நிறை மாதத்தில்.. செம குத்தாட்டம்.. தோட்டமே கலங்கிப் போச்சே செல்லம்மா!
சென்னை: நடிகை ஸ்ரீதேவி அசோக் போட்ட குத்தாட்டம் செம வைரலாகியுள்ளது.
ரொம்ப வருடங்கள் காத்திருந்து கிடைத்த சந்தோஷத்தை ஒவ்வொரு நாளும் என்ஜாய் பண்ணி அனுபவித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி அசோக்.
லேட்டஸ்டாக தனது கணவருடன் பட்டு சேலையில் நிறைமாதமாக இருந்தாலும் பரவாயில்லை என குத்தாட்டம் போட்டு அனைவரையும் இன்ப அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.

அர்ச்சனா
ஸ்ரீதேவி அசோக் நடிக்காத சேனல்களோ இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து சேனல்களிலும் கலக்கி கொண்டிருக்கும் இவரது முகத்தை பலபேருக்கு பரிச்சயமாக தெரிந்திருந்தாலும் இவர் ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார் .இந்த சீரியலின் மூலம் பல்வேறு ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றினாலும் இவரை தெரியாதவர்கள் இல்லை என சொல்லும் அளவிற்கு ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார் .

தனலட்சுமி
இந்த சீரியலில் செம்பாவை பாடாய்ப்படுத்தி வீட்டின் மூத்த மருமகளாக அராஜகம் பண்ணிக் கொண்டிருந்தாலும் தற்போது பூவே உனக்காக சீரியலில் தனலட்சுமி ஆக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் சீரியல்களில் காலடி எடுத்து வைத்தது செல்லமடி நீ எனக்கு என்னும் சீரியலில் தான்.

சீரியல்களில் வில்லி
அதிலிருந்து தற்போது வரைக்கும் இவர் சீரியல்களில் வில்லியாகவும் பாசமான அண்ணியாகவும் பல கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார் .என்னதான் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் ப்ரீயாக இருக்கும் நேரத்தை தனது கணவருடன் செலவழித்து அதை வீடியோவாக அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

கர்ப்பம்
ரொம்ப வருடங்கள் காத்திருந்து தற்போது கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார் .பலவருடங்களாக இவரிடம் ஏதும் விசேஷமா என கேட்டு வந்த ரசிகர்களுக்கு இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்று சந்தோஷப்பட்டாலும் இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து கொஞ்சம் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
செம ஆட்டம்
அதனால்தான் இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதும் அவருடைய ரசிகர்கள் அறிவுரைகளை அள்ளி வழங்கி வருகின்றனர். தற்போது இவருக்கு நிறைமாதமாக இருக்கும் நிலையில் இவர் செல்லமா பாட்டுக்கு தனது கணவருடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அதைப் பார்த்ததும் குழந்தை வயிற்றில் இருக்கும் போது இந்த மாதிரி டான்ஸ் ஆடாதிங்க என சில ரசிகர்கள் அன்பு கட்டளை இட்டு வருகின்றனர் .

ரசிகர்கள் ஹேப்பிதான்
ஆனாலும் இவரின் டான்ஸ் வேற லெவல் இருக்கிறது என ரசிக்கும் ரசிகர்களும் ரசித்து கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். ஸ்ரீதேவி பட்டு சேலையிலும் அவரது கணவர் பட்டு வேஷ்டி சட்டை கட்டிக் கொண்டு இவர்கள் ஆடிய ஆட்டம் தான் தற்போது வைரலாக பரவிவருகிறது. என்ன சொல்லுங்க.. மனசு சந்தோஷமா இருந்தா உடம்புக்கும் அது பாயும் போல...!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications