மண்ட பத்திரம்.. கீழே விழுந்த ஸ்ருதி.. அதையும் செல்பி எடுத்து.. அடேங்கப்பா!
சென்னை: கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல கீழே விழுந்த பிறகும் அதை செல்பி எடுத்து இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார் சுருதி சண்முகப்பிரியா.
Recommended Video
இந்த போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அழகான கடற்கரையில் இப்படி அழகான பொண்ணு கீழே விழுந்துட்டாங்களே என்று ரசிகர்கள் உச்சுக் கொட்டி வருகிறார்கள்
தன்னோட காலேஜ் படிக்கும் நேரத்தில் படிப்பையும் படித்துக்கொண்டு சீரியலிலும் நடித்துக்கொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய இவர் முதல் சீரியல் ஆன நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார்.

முதல் சீரியலிலேயே கலக்கல்
இந்த சீரியலில் இவர் கோபியின் தங்கையாக அதுவும் ஒரு பியூட்டிஷியன் ஆக நடித்திருப்பவர் முதல் சீரியலிலேயே அவரது திறமையை முழுமையாக நடித்து நிரூபிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது இதை சிறிதும் குறைவில்லாமல் அழகாகவே நடித்து முடித்திருந்தார். நாதஸ்வரம் சீரியலில் இவர் நடித்ததற்கு பிறகு நிறைய வீட்டில் பெண்கள் தங்கள் மகனுக்கு இந்த மாதிரி அழகான ஒரு பொண்ணு கிடைத்தால் நல்லா இருக்கும் என யோசிக்க ஆரம்பித்தனர்.

பெண்களையும் கவர்ந்த அழகு
அந்த அளவுக்கு அழகான பெண்களையும் கவர்ந்து இருந்தார். இந்த சீரியலை தொடர்ந்து இவர் பொண்ணுஞ்சல், வாணி ராணி பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு டாப்பர் டூப்பர் ஆக அமைந்தது நாதஸ்வரம் தான். இந்த லாக்கவுட் டைம்ல இவர் ஆன்லைனில் படித்துக் கொண்டிருந்தாராம் அதனால் இவருக்கு அந்த நேரம் எளிதாக கடந்து விட்டதாக இருந்தாலும் சூட்டிங்கிற்காக இப்போ வெளியே வருவது கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.

ரொம்பவே யோசனை
இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது இவர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு ரொம்பவே யோசித்து வருகிறாராம். இப்போ சூட்டிங் எல்லாம் ஆரம்பித்த நிலையில் இவர் சூட்டிங்கில் நடிப்பதற்காக கொஞ்சமும் விருப்பமில்லாமலும் பயத்துடன் தான் வெளியே வந்து கொண்டிருக்கிறாராம் வீட்டில் இருக்கும் நேரங்களில் புதிதாக கற்றுக் கொள்வதற்காக கூகுளில் சர்ச் பண்ணி கொண்டுதான் இருப்பாராம்.

ரொம்பப் பிடிச்ச கண்ணம்மா
இவர் இப்ப நடித்துக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் இவருக்கு ரொம்பவே பிடித்ததாக இருக்கிறதாம். இந்த சீரியலில் கண்ணம்மா வாக நடித்துக் கொண்டிருப்பவர் நிஜ வாழ்க்கையிலும் இதே போல தான் அமைதியாக இருப்பார் சூட்டிங் டைமில் மட்டும் இல்லாமல் எப்பவுமே அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பாராம் ஆனால் சில நேரங்களில் நல்ல ஜாலியாக வடிவேலுவின் காமெடியை சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாராம்.

பீச் பிடிக்கும்
சூட்டிங் இப்ப ஆரம்பித்த நிலையில் இவர் வீட்டைவிட்டு வெளியே வந்திருந்தாலும் அவருக்கு பிடித்தமான இடம் கடற்கரைதானாம். முன்பு கடற்கரையிலும் அதிகமான நேரத்தை செலவிட்டு என்ஜாய் பண்ணியுள்ளார். அதுதொடர்பான போட்டோக்களை எடுத்து போட்டுள்ளார். நாதஸ்வரம் சீரியலில் புசுபுசுன்னு இருந்த இவர் இப்போ ஸ்லிம்மாக மாறி கதாநாயகிகளுக்கு போட்டி போடும் அளவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

புல் தடுக்கி பயில்வான்
அழகான கடற்கரையில் கருப்பு நிற ஜீன்ஸ் போட்டுக்கொண்டு செம்மையாக நடந்து கொண்டு போயிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் சறுக்கி கீழே விழுந்து விட்டார். இதை சற்றும் கவலைப்படாமல் அப்படியே செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் வேற பண்ணியிருக்கிறார். ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கு சொல்லவா வேணும் நெட்டிசன்கள் இவருடைய போட்டோவை பார்த்து கலாய்த்து தள்ளினாலும் இந்த போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கண்ணாடி போட்டும் கவனிக்கவில்லையா என்று பல ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
அதானே.. ஹீரோயின் விழுந்தா மட்டும் இந்த ரசிகர்களுக்கு மனசு ரொம்ப வலிக்குமே!
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications