், உணர்ச்சிகரமாகவும் அமைந்துள்ளன.

புதிய கதாபாத்திரங்கள் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான பின்னணி மற்றும் குணாதிசயங்கள் உள்ளன. கொரியன் சீரிசுக்கே உரித்தான சென்டிமென்ட் டச்சுக்கு இது உதவியுள்ளது. இருப்பினும் முதல் சீசன் பார்த்தவர்களுக்கு, எப்படியும் விளையாட்டின்போது இவர்களில் யாராவது கொலைதானே செய்யப்படப்போகிரார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும் என்பதால், மிகப்பெரிய திகிலோ, பரிதாபமோ ஏற்படாதுதான். முதல் பாகத்தின் சில கதாபாத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்து வருகின்றன.

ஸ்க்விட் கேம் 2 குறைகள்

குறைகள் என்று பார்த்தால் லாஜிக்தான். ஹீரோ எப்படி வில்லன்களை குறைத்து மதிப்பிடுகிறார் என்ற கேள்விதான் முதலில் எழுகிறது. ஏற்கனவே விளையாடி வெற்றி பெற்ற தான் திரும்ப விளையாடப்போகும்போது சர்வ வல்லமை படைத்த வில்லன் கேங் தன்னை முழுமையாக பரிசோதிக்கும் என்று எப்படி எதிர்பார்க்காமல் இருந்தார், கடந்த முறை வில்லன் கேங்க்கை சேர்ந்த முதியவர் ஒருவர் விளையாட்டு வீரரை போலவே கூடவே இருந்தார். இந்த முறையும் அப்படி ஒருவர் இருக்க கூடும் என்று ஏன் ஹீரோ யூகிக்கவில்லை. வில்லன்கள் இருக்கும் இடத்திற்கு பாதையே தெரியாது. ஆனால் சோல்ஜர்சை கொன்றுவிட்டு மெயின் வில்லனை தேடிப்போகலாம் என்று ஹீரோ எப்படி முடிவெடுத்தார் என்பது போன்ற பல கேள்விகள் வந்தாலும், பரபரப்பான திரைக்கதை மற்றும் காட்சியமைப்பால், லாஜிக் ஓட்டைகள் மறைந்துவிடுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+