Sri Krishna: ஸ்ரீகிருஷ்ணா...விரைவில் டிடி நேஷனல் சானலில்!
டெல்லி: ஓல்ட் எப்பவுமே கோல்ட்தான்...ராமாயணம்.. மகாபாரதம்...சக்திமான்...இப்படி பழைய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது டிடி நேஷனல். பாருங்க இதற்கு மக்கள் மத்தியில் அத்தனை வரவேற்பு.
சரியான நேரத்துக்கு அத்தனை பேரும் டிவி முன் உட்கார்ந்துடறாங்க. இத்தனைக்கும் இவைகள் ஹிந்தியில்தான் ஒளிபரப்பாகி வருது. மொழி பற்றி எல்லாம் மக்கள் கவலைப்படலை.
சீதா,ராமன்...பாண்டவர்கள்..கிருஷ்ணன் இவர்கள் கதாபாத்திரம்தான் இவர்கள் கண் முன் விரிகிறது. அந்த ஆவலில் மொழி கடந்து இவற்றை ரசித்து பார்க்கின்றனர்.மக்களுக்கு போனஸ் மகிழ்ச்சி தரும் வகையில் மிக விரைவில் ஸ்ரீகிருஷ்ணா சீரியலும் மறு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

பிரமாண்டம் பொருட்செலவு
டிடி நேஷனல் சானல் புராதன காலத்து கதைகளை சீரியலாக ஒளிபரப்பும்போது பிரமாண்டம், பொருட்செலவு என்று இருந்தாலும், நம்மை புராதன காலத்துக்கே அழைத்துச் செல்லும் வல்லமையும் கதைகளில் இருந்தது. இதுதான் மக்களை டிவி முன் அன்றும் இன்றும் கட்டிப்போட்டு வைக்கிறது.

நடிகர் நடிகையர் தேர்வு
டிடி நேஷனலின் மகாபாரதம் ஆகட்டும், ராமாயணம் ஆகட்டும் நடிகர் நடிகையர் தேர்வு மிக அற்புதம். இதில் சீதையாக நடித்தவர் உலகப் புகழ் அடைந்தார். அதே மாதிரி மகாபாரதத்தில் பீஷ்மர் கதாபாத்திரம் ஏற்று நடித்த நடிகராகட்டும்...இவர் மிகப் பிரபலம் ஆனார். பின்னாட்களில் இவர்தான் குழந்தைகள் விரும்பும் சக்திமான் நடிகர் ஆனார்.

ஒன்றிப்போகும் ரியாலிட்டி
டிடி நேஷனலின் இப்படியான புராதன காலத்து கதைகளை சீரியலாக பார்க்கும்போது, பார்க்கும் மக்களும் கதையோடு ஒன்றி லயித்துப் பார்க்கும் ரியாலிட்டி காட்சிகளில் நிறைந்து கிடந்தன. அதால்தான் இப்போது பார்க்கும்போதும் மக்கள் இது போன்ற புராதன சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனர்.

அடிச்சு தூள் கிளப்பும் டிடி
கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகள் இல்லாமல் ஏற்கனவே ஒளிபரப்பானவற்றை மறு ஒளிபரப்பு செய்துக்கொண்டு இருக்க. இதில் புராதன சீரியல்களை ஒளிபரப்பி மற்ற சானல்களை ஓரம்கட்டி தூள் கிளப்பி வருகிறது டிடி நேஷனல். இந்த வரிசையில் இப்போது ஸ்ரீகிருஷ்ணா சீரியலும் சேர இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications