கருப்புக் கலரில்.. கன கச்சிதம்.. சொக்க வைக்கும் ஸ்ரீரஞ்சனி!
சென்னை: இப்ப எல்லாம் தொகுப்பாளர்கள் தான் சினிமா கதாநாயகிகளை விடவும் கலக்கலாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களும் நாங்களும் நடிகைகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று ரசிகர்களை கவர்வதில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
அந்த மாதிரிதான் ஸ்ரீரஞ்சினியும் கலக்கி வருகிறார் .இப்ப கொஞ்ச நாளாக அவர் தொகுப்பாளராக டிவிகளில் தோன்றாமல் இருந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார்.
இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்களில் இளைஞர்கள் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டவர். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அதகளம்தான்
தற்போது திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான பிறகு டிவி நிகழ்ச்சிகளில் இவரை காணாது இவரது ரசிகர்கள் இவரை தேடிக் கொண்டிருந்தனர். அவர்களின் ஏக்கத்தை புரிந்து கொண்டுதான் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை போட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றையும் இவர் தொடங்கி செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்.

கணவருடன் உடற்பயிற்சி
இவரும் இவரது காதல் கணவருமான நடிகர் அமித்தும் சேர்ந்து வீட்டில் செய்யும் சின்ன சின்ன வேலைகளையும் உடற்பயிற்சிகளையும் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார்கள். இவரது யூடியூப் சேனல்களுக்கும் ரசிகர்கள் பெருமளவில் கூடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் இது அவருக்கு போதுதாதாம் அதனால்தான் திடீரென்று சில நேரங்களில் ஆட்டங்களையும் போட்டு வெளியிட்டு வருவார்.

டான்ஸை காணோமே
இப்போது கொஞ்ச நாட்களாக அந்த டான்ஸ் களை காணாது இவருடைய ரசிகர்கள் தவிக்கின்றார்கள். அதனால்தான் போட்டோ ஷூட்டில் களமிறங்கி விட்டார் போல. தற்போது வித விதமான ஆடைகளோடு போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார் .அதை பார்த்து பலர் இது என்ன டிரஸ்சுக்கு விளம்பரமா நீங்களும் பொருள்கள் விக்கிறதுக்கு இன்ஸ்டாகிராமில் வந்தாச்சா என்று பலர் கலாய்ச்சாலும் இவருடைய கலக்கலான போட்டோ ஷூட்டை பார்த்து பலர் ரசித்து கொண்டும் இருக்கிறார்கள்.

செம போஸ்
அடிக்கடி இவர் குட்டை பாவாடையோடு சுற்றிக் கொண்டிருக்கும் போட்டோஸ்கள் தான் முன்னாடி வெளியிடுவார். தற்போது ஒரு குழந்தை பிறந்த பிறகும் முட்டிக்கு மேல குட்டை பாவாடையோடு தான் போட்டோ ஷூட் நடத்தி அதிலும் பிரபலமானார். இப்போ கருப்பு கலர் உடையில் இடுப்பு மடிப்பு வெளியே தெரியும்படி எடுப்பாக முன்னழகை தூக்கி காட்டி கோல்ட் அண்ட் பிளாக் கிளாசிக் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

ஐஸ் ஐஸ்
அந்த போட்டோவைப் பார்த்ததும் பலர் ரசிகர்கள் இவருக்கு உச்சுக் கொட்டி ரசித்து கமெண்ட்களாக போட்டு வருகிறார்கள். அதுலயும் பல ரசிகர்கள் ஒரு குழந்தை பிறந்த பிறகு இவ்வளவு அழகாக மறுபடியும் மாறியதற்கு ரகசியம் என்ன என்று ஐஸ் வைத்து வருகிறார்கள்.

செருப்பு பெருசா இருக்கே
அது மட்டுமல்லாமல் அந்த போட்டோவில் அவருடைய ஹைஹீல்ஸ் செருப்பை பார்த்து செருப்பு இவ்வளவு பெருசா என்று டபுள் மீனிங் கலாய்த்து வருகிறார்கள். ஆனால் அவர் யார் என்ன சொன்னாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. நல்ல பார்த்து ரசித்து போங்க என்று கலக்கலாக தான் புதுப்புது கெட்டப்புகளில் களமிறங்கி கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications