தெருவில் இறங்கி ரகிட ரகிட.. செம ஸ்ரீதேவி.. உற்சாகத்தில் வாய் பிளந்த ரசிகர்கள்!
சென்னை: சீரியல்களில் பிசியாக இருந்தாலும் வீடியோக்களில் ஆட்டம் போட்டும், கணவருடன் ஜாலியான போட்டோசூட்டிலும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி அசோக்.
உற்சாகத்தின் மறு உருவமாக திகழும் அவர் தற்போது தெருவில் இறங்கி குத்தாட்டம் போட்டுக் கலக்கியுள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அடடே சூப்பரப்பு என்று கை தட்டி வாய் பிளந்து ரசித்து மகிழ்கிறார்கள்.
சின்னத்திரை நடிகைகளில் செம உற்சாகமாக, எப்போதும் எனர்ஜியுடன் காணப்படுவோரில் ஸ்ரீதேவிக்கும் முக்கிய இடம் உண்டு. அவர் இருக்கும் இடம் எப்பவுமே கலகலப்பாக இருக்கும்.

சினிமா கை கொடுக்கலை
இவர் புதுக்கோட்டை சரவணன் படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த படத்தில் சின்ன ரோலில் இவர் நடிப்பு அவ்வளவாக வெளியே தெரியவில்லை அதன் பிறகு கிழக்கு கடற்கரை சாலையிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால் சீரியல்களில் களமிறங்கினார். செல்லமடி நீ எனக்கு சீரியலில் மீனா கேரக்டரில் முதல் முதலில் அறிமுகமானார்.

டிவி சீரியல்கள் சூப்பர்
அதைத் தொடர்ந்து வைரநெஞ்சம், இளவரசி ,பிரிவோம் சந்திப்போம் ,வாணி ராணி, கல்யாண பரிசு,ராஜா ராணி என பல சீரியலில் நடித்துள்ளார். தற்போது பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பூவே உனக்காக சீரியல்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் வீட்டில் கணவருடன் சேர்ந்து சமையல் பண்ணுவது வீட்டை சுத்தம் பண்ணுவது என்று கலக்கவும் செய்கிறார்.

வீடியோ அசத்தல்
பல வேலைகளை செய்து அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. தற்போது இவர் வெயிட்டை குறைத்து போட்டிருக்கும் அழகு டிப்ஸ்களும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இவரது டான்ஸ் வீடியோக்களும் மொட்டைமாடி போட்டோக்களும் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இவருடன் நடிகை ஜெயஸ்ரீ மற்றும் அவரது மகளும், அவரது அம்மாவும் இணைந்து ஆடிய ஆட்டமும் வேற லெவல் இருக்கிறது.

வேற லெவல் டான்ஸ்
நடிகை ஜெயஸ்ரீ அவரது கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்து மிகவும் மன வேதனையில் இருந்தவர்.. அது நினைவிருக்கிறதா.. தற்போது ஜெயஸ்ரீ இயல்பு நிலைக்கு சற்றே திரும்பி வருகிறார். ஸ்ரீதேவிக்கு நல்ல தோழி இவர். ஃபேமிலி பிரெண்ட் என்பதால் அனைவரும் சேர்ந்து ஆடிய பரதநாட்டியமும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஸ்ரீதேவி பதிவிட்டிருக்கிறார்.

குட்டிப் பாப்பா டான்ஸ்
அதுமட்டுமல்லாமல் ஜெயஸ்ரீயின் மகளான ரித்வாவுடனும் நடுரோட்டில் கலக்கல் ஆட்டம் போட்டிருக்கிறார். இந்த குட்டி பாப்பா இவருடன் பொம்முக்குட்டி அம்மா சீரியலில் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீதேவி அசோக் திருமணத்தின் போது கூட இந்த குட்டி செம ஆட்டம் போட்டிருக்கிறார். எல்லோரும் ஸ்டேஜில் டயர்ட்டாகி இருக்கும்போதுகூட இவர் கொஞ்சம் கூட டயர்ட் ஆகாமல் டான்ஸ் ஆடிக் கொண்டும் என்ஜாய் பண்ணி கொண்டும் இருந்தாராம்.

சேலைதாங்க பெஸ்ட்
இதை ஸ்ரீதேவியின் கல்யாண வீடியோக்களில் காணலாம். பல நடிகைகள் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை அப்லோட் பண்ணி ரசிகர்களை கவர்ந்து இழுத்துக் கொண்டிருக்கும் போது இவர் விதவிதமாக சேலைகளிலும் ஹோம்லியான அனைவரும் ரசிக்கும் வகையில் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியிடுவது இவரது ரசிகர்களுக்கு இவர் மீது நல்ல மதிப்பை ஏற்படுத்துகிறது. சீரியல்களில் இவர் வில்லியாக நடித்திருந்தாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இருந்து வருகிறார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications