என்னை கைது செய்துடாதீங்க! இனி உங்கள் பேச்சுக்கே வரமாட்டேன்! பவனிடம் மன்னிப்பு கேட்ட ஸ்ரீரெட்டி
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு மூலம் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது அவதூறு பரப்பிய நிலையில் ஆந்திர முதல்வர், துணை முதல்வர் மீதும் அவதூறு பரப்பியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சர்ச்சைகளை வான்டட்டாக வண்டியில் ஏற்றுபவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு படங்களில் சிலவற்றில் நடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறிய பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் தன்னுடன் படுக்கையை மட்டும் பகிர்ந்து கொண்டு வாய்ப்புகளை கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.

அது போல் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முன்பு அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தினார். அது போல் தமிழ் திரையுலகினர் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீதும் தனது பேஸ்புக் பக்கத்தில் இவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
இதற்கு ராகவா லாரன்ஸ் மறுத்திருந்தார். அவர் பொய் சொல்லியுள்ளார். நான் அவரை ஹோட்டலில் வைத்து பாலியல் வன்மகொடுமை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் தெலுங்கு படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியதும் அந்த பிரச்சினை சற்று ஓய்ந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் மீதும் ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து தெலுங்கு சினிமாவில் இருந்து ஸ்ரீரெட்டி ஓரம் கட்டப்பட்டார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்து வந்தார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான சந்திரபாபு நாயுடு, நடிகரும் தற்போதைய துணை முதல்வருமான பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா உள்ளிட்டோர் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் அநாகரீகமான வகையில் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
இயக்குநர் ராம்கோபால், நடிகர் போசானி கிருஷ்ண முரளி ஆகியோரும் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவை மிகக் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அந்த அவதூறு வழக்குகள் எல்லாம் தற்போது விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
அந்த வகையில் நடிகை ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜமுந்திரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்ரீரெட்டி மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் அவரை விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில் ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் "நான் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் செய்த காரியத்தால் என் குடும்பத்தினரால் வெளியே செல்ல முடியவில்லை.
"வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு திருமணம் ஆகாத நிலையில் போலீஸ் வழக்கு, கைது என எங்கள் மானத்தை வாங்காதே" என குடும்பத்தினர் என்னிடம் கெஞ்சுகிறார்கள். இனிமேல் உங்களை பற்றி அவதூறாக பேச மாட்டேன்" என ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே இதை ஏற்று ஸ்ரீரெட்டியை விட்டுவிடுவார்களா இல்லை, அவர் மீதான வழக்கை விசாரிக்க அழைப்பார்களா என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications