குட்டை பாவாடையுடன்.. கையில் குழந்தையுடன்... ஸ்ரீரஞ்சனி கொடுத்த கலக்கல் போஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேட்சிங் மேட்சிங்.. ஸ்ரீரஞ்சனியைப் பார்த்தால் இப்படித்தாங்க சொல்லத் தோணுது.. பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஸ்ரீரஞ்சனி தன் குழந்தையுடன் மேட்சாக குட்டை பாவாடையுடன் எடுத்திருக்கும் போட்டோஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் மற்றும் கேள்வி பாதி கிண்டல் பாதி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் ஸ்ரீரஞ்சனி.

இவர் ஜோடி நம்பர் 1 என்ற ரியாலிட்டி ஷோவில் அவரும் அவருடைய கணவரான அமித் பார்க்கவும் இணைந்து டான்ஸ் ஆடி கலக்கி இருப்பார்கள்.

 பின்னணிப் பாடகி

பின்னணிப் பாடகி

ஸ்ரீரஞ்சனி நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல ஒரு பின்னணி பாடகியும் கூட. தொகுப்பாளராக பணியாற்றும்போது செமையாக என்டர்டைம் பண்ணிக் கொண்டிருந்தார். கலக்கப்போவது யாரு சீசன் 7 இவர் கலந்து கொண்டு எல்லா போட்டியாளர்களையும் ஒருவழி பண்ணியிருப்பார். இவருடைய பட பட பேச்சும் குழந்தைத்தனமான நடவடிக்கையும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து இருக்கும்.

 செம ஜாலி கேரக்டர்

செம ஜாலி கேரக்டர்

சில நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தள்ளினாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை என் மனசுக்கு புடிச்ச மாதிரி தான் நான் இருப்பேன் என்று ஜாலியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவை வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம். இவருக்கும் சீரியல் நடிகர் அமித்துக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் போய் முடிந்தது. திருமணத்திற்கு முதலில் வீட்டில் சம்மதிக்கவில்லை என்றாலும் பிறகு சம்மதித்து விட்டார்கள்.

 காதல் முதல் கல்யாணம் வரை

காதல் முதல் கல்யாணம் வரை

இவர்கள் திருமணத்திற்கு திரைத்துறையினரும் பிரபலங்களும் வந்து இருந்தனர். இவரது கணவர் அமீத் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அர்ஜுனாக நடித்திருந்தவர். மேலும் வெள்ளித்திரையிலும் இப்பொழுது முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். மிருதன் படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்திருப்பார். இவருடைய ஹைட்டுக்கும், வெயிட் க்கும் இவர் எந்த கேரக்டருக்கும் செட் ஆகிவிடுகிறார்.

 தங்கமான புருஷன்

தங்கமான புருஷன்

இவர்களுக்கு இடையில் நல்ல புரிதல் இருப்பதால் ஹாப்பியா லைப் போயிட்டு இருக்காம் இவர்களின் அன்புக்கும் அடையாளமாக இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. லாக்டோன் டைம்ல சூட்டிங் இல்லாமல் இவர்கள் இருவரும் வீட்டிலேயே இருப்பதால் ஏகப்பட்ட ரகளை தான் வந்துகிட்டு இருக்காம். அமீத் ஒரு ஜிம் பாடி அவர் உடற்பயிற்சி செய்வதில் ரொம்ப ஆர்வம் கொண்டவர் .ஆனால் நம்ம ஸ்ரீரஞ்சனி அவருக்கு நேர்மறையாக இருப்பாராம்.

 சண்டைல கிழியாத சட்டை இருக்கா!

சண்டைல கிழியாத சட்டை இருக்கா!

இப்படி வட துருவம், தென் துருவமாக இருவரும் இருப்பதால், இருவருக்கும் இடையில் நடக்கும் போராட்டங்களை இப்போ ஒரு வீடியோவை எடுத்து அவர்களின் யூடியூப் சேனலில் போட்டிருக்கிறார்கள். இதற்கு நிறைய லைக்குகளும் கமெண்ட்களும் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்கள் போட்டோ சூட்டும் நடத்தி இருக்கிறார்கள். அதில் குழந்தை மாதிரிதான் ஸ்ரீரஞ்சனி டிரஸ் போட்டிருக்கிறார்.

 அம்மாவும், பாப்பாவும் ஒரே டிரஸ்

அம்மாவும், பாப்பாவும் ஒரே டிரஸ்

இப்போ அவரோட குழந்தையும் அவரும் ஒரே போல ஒரே அளவு டிரஸ் போட்டிருக்கிறார்கள். இந்த போட்டோஸ் அவருடைய இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இது இப்போ வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பிங்க் கலரில் இவர்கள் போட்டிருக்கும் ஆடை குறித்து ரசிகர்கள் கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். அழகாக இருக்கிறீர்கள் என்றும் சிலர் உங்க பாப்பா டிரஸ்ஸை நீங்க போட்டு விட்டீர்களா என்றும் கலாய்க்கிறார்கள்.. ஆனாலும் ஸ்ரீரஞ்சனிக்கு கோபமே வரலையாம்.. அதாங்க அவரோட சூப்பர் மனசு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+