ஒரு சீசனில் சரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்தது போல் அசீமை வெளியேற்றுங்கள்.. ஸ்ரீபிரியா ட்வீட்
சென்னை: பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு பிக்பாஸ் சீசனில் ஒருவரை அனுப்பினீர்களே அதை போல் இந்த சீசனிலும் ஒருவரை வெளியேற்றுங்கள் என நடிகை ஸ்ரீபிரியா கோரிக்கை விடுத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், சாந்தி, சீரியல் நடிகர் அஸீம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி தொடரின் நடிகை மீனாட்சி ரக்ஷிதா, விஜே மகேஸ்வரி, அமுதவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுவாக பிக்பாஸ் சீசன் ஆரம்பித்து சில நாட்கள் கழித்துதான் சூடு பிடிக்கும். ஆனால் இந்த பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பத்திலிருந்தே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து பலர் தங்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

வாக்குவாதம்
இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் வாக்குவாதமானது உச்சகட்டத்தை அடைந்தது. கதை சொல்லும் டாஸ்க் மூலம் ப்ரீஜோனுக்கு 8 போட்டியாளர்கள் செல்ல மீதமுள்ள போட்டியாளர்கள் மத்தியில் இந்த ரேங்கிங் டாஸ்க் ஆரம்பித்தது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்கள் அடுத்த வாரம் தலைவர் பதவி போட்டிக்கு நேரடியாகச் சென்று நாமினேஷனில் இருந்தும் தப்பிக்கலாம்.

அசீம்
இதில் அசீமிற்கு கடைசி இடம் கிடைக்க ஆயிஷா, விக்ரமன், மகேஸ்வரி, போன்றவர்களை அவதூறாக பேசினார். குறிப்பாக ஆயிஷாவை வாடி, போடி என ஒருமையில் பேச ஆரம்பித்தார். இதனால் அசீமிடம் ஆயிஷா சண்டைக்கு வர இருந்தும் விடாமல் அநாகரீகமாகவே அசீம் பேசினார். அப்போது செருப்பால் அடிப்பேன் என ஆயிஷா பேசினார்.

அசீம் செயல்
அசீமின் செயலை விக்ரமன் கண்டித்த போது அவரையும் மற்ற சில போட்டியாளர்களையும் மரியாதை குறைவாகவே பேசினார். இது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுபவர்களை பிக்பாஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும். என்பது நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியை பார்ப்போரின் கோரிக்கையும் அதுவாகும்.

ட்விட்டரில் ஸ்ரீபிரியா
இதுகுறித்து நடிகை ஸ்ரீபிரியா தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் பார்த்தேன். ஏற்கெனவே ஒரு சீசனில் பெண்களை மரியாதை குறைவாக பேசியதாக ஒரு போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து அனுப்பியது போல் இந்த சீசனில் பெண்களை அவதூறாக பேசியவரையும் வெளியேற்ற வேண்டும். விக்ரமனை குறி வைப்பது போன்று தெரிகிறது என ஸ்ரீபிரியா கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது குறித்து ஸ்ரீபிரியா பாராட்டி கூறியிருந்தார். அந்த ட்வீட்டில் திரு.முத்து அவர்கள்!!!பாசம் வென்றது...தந்தை பாசமும் தாய் பாசத்திற்கு இணையானதே என தெரிவித்துள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications