நினைச்சாலே நெஞ்சே வெடிச்சுரும் போல இருக்கு.. விம்மும் ஸ்ரீவித்யா
சென்னை: சித்ரா இருந்த இடத்தையெல்லாம் பார்க்கும்போது அவருடைய ஞாபகம்தான் வருகிறது. அதை நினைத்தாலே நெஞ்சே வெடிச்சுடும் போல இருக்கு என்று கூறியுள்ளார் சின்னத்திரை நடிகை ஸ்ரீவித்யா சங்கர்.
ஸ்ரீவித்யா சங்கர்தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அம்மா வேடத்தில் நடிப்பவர். சித்ரா மீது நிறைய அன்பு வைத்திருந்தவர். இப்போது சித்ராவின் மரணத்தால் துவண்டு போயுள்ளாராம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த சித்ராவின் இறப்பு இன்னமும் விடை தெரியாத புதிராகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.

மீனாவின் அம்மா ஸ்ரீவித்யா
இந்த நிலையில் இந்த சீரியலில் அவருடன் மீனாவின் அம்மாவாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீவித்யா முல்லையின் இறப்பிற்கு கூட செல்ல முடியவில்லை. அதற்கு காரணம் இதுதான் என்று கண்ணீர் மல்க வெளியிட்டிருக்கிறார். சித்ரா மீது நிறைய பாசமமும், அன்பும் வைத்திருந்தவர் ஸ்ரீவித்யா சங்கர். முன்னாள் டிவி செய்தி வாசிப்பாளர்தான் ஸ்ரீவித்யா.

முல்லை இல்லாத வீடு
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுத்திருந்தாலும் இந்த சீரியலை பல்வேறு ரசிகர்களும் நன்றாக ரசிப்பதற்கு காரணமே கதிர் முல்லை ஜோடி தான். இதுவரைக்கும் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த சித்ரா தற்போது உயிரோடு இல்லாமல் இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் இன்னமும் அவரை மறக்க முடியாமல் தான் தவித்து வருகிறார்கள்.

சக நடிகர்களின் சோகம்
ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய கூட நடித்த நடிகர்களும் இவரின் இறப்பை தங்கள் வீட்டில் நடந்த ஒரு துக்கமாக தான் நினைத்து கலங்கி வருகிறார்கள். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து இருந்த சித்ரா இறப்புக்கு பல்வேறு ரசிகர்களும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்ரீவித்யா சங்கர் சோகம்
அந்த மாதிரிதான் சித்ராவின் சிறப்பு பற்றி கண்ணீர் மல்க அவருடன் அதே சீரியலில் மீனாவின் அம்மாவாக நடித்த ஸ்ரீவித்யாவும் வெளியிட்டிருக்கிறார் . அவர் சித்ராவின் இறப்பிற்கு கூட என்னால் செல்ல முடியவில்லை. அதற்கு காரணம் என்னுடைய உடல்நிலை தான் அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நான் அவரைப் பார்த்தேன் .

எங்க வீட்டில் வச்சுதான்
அவரும் கதிரும் என்று எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். எங்கள் வீட்டில் வைத்துதான் அன்று சூட்டிங் நடந்தது. அதில் சந்தோசமாக கலந்துகொண்டோம். அதற்குப் பிறகு நான் அவரைப் பார்க்கவில்லை. கடைசியாக அவரின் இறப்புக்கு என்னால் செல்ல முடியவில்லை என்பதை நினைக்கும்போது இன்னமும் துக்கம் நெஞ்சை அடைக்கிறது.

ஏன் போகவில்லை
ஆனால் பலரும் இன்ஸ்டாகிராமில் எதற்காக நீங்கள் அவருடைய இறப்பிற்கு செல்லவில்லை என்று கேட்டு வருகிறார்கள். அது எனது உடல்நிலை காரணமாக தான் என்னால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் நான் இருந்தேன் ஆனால் வீட்டிற்குள் இருக்கும் பொழுதும் முழுமையாக அவரை நினைத்து தான் அழுது கொண்டே இருந்தேன் .

டார்லிங் சித்ரா
அது எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியும். ஏனென்றால் சித்ரா அந்த அளவிற்கு எல்லாருக்குமே பிடிக்கும். நாங்கள் முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பான டார்லிங் டார்லிங் என்னும் ஒரு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக நடித்து இருக்கிறோம் .அதற்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர் ஒரே சீரியலில் நடித்தாலும் அந்த அளவிற்கு நாங்கள் பார்த்ததில்லை மீனாவின் வளைகாப்பு பங்ஷனில் தான் எல்லோரும் ஒன்றாக மீட் பண்ணினோம் .

கட்டிப் பிடித்தார்
அப்போ கூட சந்தோஷமாக வந்து என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு என்னை ஞாபகம் இருக்கிறதா என்று சித்ரா தான் கேட்டார் .நான் அதான் நம்ம ஏற்கனவே ஒரு ப்ரோக்ராம் பண்ணி இருக்கலாமே அப்படி என்று சொல்லி அன்று நிறைய டிக் டாக் எல்லாம் எடுத்து வெளியிட்டோம். சித்ரா சூட்டிங் வந்த ஒரே ஒரு இடத்தில் தான் எப்போதுமே அமர்ந்திருப்பார். அந்த இடத்தை இப்ப பார்க்கும் போது நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கிறது

நெஞ்சே வெடிப்பது போல இருக்கு
அந்த அளவிற்கு அந்த இடத்தில் அவர் சிரித்த முகமாக இருந்து எல்லாரையும் கலாய்ச்சு இருப்பார் .அவருடைய இறப்பு பற்றிய பல்வேறு கருத்துகளும் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் என்னால் எதையுமே சொல்ல முடியாது ஆனால் அவர் இல்லை என்பதை நினைக்கும் போது தான் ரொம்பவே மனசு வலிக்கிறது என்று கண்ணீரோடு கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications