Sri Krishna Serial: டிடி நேஷனல் சானலில் பலரையும் ரசிக்க வைக்கும் ஸ்ரீ கிருஷ்ணா!
டெல்லி: கோவிட் 19 தொற்று ஆரம்பித்த முதல் இரண்டு வாரத்தில் டிடி நேஷனல் சானல், ராமாயணத்தை ஒளிபரப்ப ஆரம்பித்தது. மக்கள் வெகு ஆர்வமாக ராமாயணம் பார்க்க ஆரம்பிக்க ரேட்டிங்கில் படு வேகமாக முன்னேறி வந்தது டிடி சானல்.
அடுத்து மகாபாரதம், விஷ்ணுபுரம் சக்திமான், சோட்டா பீம் என்று ஒளிபரப்பத் துவங்க, டிடி நேஷனல் சானல்தான் ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. அது இன்னமும் தொடர்ந்துக்கொண்டு வரும் நிலையில்தான் ஸ்ரீ கிருஷ்ணா தொடரை டிடி நேஷனல் ஒளிபரப்பத் துவங்கியது.
ஸ்ரீ கிருஷ்ணா குழந்தைகளையும் கவரும் விதத்தில், கண்ணன் வெண்ணெய் திருடி திண்பது.. மண்ணை அள்ளித் தின்பது என்று சேட்டைகளில் ஈடுபடுவது..என்று பலரையும் ஸ்ரீ கிருஷ்ணா விரும்பிப் பார்க்க வைத்து வருகிறது.

ராமாயணம் சீரியல்
இந்தியாவில் முதன் முதலில் ராமாயணம் இதிகாசத் தொடராக டிடி நேஷனல் சானலில் ஒளிபரப்பாகி வந்த போது, மக்கள் இந்த சீரியலுக்கு அடிக்ட் ஆகி இருந்தார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பாகும் சமயம், அவர்கள் எந்த வேலைகளில் ஈடுபட்டு இருந்தாலும், அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு டிவி முன் அமர்ந்து விடுவார்கள். இப்படி அப்போதே சூப்பர் ஹிட் அடித்த தொடர், இப்போது மறுபடியும் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது.

மகாபாரதம் சீரியல்
அடுத்து மகாபாரதம் சீரியல் ஒளிபரப்பாகிய போது, இதற்கு ஒரு தனிவிதமான வரவேற்பு கிடைத்தது. இதில் பீஷ்மராக நடித்த நடிகர்தான் சக்திமானில் சூப்பர் ஹீரோவாக கலக்கியவர். பஞ்சபாண்டவர்கள், கவுரவர்கள் என்று இரு தரப்பு கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக பார்த்து பார்த்து தேர்வு செய்யப்பட்டதை மக்கள் அப்போது வியப்புடன் பேசினார்கள்.

விஷ்ணுபுரா சீரியல்
விஷ்ணுபுரா சீரியல் சங்கு சக்ரதாரி விஷ்ணுவின் கதைகளை எடுத்துக் கூறும் விதமாக தயாரித்து ஒளிபரப்பப்பட்டு வந்த தொடர். மாநிலங்களில் தனியார் சானல்கள் பெருகிவிட்ட சூழலில் இந்த சீரியல் குறித்து மக்களிடம் அவ்வளவாக பேசப்படாத நிலை இருந்தது. ஆனால், இப்போது மறு ஒளிபரப்பில் இந்த தொடரும் சக்கை போடு போட்டு வருகிறது.

ஸ்ரீ கிருஷ்ணா சீரியல்
சுட்டி, குறும்பு.. விளையாட்டு இதற்கான கடவுள் என்றாலே கண்ணன்தான். இவர் பிறந்தது முதலே சதிச் செயல்களும் அரங்கேறி விடுவதால், கதையில் ஒரு பரபரப்பு.. விறுவிறுப்பு என்று இருந்தாலும், குறும்புக்காரன் கண்ணனைப் பார்க்கையில் ஒரு பரவசம் வந்து விடும். ஆனந்தம் தொற்றிக்கொள்ளும். இதனால், மற்ற அனைத்து சீரியல்களையும் புறம் தள்ளி, முன்னோக்கி வெற்றி நடை போடுகிறதாம் ஸ்ரீகிருஷ்ணா சீரியல்.












Click it and Unblock the Notifications