Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னடா நடக்குது இங்கே.. வெங்காயத்தை வெட்ட இவ்வளவு நேரமா.. க்யூட் ஸ்ரீதேவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னடா நடக்குது அங்க ஒரு வெங்காயத்தை வெட்டா எவ்வளவு நேரமானு மிரட்டி இருப்பாங்களோ நம்ம ஸ்ரீதேவி .. இவ்வளவு வேகமாக வெங்காயத்தை வெட்டுகிறார் அவருடைய கணவர்.

இந்த லாக்டவுன் டைம்ல நிறைய டிக் டாக் ல மனைவிமார்கள் கணவர்களை கொடுமைப்படுத்துவதாக வீடியோ பண்ணி இருக்காங்க. அதுல நிறையது காமெடியா இருக்கு. அதுல நம்ம ஸ்ரீதேவியும் அவருடைய கணவர் அசோக் சிந்தலாலா சேர்ந்து கலக்கிட்டு இருக்காங்க.

கணவரை வீட்டில் இருந்து வேலை பார்க்கச் சொன்னா மனைவிமார்கள் அவர்களை சமையல்காரர்கள், பாத்திரம் துலக்குபவர்களாக மாற்றி விட்டார்களாம். அப்படித்தாங்க எல்லாரும் வீடியோ போட்டு இருக்காங்க.

 கணவரும் வெங்காயமும்

கணவரும் வெங்காயமும்

அதுபோல தான் இப்போவும் இன்ஸ்டா பக்கத்துல அசோக் ஒரு வெங்காயத்தை அழகாக வேகமாக வெட்டுகிறார். அவர் வெட்டும் வேகத்தை பார்த்து ஏன்மா இப்படி எங்க ப்ரோ வை கொடுமைப்படுத்துறீங்க என்று அசோக்குக்கு சப்போர்ட்டாக ரசிகைகள் கமெண்ட் பண்ணி இருக்காங்க. ஆமாங்க சீரியலில் வில்லியாக நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் நம்ம ஸ்ரீதேவி காதலித்து அரேஞ்ச் மேரேஜ் பண்ணிட்டாங்களாம்.

 தனுஷின் தங்கை

தனுஷின் தங்கை

இவங்க காதல் கதையை கேட்டாலே சுவாரஸ்யமாக இருக்கு. நம்ம ஸ்ரீதேவி புதுக்கோட்டை சரவணன் படத்தில் தான் முதல் முதலாக நடித்தார். அதுல தனுஷின் தந்கையாக நடித்திருப்பார். அப்போ அவங்க பன்னிரண்டாம் வகுப்பு தான் படித்து விட்டு இருந்தாங்களாம். நடிப்பு சும்மா ஜாலிக்காக தான். அவங்க படிப்புலதான் புலியாம். ரொம்ப நல்லா படிக்கிற சமத்துப் பிள்ளையாம். டிகிரி முடித்து இருக்காங்களாம்.

 அழகான வில்லி

அழகான வில்லி

எம்பிஏ கடைசி வருஷத்துல தான் இவங்களுக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதுவும் வில்லி கேரக்டர் தாங்க. அப்படி சீரியல்ல நடிச்சுகிட்டு இருக்கும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. இவங்களுக்கு வீட்டு விலங்குகள் வளர்ப்பது ரொம்ப பிடிக்குமாம். அவரது கணவரான அசோக் ஒரு போட்டோகிராபர். அதுவும் விலங்குகளை ரொம்ப அழகாக படம் எடுப்பாராம்.

 பிறந்த நாள் கிப்ட்

பிறந்த நாள் கிப்ட்

தான் வளக்குற விலங்குகளை போட்டோ எடுக்கிறதுக்காக தான் வரச்சொல்லி அசோக்குக்கு கால் பண்ணி வரச் சொல்லி இருக்காங்க. அப்படிப் பேசும்போதுதான் இவங்களுக்கு உள்ள காதல் வந்துருக்கு .ஆனால் அசோக் தன்னோட காதலை ஸ்ரீதேவி கிட்ட சொல்லாம, ஸ்ரீதேவி பெற்றோர்களிடம் சொல்லி பொண்ணு கேட்டு இருக்கார், அவங்களும் சம்மதிச்சாங்க.

 சூப்பர் வில்லி

சூப்பர் வில்லி

அப்புறமா ரெண்டு வீட்டு சம்மதத்துடன் எளிமையாக பெங்களூருல திருமணத்தை முடிச்சு இருக்காங்க. திருமண தேதி ஏப்ரல் 28. இதுல ட்விஸ்ட் என்னன்னா நம்ம ஸ்ரீதேவி பிறந்த நாளும் அதே ஏப்ரல் 28. தன்னோட பிறந்த நாளுக்கு கிப்ட் மாதிரி தன்னுடைய கணவர் கிடைச்சார்னு சொல்றாங்க. இவங்க நடித்ததிலேயே இவங்கள புகழின் உச்சிக்கு கொண்டு போனது ராஜா ராணி தாங்க .அந்த சீரியல்ல இவங்க வில்லியாக நடிச்சிருப்பாங்க.

அண்ணி

அண்ணி

ஹீரோயினி சம்பாவை கொடுமைப்படுத்துகிற அண்ணியாக நடிச்சிருப்பாங்க .ஆனா உண்மையிலே இவங்க ரொம்ப ஜாலி டைப். எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கிற ஒரு சமத்து பொண்ணு. இவங்க சின்னத்திரை, வெள்ளித்திரை ,விளம்பரம் அப்படின்னு நடிச்சுக்கிட்டு பிசியா இருந்தாலும், இவங்க ஒரு பிஸினஸ் உமன். அப்புறமா இவங்க கணவருடன் சேர்ந்து வீட்டிலேயே தோட்டங்களை வளர்த்து அதில் அழகழகா புகைப்படங்களை எடுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் பண்ணிட்டு வாங்குறாங்க.

 அழகா இருக்கு

அழகா இருக்கு

இந்த படங்களை பார்க்கும் போது அவ்வளவு அழகா இருக்குது லைட் எல்லாம் புரிஞ்சுகிட்டு இருக்குது போட்டோஸ் எல்லாம் வேற லெவல். திருமண வாழ்க்கையை பத்தி கேட்டா, என் மனசுக்கு பிடிச்ச மாதிரி எனக்கு காதல் கணவர் கிடைச்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம எங்க மாமியார் ரொம்ப நல்லவங்க. எனக்கு ஃப்ரீடம் கொடுத்திருக்காங்க. ரொம்ப பாசமா என்ன பார்த்துக்குவாங்கணும் சொல்லி இருக்காங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+