வயசு இறங்குற மாதிரியே இருக்கு.. அழகு மட்டும் கூடிட்டே போகுதே.. உருகும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா நடிகைகளுக்கு இருப்பது போலவே டிவி நாயகிகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து கிடக்கிறார்கள். அதிலும் அழகா இருந்துட்டா போதும்.. உடனே "கிட்னா"தான்..!

பொதுவா நம்ம மக்களுக்கு சீரியலில் ஒருவர் ஒரு கேரக்டரை நடித்த பிறகு அவங்களை அந்த கேரக்டராகவே நினைக்கிறாங்க. ஒரு நடிகர் வில்லனாக நடித்தா அவருடைய கேரக்டர் வில்லனா தான் இருக்கு மக்கள் மனதில்.

அதுவே கதாநாயகனாக நடித்தால் இவங்களை மாதிரி யாருமே கிடையாது என்று நம்பி விடுவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் திரையில் வருகிறவர்கள் இடம்பிடித்து விடுகிறார்கள். அந்த மாதிரிதான் மக்களிடம் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்திருப்பவர் ஸ்ருதிராஜ்.


முதலில் விஜய்யுடன்

முதலில் விஜய்யுடன்

ஸ்ருதி முதலில் அறிமுகமானது வெள்ளித்திரையில் தான். இவர் விஜய் கூட மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்து பல ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர். தமிழ்ல மட்டும் இல்ல தெலுங்கு மலையாளத்திலும் நடித்திருக்கிறார். வெள்ளித்திரையில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

சின்னத்திரையில் செம வரவேற்பு

சின்னத்திரையில் செம வரவேற்பு


சின்னத்திரையில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தென்றல் தொடரில் தீபக்கு ஜோடியாக துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த காலகட்டங்களில் இவருடைய பெயரை யாருக்குமே தெரியாது. துளசி அப்படிங்கிற ஒரு பேரிலேயே இவங்க வாழ்ந்துட்டு வந்தாங்க. எங்க போனாலும் ரசிகர்கள் இவரை துளசி என்றுதான் கூப்பிடுவார்கள்.

துளசி ஸ்ருதி

துளசி ஸ்ருதி

தென்றல் சீரியலில் இவருக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்புக்கு பிறகு நிறைய சின்னத்திரை சீரியல்கள் கிடைத்தது. விஜய் டிவில ஆபீஸ், ஜீ தமிழ்ல அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் சன் டிவியில் அழகு அப்படி வரிசையா சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு பிசியா இருந்தாலும் ரசிகர்களிடம் வலைத்தளங்களில் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

மொய்க்கும் ரசிகர்கள்

மொய்க்கும் ரசிகர்கள்


இவர் சூட்டிங்குக்காக சென்ற இடங்களில் எடுத்த வீடியோக்களையும் போட்டோக்களையும் இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் நீங்க இவ்வளோ வயசு ஆனாலும் உங்களோட அழகு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது எப்படின்னு கேட்டிருக்காங்க. இவருக்கு அழகுக்காக டயட்ல இருக்கிறது கொஞ்சம் கூட பிடிக்காதாம். எல்லா உணவுகளையும் விரும்பி சாப்பிடுவாராம்.

ஸ்ருதிக்கு பிடித்தது சாக்லேட்

ஸ்ருதிக்கு பிடித்தது சாக்லேட்

ஸ்ருதிக்கு சாக்லேட்னா ரொம்ப பிடிக்குமாம். ஃப்ரீ டைம் கொஞ்சம்கூட கிடைச்சாலும் பாட்டு கேட்கிறது ரொம்ப பிடிக்குமாம். எவ்வளவு பிசியா இருந்தாலும் ஷாப்பிங் போறதுன்னா ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். அவர் சீரியல்களில் ரொம்ப ஹோம்லியா குத்துவிளக்காக நடித்திருப்பார். ஆனா அவருக்கு புடவை கூட கட்ட தெரியாதாம்.

சேலை கட்ட தெரியாது

சேலை கட்ட தெரியாது

ஸ்ருதி ராஜுக்கு சேலையை விட குர்த்தா அணிவதுதான் ரொம்ப பிடிக்குமாம். எல்லாத்துக்கும் மேல அவங்களுக்கு அப்பா அம்மானா ரொம்ப பிடிக்குமாம். இன்ஸ்டாகிராமில் கூட அன்னையர் தினத்திற்கு அவங்க அம்மா கூட ஒரு அழகான வீடியோ போட்டு இருக்காங்க அது வைரல்லா பகிரப்பட்டு வருகிறது. என்னமோ தென்றல் மாதிரி வந்தார்.. மனங்களை புயல் மாதிரி கவ்விக் கொண்டார்.. இன்னும் போகாமலேயே இருக்கிறார்.. இருந்துட்டுப் போகட்டுமே.. இப்ப என்ன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+